மதுரை மாநகர காவல் துறையால், புதிய மொபைல் ஆப் மூலம், வீடுகளில் திருட்டு நடக்காமல் கண்காணிக்கும் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் ஆள் இல்லாததை பயன்படுத்தி, கொள்ளையர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், மதுரை மாநகர காவல் துறை சார்பில், புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மதுரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், வீட்டைப் பூட்டி விட்டு […]
பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தியதாக இதுவரை 3000 பேர் கைது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை துவக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் […]
சென்னை ஐஐடி வளாகத்துக்குள் பிரதமர் மோடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை துவக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அனைவரும் […]
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உலக அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து # GoBackModi ஹேஷ் டாக் ட்ரெண்டாகியது.இந்த ட்ரேண்டிங் நடந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடி இதை பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில், ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கிவைத்த நிலையில் , தமிழகத்தில் பாதுகாப்புத்துறை தொழில்பூங்கா அமைக்கப்படும் என உறுதியளித்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, […]
சென்னை சின்னமலையில் பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து தடையை மீறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பலுான்களை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மதிமுக சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சமூக ஒற்றுமையை கட்டிக்காக்கும் தமிழகத்தில் பஞ்சத்தை தலைவிரித்தாடவைக்க மத்திய அரசு திட்டமிடுவதாகக் குற்றம்சாட்டினார். மேலாண்மை வாரியம் அமைக்காமலும், […]
திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கருப்பு உடையணிந்து போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை துவக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய […]
பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில், ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கிவைத்த நிலையில் , தமிழகத்தில் பாதுகாப்புத்துறை தொழில்பூங்கா அமைக்கப்படும் என உறுதியளித்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தைக்கு சென்றார். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் முறைப்படி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய […]
சென்னையில் திமுக எம்.எல்.ஏ மா. சுப்பிரமணியன் இல்லத்தில் ராட்சத கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது. இதற்கு முன் ராணுவக் கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைக்க பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தார். இந்நிலையில் காவிரி வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக […]
பிரதமர் மோடிக்கு எதிராக சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். பின்னர் போராட்டக்காரர்கள் பறக்கவிட கொண்டு வந்த கருப்பு பலூன்களை போலீசார் ஊசி வைத்து உடைத்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்போவ தாக திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன. மேலும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் […]
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரவித்து, சென்னை கருப்புக் கொடி ஏந்தி, சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.பிரதமருக்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர் . விமானநிலைய வரவேற்புக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் சென்னையை அடுத்த திருவிடந்தையில் 14ஆம் தேதி வரை பாதுகாப்புத்துறை கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக 268 ஏக்கர் பரப்பளவில் சுமார் 670 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில் 47 நாடுகளின் ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்தியா சார்பில் டாடா, எல் அண்ட் டி, மஹிந்திரா, டி.ஆர்.டி.ஓ, எச்.ஏ.எல்., பி.இ.எல். உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன. விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு […]
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் 5000 போலீசார்,பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி , ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்த திருவிடைந்தையில் ரூ.800 கோடியில், பிரமாண்ட ராணுவ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்த கண்காட்சி அரங்குகளை திறந்து வைக்கவுள்ளார். இதன் தொடர்ச்சியாக,சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் 75வதுஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து […]
பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரம் அருகே ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக, இன்று வருவதை ஒட்டி, ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்த திருவிடந்தையில் 14ஆம் தேதி வரை பாதுகாப்புத்துறை கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக 268 ஏக்கர் பரப்பளவில் சுமார் 670 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில் 47 நாடுகளின் ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்தியா சார்பில் டாடா, எல் அண்ட் டி, மஹிந்திரா, டி.ஆர்.டி.ஓ, எச்.ஏ.எல்., பி.இ.எல். உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் […]
பாதுகாப்பு பணியில் 5000 போலீசார்,பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி , ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்த திருவிடைந்தையில் ரூ.800 கோடியில், பிரமாண்ட ராணுவ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்த கண்காட்சி அரங்குகளை திறந்து வைக்கவுள்ளார். இதன் தொடர்ச்சியாக,சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் 75வதுஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, அடையாறு புற்றுநோய் மைய வளாகத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 காவல்துறை கூடுதல் ஆணையர்கள் […]
டிடிவி தினகரன் காவிரி உரிமைக்காக பிற கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த தாங்கள் தயாரகவே இருப்பதாக கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியுள்ளார். ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தின் போது நிகழ்ந்த சம்பவம் குறித்து ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்தை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மாசுகட்டுப்பாட்டுவாரியம் மூலம் முதல் அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் பொதுமக்கள் போராட்டம் 60 வது நாளாக தொடர்ந்து வருகிறது. தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமார ரெட்டியாபுரம் பொதுமக்கள் 60 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மக்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை கடந்த 25 ந்தேதி முதல் […]
சேலம் நெத்திமேட்டில் அரசின் விலையில்லா மடிக்கணினி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை காவல் உதவி ஆய்வாளர் மிரட்டியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நெத்திமேடு பகுதியில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் ஜெயராணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் லேப்டாப் வழங்காததை கண்டித்து, +2 முடித்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், மாணவிகளை கைது செய்யப்போவதாகவும், கல்லூரியில் சேர முடியாதவாறு செய்துவிடுவதாகவும் ஒருமையில் பேசினார். இதனால், மாணவிகளுக்கும், காவல் உதவி ஆய்வாளருக்கும் கடும் […]
வருமான வரித்துறை அதிகாரிகள் நிஜாம் பாக்கு உரிமையாளருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்படும் சோதனையில் கணக்கில் வராத 3 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னை அமைந்தகரை புல்லா (Bulla) அவென்யூ பகுதியில் உள்ள நிஜாம் பாக்கு உரிமையாளர் சஃபியுல்லா ((Safiyulla))வீட்டில் 2-வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இதேபோல், சென்னை ராயப்பேட்டை வி.எம். தெருவில் அவருக்கு சொந்தமான எஸ்.கே. என்டர்பிரைசஸ் என்ற மற்றொரு நிறுவனத்திலும் சோதனை நடைபெறுகிறது. சென்னை மட்டுமின்றி மதுரை, புதுக்கோட்டை என பல இடங்களிலும் […]
நீலகிரி மாவட்டம் உதகையில், காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடையும் நிலை எற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி வரும் காட்டெருமைகள், உணவுதேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. நேற்று உதகை – குன்னூர் நெடுஞ்சாலையில், பிக்கட்டி என்ற பகுதியில் காட்டெருமைகள் சுற்றி திரிந்து கொண்டிருந்தன. இதனால், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் கவனத்துடனும்,பயத்துடனும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ராணுவத் தளவாடக் கண்காட்சி சென்னை அருகே மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராணுவ கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலாசீத்தாராமன், இணையமைச்சர் சுபாஷ்பாம்ரே, இந்திய ராணுவ தளபதி பிபின்ராவத், கடற்படை தளபதி சுனில் லம்பா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். நாளை நடைபெறும் அதிகாரப்பூர்வ துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். தமிழகத்தில் முதன்முறையாக நடத்தப்பட உள்ள இக்கண்காட்சியில் அமெரிக்கா, கனடா, […]