உள்ளூர் செய்திகள்

நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!

நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவம் நிகழந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் என்ற கிராமத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி எடுத்து வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சந்துரு என்ற மாணவர் அம்மம்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் பயிற்சி எடுத்து வந்த சந்துரு  திடீரென விடுதியில் தூக்கிட்டு […]

2 Min Read
Default Image

மாமன்ற உறுப்பினர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி உயர்வு – சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு!

மாமன்ற உறுப்பினர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு என சென்னை பட்ஜெட்டில் அறிவிப்பு. சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த மேயர் பிரியா, சென்னை மாநகர்ச்சி பட்ஜெட்டில் 83 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதில், மாநகராட்சி உறுப்பினர்களின் மேம்பாட்டு […]

3 Min Read
Default Image

ஆணா.? பெண்ணா.? கருக்கலைப்புக்கு 30 ஆயிரம் ரூபாய்.! அதிர வைக்கும் பின்னணி தகவல்கள்.! 

தருமபுரியில் ஒரு கும்பல் சட்ட விரோதமாக கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா என கண்டறிந்து கருக்கலைப்பு செய்து வந்துள்ளது.  தருமபுரி மாவட்டத்தில் ஆண் பெண் விகித சராசரி என்பது குறைவாக இருந்து வந்துள்ளது. இதற்கான காரணத்தை கண்டறிய தருமபுரி மருத்துவத்துறை இயக்குனர் சாந்தி, இதற்கான காரணங்களை ஆராய நடவடிக்கைகளை மேற்கொண்டது. சட்டவிரோத கருக்கலைப்பு : அப்போது, தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் ரங்கம்மாள் என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு சம்பவங்கள் நடப்பதாக வெளியான தகவலின் படி, […]

3 Min Read
Default Image

அரசு பள்ளி மாணவர்கள் இதை செய்தால் போதும்.! கல்வி கட்டணத்தை சென்னை மாநகராட்சி செலுத்தும்.!

சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று குறிப்பிட்ட போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் முதலாமாண்டு கல்வி கட்டணத்தை நகராட்சி நிர்வாகம் செலுத்தும்.  சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இன்று மேயர் பிரியா சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் சென்னையில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து விவரித்தார். அதில், சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று, JEE, CLAT, NEET நுழைவு தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றால் அவர்களின் கல்லூரி படிப்பின் முதலாமாண்டு கல்வி கட்டணத்தை முழுதாக […]

2 Min Read
Default Image

பள்ளி மாணவர்களுக்கு மாலையில் ஸ்நாக்ஸ்.. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 83 புதிய அறிவிப்புகள்!

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 83 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக மேயர் பிரியா அறிவிப்பு. சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார் மேயர் பிரியா. அதில், சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் “ஸ்நாக்ஸ்” வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்கு தீனி வழங்க மாநகராட்சி […]

4 Min Read
Default Image

இன்று சென்னை பட்ஜெட்.! 70 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் மேயர் பிரியா.!

இன்று சென்னை மாமன்ற கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.  பட்ஜெட் தாக்கல் என்பது முதலில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கியது. அதன் பிறகு கடந்த வாரம் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக அந்தந்த மாமன்றங்களில் பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ளது. சென்னை மாமன்றத்தில் மேயர் பிரியா இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதில் சென்னை […]

2 Min Read
Default Image

மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை..! ரூ.1.35 கோடி டெண்டர் ஒதுக்கீடு..!

மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.35 கோடி டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  சென்னையைத் தொடர்ந்து மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கான அறிக்கை தயாரிக்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கு 4 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான செயல் திட்ட அறிக்கை தயாரிக்க ஆர்.வி. அசோசியேட் நிறுவனத்துக்கு ரூ.1.35 கோடிக்கான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் […]

2 Min Read
Default Image

#Breaking : ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை..!

திருச்சி திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் தற்கொலை.  திருச்சி திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் அதிக அளவிலான தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். ஆன்லைன் ரம்மியால் தற்கொலை  துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் ஊழியராக ரவிசங்கர் பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் ரம்மியால் அதிகளவிலான பணத்தை இழந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த ரவிசங்கர் அதிமுக அளவிலான தூக்க மாத்திரைகளை  உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏற்கனவே […]

3 Min Read
Default Image

தொடரும் யானைகள் உயிரிழப்பு..! மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பூச்சியூர் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.  கோவை பெரியநாயக்கன்பாளையம் பூச்சியூர் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானையை காட்டுக்குள் அனுப்ப முயற்சித்த போது மின் கம்பம் விழுந்து யானையின் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது. அண்மையில் தர்மபுரியில் சட்டவிரோத மின் வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில் தற்போது கோவையில் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
Default Image

நம்பவச்சி ஏமாத்திட்டாங்க.. தூக்குல போடுங்க… கொல்லப்பட்ட ஜெகனின் மனைவி கண்ணீருடன் பேட்டி.!

எங்களை நம்பவச்சி ஏமாத்திடாங்க.. இவங்க எல்லாரையும் தூக்குல போடுங்க என கிருஷ்ணகிரியில் கொல்லப்பட்ட ஜெகனின் மனைவி சரண்யா பேட்டியளித்தார்.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜெகன் என்பவரை, அவரது மனைவி சரண்யாவின் தந்தை சங்கர் உள்ளிட்ட சிலர் கே.ஆர்.பி அணை அருகே நடு ரோட்டில் வெட்டி கொலை செய்தனர். நீதிமன்றத்தில் சரண் : காதல் திருமணத்தை எதிர்த்து நடு ரோட்டில் நடந்த இந்த ஆணவ கொலை சம்பவம் தமிழகத்தையே அதிர […]

3 Min Read
Default Image

ரஜினிகாந்த் மகள் வீட்டில் திருட்டு.! மேலும் ஒருவர் கைது.! அடகு வைத்ததால் மாட்டிக்கொண்ட நபர்.!

ஐஸ்வய்ரா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய நகைகளை அடகு பெற்று கொண்டதாக மயிலாப்பூரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடுபோனதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரை அடுத்து, காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டனர். நகைகள் மீட்பு : இந்த விசாரணையை அடுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலைபார்த்த ஈஸ்வரி என்ற பெண்ணும் , ஓட்டுநர் வெங்கடேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து தங்க […]

3 Min Read
Default Image

சென்னையில் இருந்து கோவைக்கு வெறும் 6 மணிநேரம் தான்.! பிரதமர் துவங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை…

சென்னையில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து சென்னைக்கும் 6 மணி நேரத்தில் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் ரயில் சேவை ஏப்ரல் 8ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது .  நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது. இந்த ரயில் சேவை மூலம் மற்ற ரயில்சேவையை விட விரைவாக பயணம் மேற்கொள்ளலாம். தமிழகத்தில் வந்தே பாரத் ரயில் : இந்த ரயில் சேவை தற்போது சென்னை – கோவை […]

3 Min Read
Default Image

சென்னையில் ஜி20 செயற்குழு கூட்டம்.! 20 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்பு.!

ஜி20 செயற்குழு ஆலோசனை கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 பிரதான நாடுகள் கொண்ட ஜி20 மாநாட்டை இந்த வருடம் இந்தியா தலைமை ஏற்று நடத்தி வருகிறது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது . செயற்குழு கூட்டம் : அதே போல, தற்போது சென்னையிலும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜி20 நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு […]

2 Min Read
Default Image

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை.! பெண்ணின் தந்தையை தொடர்ந்து மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரண்.!

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த 2 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.  நேற்று முன்தினம் (மார்ச் 21ஆம் தேதி) மதியம் 1.30 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணை அருகே ஜெகன் எனும் 28வயது இளைஞர் ஒரு கும்பலால் நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆணவ கொலை : உயிரிழந்த ஜெகன் , சரண்யா எனும் பெண்ணை அண்மையில் பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து […]

3 Min Read
Default Image

3 பட்டாசு ஆலைகள் இயங்க தடை – காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

காஞ்சிபுரத்தில் 3 பட்டாசு ஆலைகள் தற்காலிகமாக இயங்க தடை விதித்து காஞ்சிபுர ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் அருகே குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 13-ற்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் […]

3 Min Read
Default Image

கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடிய 6 சிறுவர்கள்.! காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை…

கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர்.  18க்கு வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களை அரசு கூர்நோக்கு இல்லமான சிறுவர் சீர்திருத்த பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க படுவர். தப்பியோட்டம் : கடலூர் மாவட்டம் கோண்டூர் பகுதியில் செயல்ப்பட்டு வரும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு முகாமில் இருந்த சிறுவர்கள், நேற்று இரவு தப்பிவிட்டனர். ரோந்து பணி : 6 சிறுவர்கள் கூர்நோக்கு […]

3 Min Read
Default Image

சென்னையில் நாளை அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்..!

ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்தக் கோரிசென்னையில் நாளை அரசு மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.  சென்னையில் நாளை அரசு மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்தக் கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளானார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் வைத்து, அரசு மருத்துவர்கள் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

2 Min Read
Default Image

பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களிடம் அமைச்சர் நலம் விசாரிப்பு..!

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நலம் விசாரிப்பு. காஞ்சிபுரம் அருகே குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். முன்னதாக இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருந்த நிலையில் தற்பொழுது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்த […]

3 Min Read
Default Image

#BREAKING: சென்னையில் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் பிளாக்கில் விற்பனை..! 12 பேர் கைது..!

சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் பிளாக்கில் விற்பனை. சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. தற்பொழுது இந்த ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ரூ.1,500 மதிப்புள்ள டிக்கெட்டை ரூ.10,000 திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 டிக்கெட்கள் பிளாக்கில் விற்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

2 Min Read
Default Image

#Breaking : காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..! பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு..!

காஞ்சிபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு. காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 15 திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பட்டாசு ஆலையில் மீட்கும் பணியிலும் […]

2 Min Read
Default Image