நாளை SSLC தேர்வு.. நெல்லையில் 91 மையங்களில் தேர்வெழுதும் 22 ஆயிரம் மாணவர்கள்!
நாளை எஸ்எஸ்சி தேர்வு தொடங்க உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் 22 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. மொத்தம் 12,639 பள்ளிகளை சேர்ந்த 9,76,089 மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத்தவுள்ளனர். நாளை தொடங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழ்நாட்டில் 4,66,765 மாணவர்கள், 4,55,960 மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். புதுச்சேரியில் […]