உள்ளூர் செய்திகள்

காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவிகளின் உடல்களை வாங்க மறுத்து பெற்றோர்கள் சாலை மரியல்..!

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் உடல்களை வாங்க பெற்றோர்கள் மறுப்பு. கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் உயிரிழந்தவர்களின் மாணவிகளின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம் மாயனூர், காதவனை அருகே உள்ள  காவிரி ஆற்றில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த நான்கு மாணவிகள் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து மீட்பு துறையினர் உயிரிழந்த தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]

3 Min Read
Default Image

ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு..! அரசு நிதி உதவி அறிவிப்பு..!

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி அரசு அறிவித்துள்ளது.  காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகளின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலா ரூ.2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் மாயனூர், காதவனை அருகே உள்ள  காவிரி ஆற்றில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த நான்கு மாணவிகள் மூழ்கி உயிரிழந்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் […]

4 Min Read
Default Image

மனநலம் குன்றியோருக்கு பாலியல் தொல்லை.? அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகி மனைவி கைது.!

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மனநல காப்பகத்தில் எழுந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஆசிரம நிர்வாகி மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.    விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே குண்டலிபுலியூர் எனும் ஊரில் செயல்ப்பட்டு வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் 150க்கும் மேற்பட்ட மனநலம் குன்றியவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆசிரமம் செயல்ப்பட்டு வந்துள்ளளது. தற்போது இந்த ஆசிரமம் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆட்கொணர்வு மனு […]

6 Min Read
Default Image

ஊராட்சி தலைவர் தேர்தல் முடிவு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சங்கராபுரம் ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு. சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2019 -இல் சங்கராபுரம் ஊராட்சி தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி இம்முடிவை ஏற்காததால், மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த முறை பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. […]

4 Min Read
Default Image

நான் முதல்வன் திட்டம்.! 4 மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!

4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.  கள ஆய்வில் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறும் அரசு திட்டங்கள் தொடர்பாக முதல்வர் இன்றும் நாளையும் முக்கிய அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இன்று காலை சேலம் வந்ததும் ஓமலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் ஆய்வு : அதனை தொடர்ந்து சேலத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் […]

4 Min Read
Default Image

#BREAKING: கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள் உயிரிழப்பு..!

கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள் சடலமாக மீட்கப்பட்டனர். கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் பள்ளி மாணவிகள் 4 பேர் தண்ணீரில் மூழ்கினர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த நான்கு மாணவிகளும் திருச்சியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்றபோது மாயனூர் காதவனை அருகே உள்ள காவிரி ஆற்றில் இறங்கியுள்ளனர். ஆற்றில் சுழல் உள்ளதை அறியாமல் ஒரு மாணவி ஆற்றில் இறங்கியபோது நீரில் மூழ்கியுள்ளார். ஆற்றில் மூழ்கிய மாணவியை காப்பாற்ற […]

3 Min Read
Default Image

#BREAKING : கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள்..! தேடுதல் பணி தீவிரம்..!

காவிரி ஆற்றில் பள்ளி மாணவிகள் நான்கு பேர் மூழ்கினர். கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் பள்ளி மாணவிகள் 4 பேர் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற மாணவிகள் காவிரி ஆற்றில் இறங்கியபோது  இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நீரில் மூழ்கிய மாணவிகள் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவிகளையும் தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2 Min Read
Default Image

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு.! திருப்பூர் இளைஞரை பெங்களூரு அழைத்து சென்ற NIA அதிகாரிகள்.!

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு தொடர்பாக திருப்பூர் இளைஞரை என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்காக பெங்களூரு அழைத்து சென்றுள்ளனர்.  கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் ஒரு குக்கர் குண்டு வெடித்தது. இதில் பயணித்த ஷாரிக் எனும் இளைஞர் மற்றும் ஓட்டுநர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து கர்நாடக மாநில காவல்துறையினர் முதற்க்ட்ட விசாரணை செய்து இதில் பயங்கரவாத விவகாரம் இருப்பதை அறிந்து , உடனடியாக என்ஐஏ அதிகர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஊட்டி, நாகர்கோவில் […]

3 Min Read
Default Image

பெரம்பலூர் : பாஜக நிர்வாகி வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.! கார், பைக் சேதம்.!

பெரம்பலூர் மாவட்டத்தில் பாஜக நிர்வாகியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல். போலீசார் தீவிர விசாரணை.  பெரம்பலூர் மாவட்டம்  திருமந்ந்துறை சுங்க சாவடி அருகே வசித்து வருகிறார் பாஜக நிர்வாகி தடா பெரியசாமி. இவர் தனது காரை நேற்று (பிப்ரவரி 14) தனது வீட்டின் முன்புறம் நிறுத்திவிட்டு இருந்துள்ளார். அப்போது இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரது வீட்டை கற்கள் கொண்டு தாக்கியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில்  தடா பெரியசாமி வீட்டின் முன் நிற்க வைத்திருந்த […]

2 Min Read
Default Image

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைது.? மறுப்பு தெரிவித்த காவல்துறை.!

திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததாக வந்த செய்தி முழுக்க முழுக்க பொய் என திருவண்ணாமலை காவல்துறை தெரிவித்துள்ளது .  அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து ஏடிஎம்களில் கொள்ளை நடைபெற்று சுமார் 72 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அடுத்தடுத்து ஒரே நிறுவனத்தை சேர்ந்த ஏடிஎம் கொள்ளையடிக்கப்பட்டதால் பெரும் பதட்டம் உருவானது. உடனடியாக மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் கீழ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை தமிழகத்தை தாண்டியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]

4 Min Read
Default Image

நீதிமன்றம் அருகே கொலை – மேலும் 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாகதனிப்படை போலீசார் மேலும் 5 பேரிடம் விசாரணை கோவை நீதிமன்ற வளாகத்தில் 4  பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரை அரிவாளால் வெட்டி வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பல் இருவர் மீது தாக்குதல் நடத்திய நிலையில், கோகுல் என்பவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். படுகாயமடைந்த மனோஜ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். கொலை கும்பலை பிடிக்க 5 தனிப்படை […]

3 Min Read
Default Image

சென்னை, நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் தேசிய புலனாய்வு நிறுவன (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சென்னையில் 5இடங்களிலும், நெல்லை, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தேசிய புலனாய்வு நிறுவன (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாத தொடர்பு உள்ளிட்ட புகார்கள் வந்ததை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 Min Read
Default Image

கையில் தாலி.. மேள தாளங்களுடன் புறப்பட்ட இந்து மக்கள் கட்சியினர்.!

காதலர் தினத்தன்று யாரேனும் ஜோடியாக திரிவதை கண்டால் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க கையில் தாலி மற்றும் மேள தளங்களுடன் ஊர்வலம் வந்த கும்பகோணம், இந்து மக்கள் கட்சியினர்.  இன்று உலகம் முழுக்க பிப்ரவரி 14 –  காதலர் தினம் கொண்டாப்பட்டு வருகிறது. வயது வித்தியாசமின்றி பலரும் தங்கள் ஜோடிகளோடு தங்கள் காதலர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அதே போல் இந்த காதலர் தினத்திற்கு நமது நாட்டில் சில எதிர்ப்புகளும் எழுவதுண்டு. அவர்கள் காதலர் தினத்தின் […]

3 Min Read
Default Image

15 ஆயிரம் கடன் விவகாரம்.! கன்னியாகுமரியில் நண்பனை ஓட ஓட விரட்டி கொலை செய்த நண்பர்கள்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி கேட்டதற்காக தனது நண்பரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் டெம்போ ஓட்டுனராக பணியாற்றுபவர் பெலிக்ஸ், இவர் உடன் பழகிய கண்ணன் என்பவருக்கு  15 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். கடனை அவ்வப்போது திருப்பி கேட்டுள்ளார பெலிக்ஸ். ஆனால், கடன் திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார் கண்ணன்.  படுகொலை : சம்பவத்தன்று 15 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிக் கொடுப்பதாக […]

3 Min Read
Default Image

உணவு பரிமாறுவதில் தகராறு.. கோவை கல்லூரி மாணவர்களும் வடமாநில தொழிலாளர்களும் மோதல்.! 

கோவையில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே உணவு பரிமாறுவதில் தகராறு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து இருதரப்பினர் இடையே சமரசம் செய்து வைத்தனர்.    கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் பகுதி அருகே கண்ணம்பாளையம் எனும் ஊரில் செயல்ப்பட்டு வரும் தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தாங்கும் விடுதியில் நேற்று இரவு கேன்டீனில் வழக்கம் போல மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு  வந்துள்ளது. கேன்டீன் தகராறு : அந்த கேன்டீனில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் தான் […]

4 Min Read

9 கிலோ தங்க நகைகள் கொள்ளை… குற்றவாளிகளை பிடிப்பதில் தாமதம் ஏன்.? காவல் ஆணையர் விளக்கம்.!

பெரம்பூர் நகைக்கடையில் கொள்ளையடித்தது வெளிமாநில கொள்ளையர்கள் என்பதால் அவர்களை பிடிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.  கடந்த 10ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகளையும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர கற்களையும் ஒரு கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றது. நள்ளிரவில் கடையின் ஷட்டர் பகுதியை வெல்டிங் மிஷின் வைத்து அறுத்து உள்ளே புகுந்து லாக்கரையும் வெல்டிங் வைத்து அறுத்து அதன் […]

5 Min Read
Default Image

காதல் திருமணம் – கடத்தல் விவகாரம்.! இளம்பெண்ணை பெற்றோருடன் அனுப்ப காவல்துறை எதிர்ப்பு.!

கிருத்திகாவை அவரது உறவினர் வீட்டில் தங்க வைக்க தென்காசி காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதுகுறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.  தென்காசியை அடுத்த கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் வினித் என்பவரும், வல்லம் முதலாளி குடியிருப்பைச் சேர்ந்த மர அறுவை மில் அதிபர் நவீன் படேல் மகள் கிருத்திகாவும் கடந்த மாதம் 20-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தைஅடுத்து கடந்த 25ம் தேதி […]

4 Min Read
Default Image

சென்னை ஐஐடியில் ஒரு மாணவன் தற்கொலை.. இன்னோரு மாணவன் தற்கொலை முயற்சி.? போலீஸ் தீவிர விசாரணை.!

சென்னை ஐஐடியில் முதுநிலை ஆராய்ச்சி 2ஆம் ஆண்டு படித்து வந்த ஸ்ரீவன் சன்னி எனும் மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவர் ஸ்ரீவன் சன்னி எனும் மாணவர் தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அவர் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், ஐஐடியில் விடுதியில் தங்கி படித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் தற்கொலை குறித்த உறுதியான தகவல் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து கோட்டூர் […]

3 Min Read
Default Image

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்த அனைத்து ஊழியர்களுக்கும் 27-ஆம் தேதி, ஊதியத்துடன் கூடிய விடுமுறை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த  தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு கட்சியினரும், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் விடுமுறை  ஈரோடு கிழக்கு தொகுதியில் […]

3 Min Read
Default Image

பரபரப்பு : கோவை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டி படுகொலை…!

கோவை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டி படுகொலை. கோவை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பல் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் […]

2 Min Read
Default Image