வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில்,மதுரையில் தீக்குளிக்க முயன்ற 5 பெண்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டிடத்திற்கு நாளை பூமி பூஜை நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார், புறப்பட தயாரானபோது, அங்கு வந்த ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். தங்களது மகன்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், கேரளாவிற்கு கூலி வேலைக்குச் சென்றவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து கொண்டுவந்துள்ளதாகவும், அவர்களை […]
இங்கிலாந்து கிறிஸ்தவ போதகர் ஜோனதான் ராபின்சன் (70) என்பவருக்கு, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்திலிருந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவருக்கு ,வள்ளியூர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வள்ளியூர் அருகே சின்னம்மாள்புரத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து `கிரேல் டிரஸ்ட்’ என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோனதான் ராபின்சன் நடத்தி வந்தார். இந்த இல்லத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுவனை சென்னை, புதுடெல்லி போன்ற இடங்களுக்கு அழைத்துச் […]
நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரை ஐ.பி.எல். போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது, காவலரை தாக்கியதாக,போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில், கடந்த 10 ஆம் தேதி பல்வேறு கட்சியினர் நடத்திய போராட்டத்தில், காவலர் ஒருவர் தாக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய மயிலாப்பூர் போலீசார், போராட்டத்தின் போது கிடைத்த வீடியோ பதிவுகளை கொண்டு, நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் பொறுப்பாளர் ஆல்பர்ட் ஸ்டாலின் என்பவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் […]
ஒரே கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவக்குழுவை அனுப்பி சிகிச்சையளிக்க கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள நல்லம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொதுவாக வெயில்காலம் தொடங்கும் போது, வெப்பநிலை மாறுபாட்டால் சின்னம்மை எனும் அம்மை நோய் பாதிப்பு ஏற்படும். இதே போன்றுதான் நல்லம்மநாயக்கன் பட்டி கிராமத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சின்னம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெருக்களெங்கும் […]
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவரை கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவுகளை வெளியிட்டதில் குளறுபடி நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்த தொடர்ச்சியான புகார்களின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஏற்கெனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் முறைகேட்டில் தொடர்புடைய பிரம்மநாயகம், குணசேகரன் ஆகிய இருவர் வெள்ளிக்கிழமையன்று […]
பத்திரப்பதிவுத்துறை சார்பில் , ஆன்லைன் பத்திரப்பதிவுக்கு முன்னர், பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களைச் சரிபார்க்கும் முறை நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பத்திரப் பதிவை மேம்படுத்துவது தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு பத்திரப்பதிவுத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பத்திரப்பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், பிப்ரவரி 12ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆன்லைன் பத்திரப்பதிவு 100 விழுக்காடு அமல்படுத்தப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் அதில் உள்ள குறைகளைக் […]
தூத்துக்குடியில் கனமழை பெய்து வரும் நிலையில், மழை பெய்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி,முதுகுளத்தூர், கீழத்தூவல், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று திடீரென கருமேகங்கள் திரண்டு மழை கொட்டியது. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக கொட்டிய மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், செல்லம்பட்டி, வெட்டிக்காடு, ஈச்சங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், பட்டுக்கோட்டை சுற்றுப்பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் பொதுஇடங்களில் நடமாட முடியாமல் போனாலும், குளுமையான சூழல் […]
விருதுநகர் மாவட்டம் அருகே சதுரகிரி மலை மிக சிறப்பு பெற்றது இந்த நிலையில் ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதிகளில் மழை பெய்து வரும் சூழ்நிலையில் சதுரகிரி மலைக்கு செல்ல பக்த்ர்களுக்கு வனத்துறை அனுமதி மறுக்கபட்டது இதனை தொடர்ந்து பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் சுந்தர மகாலிங்க கோவிலில் 3 நாட்கள் தாங்கி வழிபட்டு வருவது வழக்கம் சதுரகிரி சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது இதனால் சங்கிலி பாறை,மற்றும் மாங்கனி ஓடைகளில் மழை வெள்ளம் அதிகமாக இருந்த […]
அஞ்சுகிராமம்: முத்துகிருஷ்ணன் மகன் மணிகண்டன் இவர் அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர். இவர் அதே ஊரை சேர்ந்த 2 நண்பர்களுடன் ஒரே பைக்கில் ராஜாவூர் – குமாரபுரம் தோப்பூர் சாலையில் வந்து கொண்டு இருந்தனர். குமாரபுரம் தோப்பூர் வரும்போது பைக் நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதியது.இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆட்டோவில் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக மணிகண்டனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர் […]
சென்னை உயர்நீதிமன்றம் , மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் தம்மைப் பெற்ற தாய் என்பதை டிஎன்ஏ மாதிரி மூலம் உறுதிப்படுத்தி, அவரின் உடலை சடங்குகள் செய்வதற்கு தம்மிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்த […]
மார்த்தாண்டம்:திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து திமுக கொடியேந்தியபடி மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்பு தெரிவித்து கோஷமிட்டனர். நகர திமுக செயலாளர் பொன்.ஆசைதம்பி தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் பப்புசன் முன்னிலை வகித்தார். இதில் மேல்புறம் ஒன்றிய செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன், வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் குமார், விவசாய தொழிலாளர் மாவட்ட அமைப்பாளர் நீலகண்டன், தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் தினகர், நகர அவைத்தலைவர் மாகின், கவுன்சிலர்கள் அருள்ராஜ், பாலு உள்பட […]
பல்வேறு பகுதிகளில் தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மழை பெய்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி,முதுகுளத்தூர், கீழத்தூவல், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று திடீரென கருமேகங்கள் திரண்டு மழை கொட்டியது. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக கொட்டிய மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், செல்லம்பட்டி, வெட்டிக்காடு, ஈச்சங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், பட்டுக்கோட்டை சுற்றுப்பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் பொதுஇடங்களில் நடமாட முடியாமல் போனாலும், குளுமையான […]
அமைச்சர் கடம்பூர் ராஜூ ,ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தேவையின்றி போராட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். கோவில்பட்டி உழவர் சந்தையில் வேளாண்துறை சார்பில் கூட்டுப்பண்ணையம் முறையில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு டிராக்டர் உள்ளிட்ட வேளாண் உபகரணங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலைக்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை,ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, முற்றுகையிட முயன்ற கல்லூரி மாணவர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் உள்ள கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.இந்திய மாணவர் சங்கம் சார்பில் வ.உ.சி. கல்லூரி, காமராஜர் கல்லூரி, போப் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும், அரசு ஐ.டி.ஐ. மாணவர்களும் இன்று வகுப்புகளைப் புறக்கணித்தனர். இவர்கள் அனைவரும் நெல்லை பைபாஸ் சாலையில் ஒன்று திரண்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை […]
தலையில் கல்லைப் போட்டு சென்னை காசிமேட்டில் ரவுடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக மற்றொரு ரவுடியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காசிமேடு சிங்கார வேலர் நகரைச் சேர்ந்த பிரவீண் குமார் என்ற அஜித் நேற்றிரவு மதுபோதையில் அந்தப்பகுதியில் உள்ள சுரங்கப் பாதை வழியாகச் சென்றதாகவும், அங்கு அதேபகுதியைச் சேர்ந்த சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மது அருந்திக்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக பிரவீணுக்கும், சுரேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பிரவின் குமாரை கீழே […]
நடிகர் மன்சூர்அலிகான் உட்பட 18 பேர் சென்னை பல்லாவரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக சிறையில் அடைக்கப்பட்டனர். பிரதமர் மோடி வருகையை கண்டித்து நேற்று கறுப்புக்கொடி காட்டிய சீமான், எம்.எல்.ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கைது செய்யப்பட்டு பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை நேரில் சந்திக்கச் சென்ற நடிகர் மன்சூர் அலிகான், மனித நேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீத் ஆகியோருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களையும் காவல்துறையினர் […]
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரின் போராட்டத்திற்கான அனுமதி மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க, காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது இதுதொடர்பாக, தூத்துக்குடியை சேர்ந்த ஹென்றி தாமஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி எம்ஜிஆர் திடலில் வரும் 17 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 10 மணி வரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன […]
திருமங்கலம்: ஹேமந்த்சிங் இவரது மனைவி பிங்கி இருவரும் அஸ்ஸாம் மாநிலம், அலகுங்குடி பகுதியை சேரந்தவர். இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது.வேலை தேடி ஹேமந்த்சிங் திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டிக்கு வந்தார். இங்குள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டில் மனைவியுடன் தங்கி வேலை தேடி வந்துள்ளார். நேற்று முன்தினம் அங்குள்ள கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் ஹேமந்த்சிங் குளிக்க சென்றார். அப்போது குவாரி தண்ணீரில் மாட்டி உயிரிழந்தார். இதனை அடுத்து தகவல் தெரிந்து அங்கு விரைந்த திருமங்கலம் தாலுகா போலீசார் அவரது உடலை […]
திருமங்கலம்: விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாயில் தாலுகா அளவில் நடைபெறுகிறது. அதன்படி திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் முகாமிற்கு மண்டல துணை வட்டாட்சியர் அழகர்சாமி தலைமை வகித்தார். வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள், ‘‘சிப்காட் அமைவதாக கூறிய சிவரக்கோட்டை பகுதியில் அதிகாரிகள் சிலர் இடம் வாங்கியுள்ளனர். இதனால் விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் சிப்காட் திட்டத்தினை கொண்டு வருவார்களோ […]
மதுரை:தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்காக உச்சநீதி மன்றத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இதை கண்டித்தும், இந்த சட்ட திருத்தத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதுரையில் ஏப்.11ம் தேதி ரயில்மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.அவர்கள் அறிவித்தபடி நேற்று பெரியார் பஸ்நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன்பு வந்தனர்.ஆனால் முன்னதாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருப்பினும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சட்டதிருத்தம் கொண்டுவந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை […]