உள்ளூர் செய்திகள்

12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள்.!

சென்னையில் வரும் பிப்ரவரி 15 மற்றும் 18ஆகிய தேதிகளில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது இல்லை. வரும் பிப்ரவரி 15 மற்றும் 18ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சர்வதேச கால்பந்காட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் பிப்ரவரி 15 மற்றும் 18ஆகிய தேதிகளில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய […]

2 Min Read
Default Image

ஆன்லைன் ரம்மி – பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை..!

ஆன்லைன் ரம்மியால் மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த குணசீலன் என்ற இளைஞர் தற்கொலை.  இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளனர். இந்த ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழப்பதோடு இறுதியில் தங்களது குடும்பத்தையே இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் இதற்காக பணத்தை கடன் வாங்கியாவது விளையாட வேண்டும் என்று எண்ணத்திற்கு தள்ளப்படுகின்றனர். இறுதியில் கடன் தொல்லை தாங்க இயலாமலும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில், […]

3 Min Read
Default Image

அரசு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும்.. ஊழியர்களை சுரண்ட கூடாது.! உயர்நீதிமன்றம் வருத்தம்.! 

குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களை அரசு சுரண்டுவது இருக்கக்கூடாது. அரசு ஓர் முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும். – உயர்நீதிமன்றம்.  தமிழகத்தில் அண்மை காலமாக பல்வேறு மாவட்டங்களில் தூய்மை பணியாளர்கள் போராட்டங்கள் நடத்துவதும்,  தங்கள் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினரிடம் முன்வைத்து வருவதும் நடந்து வருகிறது. அதாவது தங்களுக்கு போதுமான ஊதியம் கிடைப்பதில்லை, அதிக வேலை பளு இருக்கிறது, வேலை நிரந்தரம் வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை தூய்மை பணியாளார்கள் முன்னிறுத்து வருகின்றனர். இதில், கோவை மாநகராட்சி தூய்மை […]

4 Min Read
Default Image

கோயில்கள் பராமரிப்புக்கு ரூ.3 கோடி நிதி உதவி – முதல்வர் மு,க.ஸ்டாலின்

88 கோயில்களின் மேம்பாட்டு பணிகளுக்காக 3 கோடி ரூபாய் நிதியுதவியை காசோலையாக கோயில் நிர்வாக குழுவினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்து உள்ளார். தமிழக அரசு  தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கோவில்களிலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் தான் ஊரக கோவில்களின் மேம்பாட்டு பணிகளுக்காக தமிழக அறநிலையத்துறை அதற்கான நிதியுதவிகளை அந்தந்த கோயில் நிர்வாக அதிகாரிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது,  தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் […]

3 Min Read
Default Image

கோயம்பேடு சந்தை வளாகத்தில் 8 ஏக்கரில் பூங்கா.! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.!

கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்தில் புதியதாக 8 ஏக்கர் பரப்பவு கொண்ட ஓர் பூங்கா அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. – அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.  இந்தியாவில் மிக பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றாக செயல்படுவது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை. கிட்டத்தட்ட தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் வரையில் இதன் வியாபர சந்தை மிக பெரியது. இந்த கோயம்பேடு சந்தையை மேம்படுத்தும் பணியில் தற்போது தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கான பணிகளை சிஎம்டிஏ அதிகாரிகள் […]

3 Min Read
Default Image

அண்ணா – எம்ஜிஆர் நினைவிட வளாகம் அறிவிக்கப்பட்ட இடுகாட்டுப்பகுதி.! தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

மெரினாவிலுள்ள பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் நினைவிட வளாகம் அறிவிக்கப்பட்ட பகுதியானது இடுகாட்டுப்பகுதி என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  மறைந்த முன்னாள் முதலவர் கலைஞர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினாவில் கடற்கரை பகுதிக்குள் கடலுக்குள் பேனா சிலை அமைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம் கூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் சார்பில் அண்மையில் சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே […]

4 Min Read
Default Image

பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்ததால் அந்த இளைஞரை உதைத்தேன்.! கிருஷ்ணகிரி எஸ்பி விளக்கம்.!

சம்பந்தப்பட்ட இளைஞர் பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.  அந்த இளைஞரை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கையில் திடீரென தப்பிக்க முயன்றார். அதனால் தான் அந்த இளைஞரை தாக்கும் சூழல் உருவானது. – கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் .  கிருஷ்ணகிரி மாவட்டம், கோபசந்திரத்தில் நேற்று எருது விடும் விழாவுக்கு அனுமதி கேட்டு, தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்  சுமார் 10கிமீ அதிகமாக போக்குவரத்து நெரிசல் […]

4 Min Read
Default Image

சென்னையில் போலி போலீஸ்.. ரூ.1.5 கோடி கொள்ளை.! பலே திருடர்களை பிடிக்க தனிப்படை.!

சென்னை, சவுகார்பேட்டை அருகில் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ஒரு கும்பல் தங்களை  போலீஸ் என பொய் கூறி 1.40 கோடி ரூபாயை வழிப்பறி செய்துள்ளனர்.  சென்னை சௌகார்பேட்டையில் நகைகள் மொத்தமாக வாங்குவதற்கு வெளிமாநில வியபாரிகள்  வருவது வழக்கமான ஒன்று. அப்படி தான் வழக்கமாக ஆந்திராவில் இருந்து வரும் சுப்பாராவ் எனும் நகை வியாபாரி அண்மையில், தனது மேலாளர் ரகுமான் என்பவருடன் நகை வாங்க சென்னை வந்துள்ளார் . சென்னை, சவுகார்பேட்டையில் நகை வாங்க 1 கோடியே 40 […]

3 Min Read
Default Image

வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.?

இன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.  – வானிலை ஆய்வு மையம் தகவல்.  வங்கக்கடலில் உருவான காற்றுழத்த தாழ்வு பகுதி நகர்ந்து இலங்கையை கடந்து தற்போது குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது . இது இன்னும் 12 மணிநேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்க உள்ளதால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் […]

2 Min Read
Default Image

13 பேர் விடுதலை விவகாரம்.! தமிழக அரசு உத்தரவில் தலையிட விரும்பவில்லை.! உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.!

மேலவளைவு ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கில் 13 பேர் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  1997ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளைவு கிராமத்தில் ஊராட்சி மன்ற தேர்தலில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வெற்றி பெற்றார். இதனை அடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனை மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்தனர். மேலும் அவரை மட்டுமல்லாமல் மேலும் 6 பெரும் கொலை செய்ய்யப்பட்டனர். இந்த வழக்கில் […]

3 Min Read
Default Image

ஓசூரில் கைது செய்யப்பட்ட இளைஞரை தாக்கும் காவல்துறை உயர் அதிகாரி.! வீடியோ வெளியானதால் பரபரப்பு.!

கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், எருது விடும் போராட்டத்தில் எடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட ஒரு இளைஞரை லத்தியால் தாக்குவது போல  ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.  கிருஷ்ணகிரி மாவட்டம், கோபசந்திரத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெற மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் மாவட்ட ஆட்சியர் எருது விடும் விழாவுக்கு அனுமதி அளிக்கவில்லை . அதனால் விழா நடக்க அனுமதி வழங்க கோரி கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊர்மக்கள் […]

4 Min Read
Default Image

போதை மறுவாழ்வு மையத்தில் 7ஆம் வகுப்பு மாணவன் மரணம்.! உரிமையாளர் உட்பட 4 பேர் உடனடி கைது.!

திருவள்ளூரில் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட 7ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த மாதம் 21ம் தேதி, போதைக்கு அடிமையான ஓர் 7ம் வகுப்பு படிக்கும் மாணவனை அவனது பெற்றோர்கள் போதை பழக்கத்தில் இருந்து மீட்க,  சோழவரம் அருகே, அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். அப்படி சேர்க்கப்பட்ட அந்த மாணவன் நேற்று முன்தினம் கழிவறையில் தவறி விழுந்து அடிபட்டதாக கூறி […]

3 Min Read
Default Image

ஜல்லிக்கட்டு நடத்த மறுத்ததால் பரபரப்பு..! போலீசார் மீது கல்வீச்சு..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மறுப்பு தெரிவித்ததால் நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சாலை மரியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து நடைபெற்ற போராட்டத்தில், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 10 க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு  நடத்த அனுமதி அளிக்குமாறு கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டனர். இந்நிலையில், ஓசூர் துணை ஆட்சியர் சரண்யா தலைமையில், அனைத்து துறை […]

7 Min Read
Default Image

கனமழை எச்சரிக்கை.! சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.!

மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை எச்சரிக்கை காரணமாக 2 நாட்களுக்கு சதுரகிரி மலைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது.  வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடந்த காரணத்தால் இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போல, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், புதுக்கோட்டை கனமழை பெய்ய […]

3 Min Read
Default Image

சென்னை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ATM..! 200க்கு பதில் 500 ரூபாய் நோட்டுகள்…!

சென்னையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை அம்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளது. வாடிக்கையாளர்களில் ஒருவர் அவருக்கு ரூ.8000 வேண்டுமென்று ஏடிஎம் இயந்திரத்தில் உள்ளிட்டுள்ளார். ஆனால் அவருக்கு இயந்திரத்திலிருந்து 20,000 ரூபாய் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த […]

3 Min Read
Default Image

அதிமுக ஆதரவு வேட்பாளரின் வெற்றி செல்லும்.! கோவை நீதிமன்றம் உத்தரவு.!

2019இல் கோவை, சின்ன தடாகம் ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி என கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.  கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் சின்ன தடாகம் ஊராட்சி மன்ற தேர்தலில் அதிமுக சார்ப்பில் சௌந்தர வடிவு மற்றும் திமுக ஆதரவுடன் சுதா ஆகியோர் போட்டியிட்டு இருந்தனர். இதில் முதலில் திமுக வேட்பாளர் சுதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பின்னர் 3 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி […]

3 Min Read
Default Image

பேனா சின்னம் விவகாரம்.! 14 துறைகளில் 2 துறைகள் மட்டுமே விளக்கம் அளித்துள்ளனர்.!

பேனா சிலை தொடர்பாக 14 துறைகளிடம் தேசிய பசுமை தீப்பாயம் பதில் விளக்கம் கேட்ட்பட்ட நிலையில் 2 துறைகள் மட்டுமே பதில் விளக்கம் அளித்துள்ளனர்.  மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே மிகப்பெரிய பேனா சிலை அமைக்கும் விவகாரம் தொடர்பாக, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை அளித்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை […]

5 Min Read
Default Image

சென்னையில் இரண்டடுக்கு பிரமாண்ட மேம்பாலம்.! மத்திய அரசு அனுமதி.!

சென்னை  துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரையில் உயர்மட்ட இரண்டடுக்கு பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரையில் சுமார் 20 கிமீ தூரத்திற்கு 2 அடுக்கு பாலம் அமைக்க அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக 5885 கோடி ரூபாய் செலவாகும் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த திட்டத்திற்கு தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மதுரவாயல் பகுதியில் இருந்து சரக்கு கொள்முதல் வாகனங்கள் எளிதாக போக்குவரத்துநெரிசல் […]

3 Min Read

விவாகரத்து வேண்டும் என்றால் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும்.! இஸ்லாமிய பெண்களுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி.!

விவாகரத்து வேண்டும் என்றால் குடும்ப நல நீதிமன்றங்களை மட்டுமே நாட வேண்டும் எனவும், இஸ்லாமிய அமைப்பு அளிக்கும் குலா போன்ற சான்றிதழ்கள் செல்லாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இஸ்லாமிய கூட்டமைப்பான ஷரியத் கவுன்சில் போன்ற கூட்டமைப்புகளில், இஸ்லாமிய தம்பதிகளின் குடும்ப பிரச்சனைகள் பேசி முடிக்கப்பட்டு, அதன் மூலம் குலா சான்றிதழ் எனப்படும் விவாகரத்து சான்றிதழையும் வழங்குவதாக கூறப்படுகிறது. அப்படி தமிழகத்தில் இஸ்லாமிய தம்பதி ஒருவருக்கு குலா சான்று 2017இல் வழங்ப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை எதிர்த்து, குலா […]

5 Min Read
Default Image

குமரி மாவட்டத்தில் பிப்.6ல் உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

தக்கலை தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி 6-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. தக்கலை செய்கு பீர்முஹம்மது ஹாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டுவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 6-ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று கன்னியாகுமரி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். அதன்படி, பிப்ரவரி 6-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.  பிப்ரவரி 6-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள உள்ளுர் விடுமுறைக்கு ஈடும் […]

2 Min Read
Default Image