உள்ளூர் செய்திகள்

கடலூரில் அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து.! அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு.!

கடலூர், விருதாச்சலத்தில் அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.  கடலூர் மாவட்டம் விருத்தசலத்தை நோக்கி ஓர் அரசு பேருந்து இன்று வந்து கொண்டிருக்கையில், கோமங்கலம் அருகே , சாலையில் ஒரு நெய் அறுவடை எந்திர வாகனம் வந்த போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. பேருந்து கவிழ்ந்ததில் பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மூலம் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு பயணிகள் […]

3 Min Read
Default Image

பழனி முருகன் கோயில் மின் நிலுவை ரயில் சேவையில் புதிய நவீன ரயில் பெட்டிகள்.! அமைச்சர் நேரில் ஆய்வு.!

பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் மின் நிலுவை ரயில் சேவையில் புதியதாக பொருத்தப்பட உள்ள நவீன பெட்டிகளை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு.  திண்டுக்கல் மாவட்டம் பழனி, பாலதண்டாயுதபாணி கோயிலில் (முருகன் கோயில்) வரும் 27ஆம் தேதி குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. கால்நட்டுதல் விழா ஆரம்பித்து தினம் தினம் ஒவ்வொரு ஆன்மீக நிகழ்வும் நடைபெற்று வருகிறது. இன்று, 89 சன்னதிகளில் கும்பாபிஷேக புனித நீர் பூஜை […]

2 Min Read
Default Image

247-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!

247-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை.  சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 8 மாதங்களைக் கடந்தும் எந்தவித மாற்றமும் இல்லாமல்  பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில்  247-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும் , டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் […]

2 Min Read
Default Image

ரூ.641 கோடி செலவில் குப்பைகளை அகற்ற புதிய திட்டம்.! தமிழக அரசு அனுமதி.!

பயோ மைனிங் முறையில் கொடுங்கையூர் குப்பைகளை அகற்ற தமிழக அரசு அனுமதிஅளித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் கொடுங்கையூர் பகுதியில் கொட்டுவது வழக்கம். அந்த குப்பைகளை அகற்ற தற்போது சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.  அதன்படி, 641 கோடி ரூபாய் செலவில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து அதனை உரமாக மாற்றி மறுசுழற்சி செய்யும்  பயோ மைனிங் முறையில் அந்த குப்பைகளை அகற்ற தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனை […]

2 Min Read
Default Image

எலக்ட்ரிக் வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் செய்தி.! தென்னக ரயில்வேயின் அசத்தல் நடவடிக்கை.!

தென்னக ரயில்வே மூலம், சென்னையில் ஒருசில ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.  பெட்ரோல் டீசல் வாகனங்களால் சுற்றுசூழல் மாசுபடுவதை குறைக்க மின்சார வாகனங்களின்  பயன்பாட்டிற்கு அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. அதற்கு வரிச்சலுகைகள் எல்லாம் அளித்து வருகிறது. தற்போது அதில் ஒரு படியாக, தென்னக ரயில்வே, மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய ரயில் நிலையங்களில் அதற்கான மேடையை அமைக்க உள்ளது. அதற்கு முதற்கட்டமாக, சென்னையில் மந்தைவெளி, சைதாப்பேட்டை ரயில் நிலையங்களில் மின்சார […]

2 Min Read
Default Image

மாதவரம் டூ சோழிங்கநல்லூர்.! சென்னை மெட்ரோவின் 3-வது வழித்தடத்திற்கு ஒப்புதல்.!

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் பணியில் மூன்றாவது வழித்தடத்திற்கு சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல்.  சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் கீழ் கிண்டி கத்திப்பாரா அருகே பட்ரோடு பகுதியில் இருந்து ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் வரையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கீழ் மூன்று வழித்தடங்களில் இந்த மெட்ரோ ரயில் சேவை செயல்பட உள்ளது. இதில் மூன்றாவது வழித்தடமாக மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் 47 கிலோ மீட்டர் தூரம் […]

3 Min Read
Default Image

தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது.! சென்னை மெட்ரோ சேவை இப்போ ஓகே.!

தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் சென்னை மெட்ரோ ரயில் சேவை துவங்கியது.  சென்னை மெட்ரோ சேவையானது தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ வழித்தடம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது அந்த தொழில்நுட்ப கோளாறு சரி செயப்பட்டு மீண்டும் சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.

2 Min Read
Default Image

245-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!

245-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை.  சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 7 மாதங்களைக் கடந்தும் எந்தவித மாற்றமும் இல்லாமல்  பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில்  245-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும் , டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் […]

2 Min Read
Default Image

நேர மாற்றம் – சென்னை மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு..!

சென்னை மெட்ரோ ரயிலில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.  சென்னை மெட்ரோ ரயிலில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை 6 நிமிட இடைவெளியிலும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கி மலை நிலையம் வரை 6 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயங்கும் என்றும், சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் வரையிலான சேவை மட்டும் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
Default Image

நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். புதன்கிழமை பாடப்பிரிவை பின்பற்றி நாளை பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
Default Image

திண்டுக்கல்லில் பயங்கரம்.! நாயை ‘நாய்’ என்று கூறியதால் முதியவர் கொலை.! கொலையாளி தலைமறைவு.!

திண்டுக்கல் பகுதியில் நாயை நாய் என்று குறிப்பிட்டதால் முதியவரை ஒருவர் கொலை செய்துள்ளார். இதில் கொலையாளி தலைமறைவாகி உள்ளார்.   திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே டேனியல் ராஜா என்பவர் செல்லமாக தன் வீட்டில் ஒரு நாய் வளர்ந்து வந்துள்ளார். அவர் வசிக்கும் பகுதியில் ராயப்பன் எனும் 65வயது முதியவரும் வசித்து வந்துள்ளார். ராயப்பன், தனது பேர குழந்தைகளிடம் அந்த பக்கம் போகாதீங்க நாய் கடித்துவிடும் என கூறியுள்ளார். அதனை கேட்ட டேனியல் ராஜா, நாங்கள் அதனை செல்லமாக […]

2 Min Read
Default Image

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து.! ஒருவர் கைது.! உரிமையாளர் மீது வழக்குப்பதிவு.! 3 பேருக்கு வலைவீச்சு.!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு ஆலை தீ விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிலாந்தர். 6 பேருக்கு பயங்கர தீ காயம் ஏற்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் முதலில் போர்மென் கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.  […]

2 Min Read
Default Image

ஈரோடு கிழக்கு தொகுதியில் துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆணை…! ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் துப்பாக்கிகள் வைத்துள்ள உரிமையாளர்கள் அவற்றை ஒப்படைக்க உத்தரவு. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தி விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரோடு […]

3 Min Read
Default Image

வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம்.! முதல்வர் அறிவிப்பு.!

பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரண தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   திண்டுக்கல் மாவட்டம் பச்சைமலையான்கோட்டை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஜெயராமன் மற்றும் அவரது மனைவி நாகராணி ஆகியோர் உயிரிழந்தனர். அதே போல, விருதுநகர் மாவட்டம் கணிஞ்சம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரவி என்பவர் உயிரிழந்துள்ளார். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை […]

2 Min Read
Default Image

கோவையில் செங்கல் சூளையில் செங்கற்களை எடுக்க உயர்நீதிமன்றம் தடை.!

கோவை தடாகம் பகுதியில் தடைவிதிக்கப்பட்ட செங்கல் சூளைகள் செங்கல்களை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.   யானைகள் வழித்தடத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கோவை தாடகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அப்பகுதியில் செங்கல் சூளைகள் செயல்பட தடை விதித்தன. அதனை மீறியும், சுங்கத்துறை அதிகாரி அனுமதியோடு செங்கல் சூளைகள் செயல்பட தொடங்கின. இதனை எதிர்த்து மீண்டும் இந்த வழக்கு […]

3 Min Read
Default Image

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் தீவிபத்து.! 6 பேர் படுகாயம்.!

விருதுநகர் மாவட்டத்தில் செயல்ப்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கணிஞ்சம்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலையில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி பலர் காயமடைந்தனர். முக்கியமாக 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் மாரீஸ்வரன், கருப்புசாமி , மாரிமுத்து , ராஜ்குமார் ஆகியோருக்கு 100 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

2 Min Read
Default Image

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் தேதி அறிவிப்பு..!

பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தி விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார் என சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் […]

3 Min Read
Default Image

அனுமதியின்றி நடந்த எருது விடும் விழாவில் துயரம்.! காளை முட்டியதில் சிறுவன், மூதாட்டி பலி.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி நடைபெற்ற எருதுகட்டு விழாவில் 11 வயது சிறுவன் காளை முட்டி உயிரிழந்தார்.  பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சில ஜல்லிக்கட்டு, எருது விடும் , மஞ்சுவிரட்டு போட்டிகள் அனுமதியின்றியும் நடைபெற்று வருகின்றன. அப்படி,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் மாதேப்பள்ளி எனும் கிராமத்தில் எருது விடும் போட்டி நடைபெற்றது.  இந்த போட்டியை காண நாடுவனபள்ளி கிராமத்திலிருந்து பவன்குமார் என்ற 11 வயது சிறுவன் பார்க்க […]

3 Min Read
Default Image

ராமஜெயம் கொலை வழக்கு.! உண்மை கண்டறியும் சோதனை தொடக்கம்.!

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.  திமுக அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனைக்கு திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் தற்போது 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது இந்த உண்மை கண்டறியும் சோதனையில் வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ் ஆகியோரிடம் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த உண்மை கண்டறியும் […]

2 Min Read
Default Image

மெரினா கடற்கரையில் ஹெலிகாப்டர் மூலம் காவல்துறையினர் எச்சரிக்கை.!

சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த சென்னை காவல்துறையினர் ஹெலிகாப்டர் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.  இன்று தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வழக்கமான கூட்டத்தை விட அதிகளவு கூட்டம் நிரம்பி வருவதால் காவல்துறையின் கட்டுப்பாடுகளும் அதிகரித்து உள்ளது. அதன்படி, சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் யாருக்கும்குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வருவதால், காவல்துறையினர் ஹெலிகாப்டர் மூலம் […]

2 Min Read
Default Image