திருவள்ளூரில் சென்னையைச் சேர்ந்த பிரபல கூலிப்படைத்தலைவன் பாம் சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டார் புளியந்தோப்பு, வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன். பிரபல ரவுடி தென்னரசுவின் சகோதரர். இவரது தம்பி தென்னரசு கடந்த 2015-ம் ஆண்டு தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே கொலை செய்யப்பட்டார். சென்னையைக் கலக்கிய பிரபல தாதா காது குத்து ரவி, குன்றத்தூர் வைரம், காக்கு வீரன் போன்றோரின் நெருங்கிய கூட்டாளி. கொலை மற்றும் கொலை முயற்சிகளின் போது பாம் (வெடிகுண்டு) வீசுவதில் கைதேர்ந்தவர் என்பதால் […]
நான்காவது நாளாக , சென்னை துறைமுகத்துக்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகளின் வேலை நிறுத்தம் நீடித்து வருகிறது. வாடகை உயர்வு உள்ளிட்ட கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் மூன்றம்ச கோரிக்கைகள் சில மாற்றங்களுடன் CFS நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதனையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஒரு மாத காலமாகியும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி அவர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான்காவது நாளாக நீடிக்கும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் […]
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் […]
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்படும் போதே அதற்கு எதிராக தாம் உண்ணாவிரதம் இருந்ததாகவும், அப்போது யாரும் ஆதரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தம்மிடம் அப்போது பேரம் பேசியதாகவும் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாகர்கோவில் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான நாஞ்சில் முருகேசன், தற்போது அக்கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லை. ஒழுகினசேரியில் இவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்குகிறது. அங்குள்ள பாரை முருகேசன் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு டாஸ்மாக் நேரம் முடிந்த பின் விற்பனை நடந்ததாகவும், போலி மதுவகைகள் விற்றதாகவும் போலீசார் வடசேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், போலீஸ் சீருடை அணிந்த சிலர்தான் வாளியில் மதுவகைகளை உள்ளே கொண்டுசென்றதாகவும், இந்தக் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் […]
தூத்துக்குடி மாவட்டம் பிரைன்ட் நகர் 7வது தெருவில் உள்ள சுந்தரவல்லி திருமண மண்டபத்தில் வைத்து சோமு செம்பு அறக்கட்டளை மற்றும் கோவில்பட்டி ஆர்த்தி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகம் நடைபெற்றது. இம்முகாமிற்கு DYFI இரத்ததான கழகத்தின் தலைவர் கே.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.இதற்கு சோமுவின் தந்தை சுப்பிரமணியன் மற்றும் செம்புவின் தாயார் ராஜாத்தி முன்னிலை வகித்தனர் . இதில் மருத்துவர்கள் பி. சிவனாகரன் பொது மருத்துவர் ,பால்சாமி குழந்தை மருத்துவர்,வசந்தகுமார் குழந்தை மருத்துவர் ,பாண்டியன் கண் […]
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி நகரில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். நேதாஜி நகர், தேவர் நகர், விஸ்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் ஆங்காங்கே கருப்புக் கொடி ஏற்றி வைத்துள்ளனர். இதே போன்று பனிமயமாதா பேராலயத்தின் வளாகத்தில் அமர்ந்து, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.முத்தம்மாள் காலணி, சங்கரபேரி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன. மேலும் செய்திகளுக்கு […]
வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டுகளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை காண ஆண்டுக்கு 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிகிறார்கள்.வண்டலூர் பூங்கா நிர்வாகம் பூங்கா நிர்வாகம் ஆன்-லைன் மூலம் Live Str-e-a-m-i-ng என்னும் புதிய வசதியை தமிழ் புத்தாண்டு தினமான நேற்று முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி சிங்கம், காட்டு மாடு, மனித குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகிய 4 விலங்குகளை மட்டும் தற்போது ஆன்-லைன் மூலம் காணமுடியும் ஓரிரு நாட்களில் யானை, […]
சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய போர்க் கப்பல்களை பார்வையிட இன்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருவிடந்தை ராணுவ கண்காட்சியை ஒட்டி, சென்னை துறைமுகத்தில் சுமித்ரா, ஷயாத்ரி, கமோர்டா, ஐராவத், குக்ரி ஆகிய 5 போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்களை பொதுமக்கள் பார்வையிட இன்றே கடைசி நாளாகும். எனவே கப்பல்களை பார்வையிட பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு வருகின்றனர். தீவுத்திடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஆதார் அட்டையை […]
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சித்திரை விசு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பாபநாசத்தில் பாபநாசர் உடனுறை உலகாம்பிகை கோவில் சித்திரைவிசு திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவ முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதேபோன்று ஆழ்வார்குறிச்சியில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்று கூறப்படும் சிவசைலநாதர் திருக்கோவில் சித்திரைவிசு தேரோட்டம், ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க விமரிசையாக நடைபெற்றது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது திருத்தணி முருகன் கோயிலிலும் பக்தர்கள் 1008 பால்குடங்களுடன் ஊர்வலமாக எடுத்து சென்று திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது . இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கோவை புலியகுளத்தில் உள்ளது ஆசியாவிலே மிக பெரிய விநாயகர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடபெற்றது ஆசியாவிலேயே பெரிய விநாயகரான முந்தி விநாயகருக்கு 2 டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கனி தரிசனம் காண வேண்டும் வருட பிறப்பு நாளில் இதனால் சுவாமிக்கு கனியினால் அலங்காரம் செய்யப்பட்டது வருட துவக்க நாளில் கனியில் கண் விழித்தால் கனி போல் வாழ்வமையும் என்பது நம்பிக்கை கனியினால் அலங்காரம் செய்யப்பட்ட சுவாமியை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு […]
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள , கார் இருக்கைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. சாத்தமை கிராமத்தில் இயங்கும் பார்க் ஆலையில் இருந்து, வெளிநாடுகளுக்கு கார் இருக்கைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆலையில், கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர், ஒரு மணிநேரமாக போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த கல்யாணபுரம் சீனிவாச பெருமாள் கோவிலில் 300ஆவது ஆண்டு பிரம்மோற்சவ கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.கல்யாணபுரம் சீனிவாச பெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சி, கடந்த மாதம் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நேற்று மாலை நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையேற்றுத் துவக்கிவைத்த நிகழ்ச்சியில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த […]
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் கோவில் திருவிழா தேரோட்டத்தின்போது சேற்றில் சிக்கிய தேர் இயந்திரங்கள் கொண்டு மீட்க்கப்பட்டது. கயத்தாறில் 100 அண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கூறப்படும் அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ரதவீதியில் அண்மையில் பெய்த மழை காரணமாக உண்டான சகதியில் தேரின் சக்கரங்கள் சிக்கின. நீண்ட நேரம் போராடியும் வெளியே எடுக்க முடியாததால், ஜேசிபி, கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் , ஸ்டெர்லைட் விவகாரத்தில், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் முதல் அலகை தொடர்ந்து நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், போராட்டம் சில சமூக விரோதிகளால் திசைதிருப்பப்பட்டு விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தினால் […]
மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், போராட்டங்கள் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரன்புதூரில், மத்திய அரசின் கிராம சுயராஜ்ஜிய திட்டத்தின் கீழ், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுடன் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், இயக்குநர் பாரதிராஜா போன்றோர் மத்திய அரசின் மீது தவறான புரிதல் கொண்டிருப்பது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன்,காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் காவிரி பிரச்சினை தீயாகப் பற்றி எரிகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல தொண்டர்கள் தீக்குளித்து வருகின்றனர். சிலர் தீக்குளிப்பு முயற்சியில் மீட்கப்பட்டனர். யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது என தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் (50)கடந்த வெள்ளிக்கிழமை காலை தீக்குளித்தார். 100 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தனது […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன். கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் 52ஆவது கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது: காலதாமதம், மறதி, சோம்பல், தூக்கம் இந்த நான்கு விசயங்களை மாணவர்கள் தவிர்த்தால் அது உங்களுடைய கல்விக்கும், வளர்ச்சிக்கும் நன்றாக இருப்பது மட்டுமின்றி, உங்களால் எதையும் சாதிக்கவும் முடியும். கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தினால் அது வெற்றி, தவறவிட்டால் அது தோல்வி. இதுதான் வெற்றிக்கும், தோல்விக்கும் உள்ள வித்தியாசம். மாணவர் பருவத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் […]
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் போராட்டக்குழுவைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர் . தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வருவோரில் சிலர் வியாழக்கிழமை மடத்தூர் விலக்குப் பகுதி வழியாக ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற ஆலையின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு பேருந்தில் முன்பக்க கண்ணாடியும், ஒரு வேனின் பக்கவாட்டு கண்ணாடியும் உடைந்தன. மேலும், இந்தச் […]