உள்ளூர் செய்திகள்

சென்னையில் கே.பாலசந்தர் நினைவு ‘சதுக்கம்’.. மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.!!

மறைந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் நினைவாக சென்னையில் சதுக்கம் என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம். சென்னை மாநகராட்சியின் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது.  இந்த கூட்டத்தில் மறைந்த பிரபல இயக்குனரான கே.பாலச்சந்தர் நினைவாக,  சென்னை ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலையில் உள்ள காவிரி மருத்துவமனை அருகில் 1,000 சதுர அடி அளவில் உள்ள போக்குவரத்து தீவு இடத்திற்கு கே.பாலச்சந்தர் சதுக்கம் என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற […]

3 Min Read
KBalachander

இன்று கோலாகலமாக தொடங்குகிறது சென்னை திருவிழா!

சென்னை திருவிழா, சர்வதேச கைத்தறி, கைவினை பொருட்கள் திருவிழா இன்று சென்னை தீவுத்திடலில் தொடக்கம். சென்னை தீவுத்திடலில், தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் நடைபெறும் சர்வதேச கைத்தறி, கைவினை பொருள் மற்றும் உணவு திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. அதன்படி, இன்று முதல் மே 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ள திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மே 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ள சென்னை திருவிழாவிற்கு நுழைவு கட்டணம் ரூ.10 வசூலிக்கப்படும் […]

3 Min Read
chennaifestival2023

சென்னை அருகே பயங்கரம்! நாட்டு வெடிகுண்டு வீசி பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை.!

சென்னை அருகே ஊராட்சி மன்ற தலைவரும், பாஜக நிர்வாகியுமான சங்கர்  என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.  சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே, வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜக எஸ்சி/எஸ்டி பிரிவு நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்த பிபிஜி.சங்கர் எனும் நபரை நேற்று இரவு மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்துள்ளனர். பிபிஜி.சங்கர் நேற்று இரவு சென்னையில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது, பூந்தமல்லி அடுத்த நாசரேத்பேட்டை […]

3 Min Read
Murder

இன்றைய (28.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!

342-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. ஆனால், தற்போதைய நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக  சரிந்திருக்கிறது. […]

3 Min Read
petrol price

கிணற்றில் இரண்டு குழந்தைகளை தள்ளிவிட்டு தாயும் தற்கொலை..!

ராணிப்பேட்டையில் குடும்ப தகராறில் தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்.  ராணிப்பேட்டை மாவட்டம் மேல்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் அதே பகுதியில் சலூன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி ரேணுகா அந்த கிராமத்தில், கிராமத்தில் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். குடும்ப தகராறில் தற்கொலை  இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த ரேணுகா அங்கன்வாடி […]

3 Min Read
womendeath

சென்னையில் விசிக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை!

சென்னை கே.கே. நகரில் விசிக நிர்வாகி தேநீர் கடைக்கு சென்ற போது மர்ம நபர்களால் வெட்டி கொலை. சென்னை கே.கே. நகரில் BSNL அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் (எ) குட்டி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இன்று அதிகாலை தேநீர் கடைக்கு விசிக நிர்வாகி சென்ற போது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த 2 நபர்கள் ரமேஷை சரமாரியாக வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடியதாக தகவல் […]

3 Min Read
chennai murder

சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்ட விஏஓ..! நேரில் அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர்..!

தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு பிறகு கிராமத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் லூர்து பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அஞ்சலி.  தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் 55 வயதான லூர்து பிரான்சிசை நேற்று அலுவலகத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில், படுகாயமடைந்த விஏஓ லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஏஓ கொலை  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் […]

4 Min Read
Default Image

அமைச்சருடனான பேச்சுவார்தையில் சுமூக முடிவு.! அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் வாபஸ்.!

தமிழகம் முழுவதிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.  தமிழகம் முழுவதும் நேற்று முதல் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர். ஊதிய உயர்வு, கோடை விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கத்தின் நேற்று மாலை முதல் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த தொடங்கினர். இந்த போராட்டமானது, நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து இன்று காலையிலும் தொடங்கியது. போராட்டம்  […]

2 Min Read
Default Image

தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு.! தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது.!

தூத்துக்குடி விஏஓ வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இன்னொரு குற்றவாளி மாரிமுத்து இன்று கைது செய்யப்பட்டார்.  தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் நேற்று கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த […]

3 Min Read
Default Image

கள ஆய்வில் முதலமைச்சர்.! இன்று விழுப்புரம் வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்றும், நாளையும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு கள ஆய்வு செய்ய உள்ளார். இந்நிலையில், இன்று விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்  குறித்து ஆய்வு செய்ய நேரில் வருகை தர இருக்கிறார். அரசின் […]

3 Min Read
Default Image

இன்றைய (26.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!

340-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 157.00 அல்லது 2.42% குறைந்து ரூ.6,330 ஆக […]

2 Min Read
Default Image

விஏஓ வெட்டிக்கொலை – குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் : ஆட்சியர் செந்தில்

விஏஓ வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கி தரப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் உறுதி.  தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர். விஏஓ வெட்டிக்கொலை இதனையடுத்து, படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக […]

3 Min Read
Default Image

தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலருக்கு அரிவாள் வெட்டு.! மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு.!

தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலரை 2 நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டியுள்ளனர். படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். வெட்டுப்பட்ட பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல் பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்து இருந்தார் […]

2 Min Read
Default Image

மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே 5ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  புகழ்பெற்ற மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம் முகூர்த்த கால்நட்டுதல் விழாவோடு கோலாகலமாக துவங்கியது. வரும் மே மாதம் 5 ஆம் தேதி பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளாமான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள். இந்த கள்ளழகர் திருவிழாவை முன்னிட்டு […]

2 Min Read
Default Image

இன்றைய (25.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!

339-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 69.00 அல்லது 1.08% குறைந்து ரூ.6,467 ஆக […]

2 Min Read
Default Image

கையில் பாம்புடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்..!

நெல்லையில் கையில் பாம்புடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  நெல்லையில் கையில் பாம்புடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்ணால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பசுமை வீடு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டிற்கு 3 ஆண்டுகளாக மின்இணைப்பு வழங்கவில்லை என அப்பெண் புகார் அளித்துள்ளார். மின் இணைப்பு இல்லாததால் வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளது.  இதனையடுத்து அப்பெண் வீட்டிற்குள் புகுந்த பாம்பை கையில் எடுத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். […]

2 Min Read
Default Image

கோலாகலமாக தொடங்கிய ‘சித்திரை திருவிழா’… மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குவிந்த பக்தர்கள்.!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. புகழ்பெற்ற கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை போலவே மதுரை சித்திரை திருவிழாவும் உலகளவில் மிகவும் பிரபலமானது. இந்த திருவிழாவை காண்பதற்காக பல மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை தருவார்கள். வருடம் தோறும் இந்த சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் 2023 (இன்று) ஏப்ரல் 23- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மே 08 ஆம் தேதி […]

5 Min Read
Default Image

இன்றைய (23.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!

337-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 133.00 அல்லது 1.99% குறைந்து ரூ.6,546 ஆக […]

2 Min Read
Default Image

இன்றைய (22.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!

336-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 7.00 அல்லது 0.11% குறைந்து ரூ.6,379 ஆக […]

2 Min Read
Default Image

சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை!

சென்னை ஐஐடியில் மேலும் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்படுகிறது. பி.டெக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் கேதார் சுரேஷ் என்பவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விடுதியில் இருந்து அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவர் தற்கொலை குறித்து கோட்டூர்புரம் போலீசார் தீவிர விசாரணை […]

2 Min Read
Default Image