சேலம் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் சஸ்பெண்ட் – துரைமுருகன் உத்தரவு
சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கத்தை கட்சியில் சஸ்பெண்ட் செய்து துரைமுருகன் உத்தரவு. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டி.மாணிக்கம், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளார். பட்டியலின இளைஞர் கோயிலில் நுழைந்ததை மாணிக்கம் கண்டித்த வீடியோ வெளியான நிலையில், திமுக […]