உள்ளூர் செய்திகள்

ஹிஜாப் அணிந்திருந்த பெண் மருத்துவருக்கு மிரட்டல்.? பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு.!

ஹிஜாப் அணிந்திருந்த அரசு பெண் மருத்துவருக்கு மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் பணியில் இருந்த இஸ்லாமிய பெண் மருத்துவர் ஒருவர் ஹிஜாப் அணிந்து இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் என்பவர் , அந்த பெண் மருத்துவரிடம் ஏன் மருத்துவர் உடை அணியாமல் , ஹிஜாப் அணிந்து இருக்குறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும், மருத்துவரின் அனுமதியின்றி […]

3 Min Read
Thiruthuraipoondi Govt hospital

டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி.! கொள்ளையனை சுட்டு பிடித்த காவலர்கள்.!

கூடலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவலர்கள்.  நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, குந்தலடி எனும் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையில் இன்று அதிகாலை இரண்டு கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை கண்ட காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது இருவரும் தப்பியோடியதாக தெரிகிறது. கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட காவலர்களை கத்தியால் தாக்க கொள்ளையர்கள் முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து தற்காப்புக்காக காவலர்கள் […]

3 Min Read
Gun Shot

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக வைத்தியநாதன் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெறுவதால், புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ராஜா பதவி வகித்து வந்தார். ஏற்கனவே, தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த […]

2 Min Read
SVaidyanathan

திருவண்ணாமலை – சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட்!

திருவண்ணாமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய புகாரில் 5 காவலர்கள் பணியிடை நீக்கம். திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய புகாரில் 5 காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்து அம்மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கண்ணமங்கலம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அருள்நாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், சேத்துப்பட்டு காவல் நிலைய காவலர் ஹரிஹர ராஜநாராயணன், செங்கம் காவல் […]

2 Min Read
SI suspended

விஷச் சாராய வழக்கு – 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி!

மரக்காணம் விஷச் சாராய வழக்கில் சிறையில் உள்ள 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி. விழுப்புரம் மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்து 14 பேர் பலியான விவகாரத்தில், 12 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதில், மரக்காணத்தை சேர்ந்த அமரன், ரவி, முத்து ஆறுமுகம், ரசாயன நிறுவன உரிமையாளர் இளையநம்பி உட்பட 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த 12 பேரில் மதன் என்பவர் […]

3 Min Read
CBCID

தங்கம் விலை உயர்வு..! சவரன் ரூ.45,000-த்தைக் கடந்து விற்பனை..!

உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் கவர்ச்சிமிக்க, மற்றும் ஜொலிக்கக்கூடிய பொருட்கள் என்றாளே மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த வரிசையில் வைரம் போன்ற விலையுயர்ந்த பொருள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் விரும்புவது தங்கம் தான். தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்தவகையில், இன்று தங்கம் விலை ஏற்றத்தைக் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் […]

3 Min Read
Gold price

கன்னியாகுமரியில் நவீன சொகுசு படகு சேவை தொடக்கம்!

ரூ.8.2 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளூர் என்ற பெயரில் 2 நவீன சொகுசு படகுகள் இயக்கப்படுகின்றன.  கன்னியாகுமரியில் இருந்து வட்டுக்கோட்டை வரையிலான 6 கடல் மைல் தொலைவுக்கு நவீன சொகுசு படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. நவீன சொகுசு படகு சேவையை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மனோ தங்கராஜன் தொடங்கி வைத்தனர். ரூ.8.2 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளூர் என்ற பெயரில் 2 நவீன சொகுசு படகுகள் இயக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நவீன சொகுசு படகுகளையும் […]

3 Min Read
Modern Luxury Boat

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் இருவர் உயிரிழப்பு..!

தர்மபுரியில் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் இருவர் உயிரிழப்பு.  தர்மபுரி  மாவட்டம்,மொரப்பூர் அருகே சி. பள்ளிப்பட்டியில் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வானவேடிக்கையின் போது பட்டாசு மின்கம்பத்தில் பட்டு தேர் வந்த வாகனத்தில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.  விபத்தில், சிறுவன் ஆகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துழலர். ஓட்டுநர் ராகவேந்திரன்  மருத்துவமனைக்கு அழைத்து நிலையில், அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

2 Min Read
Death

நெல்லை விளையாட்டு மைதான விபத்து – மாநகராட்சி ஆணையர் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்..!

விளையாட்டு மைதானத்தின் கட்டமைப்பை மேற்கொண்ட கட்டுமான நிறுவனத்திற்கு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி நோட்டீஸ். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட வ.உ.சி விளையாட்டு மைதான மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில், விபத்து ஏற்பட்ட இடத்தில மாநகராட்சி ஆணையாளர் சிவ.கிருஷ்ணமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு செய்த பின் […]

4 Min Read
voc playground

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக இன்று 4 பேர் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கின்றனர். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கவுள்ளனர். அதன்படி, ஆர்.சக்திவேல், கே.ராஜசேகர், பி.தனபால், சின்னசாமி குமரப்பன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவியேற்கவுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா புதிய நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். கடந்த மார்ச் மாதம், கொலிஜியம் ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க […]

3 Min Read
madras high court

கத்தியின்றி , ரத்தமின்றி நவீன அறுவை சிகிச்சை.! சேலம் மருத்துவர்கள் சாதனை.!

கத்தியின்றி, ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்து சேலம் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.  கத்தியின்றி, ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்து சேலம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவர்கள் சாதனை படதைத்துள்ளனர். இதுகுறித்து தலைமை மருத்துவர்கள் கூறுகையில் கடந்த, மே, 13ஆம் தேதி புதிய அறுவை சிகிச்சை 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் முன்னிலையில் (இணையவழி) 6 அறுவை சிகிச்சைகள், கத்தியின்றி, ரத்தமின்றி, வலியின்றி மேற்கொள்ளப்பட்டது. என்று தெரிவித்தனர். மேலும், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. […]

3 Min Read
Salem govt hospital

நெல்லை விளையாட்டு மைதானத்தில் மேற்கூரை இடிந்து விபத்து..! மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!

நெல்லை விளையாட்டு மைதானத்தில் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்ட நிலையில், மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட வ.உ.சி விளையாட்டு மைதான மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில், விபத்து ஏற்பட்ட இடத்தில மாநகராட்சி ஆணையாளர் சிவ.கிருஷ்ணமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு செய்த பின் மாநகராட்சி […]

3 Min Read
voc playground

#BREAKING: 41 மாணவிகள் பாலியல் புகார்..! மதுரை அரசு மருத்துவமனை துணை பேராசிரியர் சஸ்பெண்ட்..!

மதுரை அரசு மருத்துவமனை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சையது தாகிர் உசேன் என்பவர் மயக்கவியல் துறை துணை பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர், தனது மயக்கவியல் வகுப்பின் பொழுது மாணவிகளிடம் தகாத முறையில் பேசியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் 41 மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து, மாணவிகள் அளித்த புகாரின் பேரில் விசாகா கமிட்டி அமைத்து முறைப்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. […]

3 Min Read
Associate Professor suspended

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள்.. பயணசீட்டு கட்டாயம் – சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற வேண்டும் என நிர்வாகம் அறிவிப்பு. சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகளை கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற வேண்டும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டு  ஐபிஎல் தொடரை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து வழங்கி வந்தது. அதன்படி, ஐ.பி.எல் […]

5 Min Read
chennai metro

தஞ்சையில் மது அருந்தி 2 பேர் உயிரிழந்த சம்பவம் – இருவர் கைது.!

தஞ்சையில் நேற்று சட்டவிரோதமாக 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே திறக்கப்பட்ட டாஸ்மாக்கில் மது அருந்திய இருவர் உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கியது. இது குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில், சயனைடு கலந்த மதுவை அருந்தியதால் இருவரும் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்தில் பார் உரிமையாளர் செந்தில் பழனிவேல் மற்றும் பார் ஊழியர் காமராஜ் ஆகியோரை நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் […]

2 Min Read
Alcohol death

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – இன்று 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி.!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று தமிழகத்தையே கண்ணீர் கடலில் மூழ்கடித்த நாள் என்றே சொல்லலாம். ஆம்…. ஸ்டெர்லைட்க்கு எதிராக 100 நாட்கள் அமைதியாக போராடிய அப்பாவி மக்களை ஓட ஓட துப்பாக்கியால் சுட்டுக்கொன்று இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகின்றன. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 மே 22 ஆம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 […]

2 Min Read
thoothukudi Sterlite

இன்றைய (22.5.2023) பெட்ரோல், டீசல் விலை..!

366-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 35 அல்லது […]

3 Min Read
Today Petrol Rate

ஒரு வருடம் நிறைவு..! பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லை..!

365-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 35 அல்லது […]

3 Min Read
Petrol pump

இந்த மாவட்டத்தில் வரும் 22- ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு – ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 22ஆம் தேதி மூட மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவு.  கடந்த 2018-ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் வரும் 22-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,  தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 22ஆம் தேதி மூட மாவட்ட ஆட்சியர் செந்தில் […]

2 Min Read
TASMAC

சென்னையில் 23 பேர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை – காவல் ஆணையர்

நடப்பாண்டில் இதுவரை 181 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நடப்பாண்டில் இதுவரை 181 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற செயல்கள் நடக்காமல் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். சட்டவிரோத செயலிகளில் ஈடுபடும் நபர்களை […]

2 Min Read
Shankar Jiwal