உள்ளூர் செய்திகள்

36 கிலோ புற்றுநோய் கட்டி.! அறுவை சிகிச்சை மூலம் பெண்ணின் உயிரை காப்பாற்றிய நீலகிரி மருத்துவர்கள்.!

36 கிலோ புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி பெண்ணின் உயிரை நீலகிரி மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.  நீலகிரியை சேர்ந்த தமிழ்செல்வி எனும் 45வயது பெண்மணி கர்ப்பப்பையில் புற்றுநோய் கட்டி வளர்ந்துள்ளது. இந்த கட்டியை நீலகிரி மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி அந்த பெண்னின் உயிரை காப்பாற்றியுள்ளனர். சுமார் 36 கிலோ எடையுள்ள அந்த புற்றுநோய் கட்டியை நீலகிரி மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர், கிட்டத்தட்ட அந்த பெண்ணின் எடையில் பாதி எடை புற்றுநோய் கட்டி இருந்துள்ளது. மருத்துவர்கள் நான்கரை […]

2 Min Read
doctors

சென்னையில் மீண்டும் தீ விபத்து.! அரசு அலுவலகத்தில் 2 பேருந்துகள் 2 கார்கள் எரிந்து நாசம்.!

சென்னை ஆர்.டி.ஓ அரசு அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 4 வாகனங்கள் எரிந்தன.  சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து அலுவலகமான RTO அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ காரணமாக அங்கு சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்து அறிந்து உடனடியாக 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் 30 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த்தனர். ஆனால் அதற்குள் RTO […]

3 Min Read
fire

சென்னையில் பரபரப்பு.! அதிகாலையில் வணிக வளாகத்தில் தீ விபத்து.!

சென்னை சவுகார்பேட்டை வணிக வளாகத்தில் அதிகாலையில்  தீ விபத்து ஏற்பட்டது.  சென்னை சவுகார்ப்ட்டையில் முக்கிய வீதியில் அமைந்துள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ராயபுரம், எழும்பூர், அசோக் நகர் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதிகாலை நேரம் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த […]

2 Min Read
Fire accident

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது.!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட ஆசனூர், தாளவாடி, கடம்பூர், பவானிசாகர் உள்ளிட்ட 10 வனசரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. சுமார் 300க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ள இந்த கணக்கெடுப்பு பணி, 6 நாட்கள் நடக்க உள்ளது. ஏற்கனவே, கடந்த மே மாதம் 17ம் தேதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி  நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

2 Min Read
Sathyamangalam ProjectTiger

இன்று சந்தனக்கூடு திருவிழா.! இராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை.!

ராமநாதபுரம், ஏர்வாடி தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று மாலை மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 13-ந்தேதி (நாளை) அதிகாலை தர்காவுக்கு சந்தனக்கூடு வந்தடையும். இதற்காக மே 31ஆம் தேதி கொடியேற்றம் நடந்தது. இதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பார்கள். விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருடா வருடம் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்துக்கு […]

3 Min Read
Ramanathapuram

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சென்னை அப்போலோவில் அனுமதி.!

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா கால்வலி காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஆந்திர மாநில நகரி தொகுதி எம்எல்ஏவாகவும் , சுற்றுலா மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராகவும் உள்ள நடிகை ரோஜா தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கால் வலி ஏற்பட்டு அதன் காரணமாக மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

2 Min Read
Minister Roja

கொளுத்திய வெயிலில் சூறைக்காற்றுடன் ‘கனமழை’..மகிழ்ச்சியில் ‘வேலூர்’ மக்கள்.!!

வேலூர் மாவட்டத்தில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காலை முதல் 107 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென கனமழை பெய்துள்ளதால் மக்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர். Vellore Rain Dairies #vellore #vit pic.twitter.com/DSesYdziKk — Kumar Aryan (@kraryan13) June 9, 2023 வேலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் வீசியதால், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.மேலும் வேலூரில் சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக […]

3 Min Read
Vellore Rain

தஞ்சை மாவட்ட நீர்நிலை தூர்வாரும் பணி.! களத்தில் இறங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.!

டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகளை தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார்.  தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடிக்காக, வரும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இதனை ஒட்டி, காவிரி நீர் பாயும் வழித்தடங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 90 கோடி ரூபாய் செலவீட்டில், காவிரி கரையோரங்களில் சுமார் 1080 கிமீ தொலைவில் 12 மாவட்டங்களில் தூர்வாறும் பணியானது, கடந்த மாதம் (மே) 27இல் தொடங்கியது. […]

2 Min Read
MK Stalin

நீலகிரியில் மலை ரயில் தடம் புரண்டு விபத்து!

மலை ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு. நீலகிரி: குன்னுர் – மேட்டுப்பாளையம் இடையே ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.  குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட மலை ரயிலில், கடைசி பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகியதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மலை ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு சூழலால் ஏற்பட்டுள்ளது. பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். […]

2 Min Read
Nilgiris train

தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு அபராதம் விதிப்பு..!

தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அபராதம் விதித்து உத்தரவு.  கடலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகர் திடீரென்று கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையில் தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், முறையான இருக்காய் வசதி இல்லாத வணிக நிறுவனம் உட்பட 16 கடைகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக […]

2 Min Read
fine

கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட.விவகாரம் ! விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவிலுக்கு அதிகாரிகள் சீல்.!

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் மேல்பாதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் உள்ளே பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பட்டியலின மக்கள் புகார் அளித்து இருந்தனர். மேலும், கோவில் உள்ளே செல்ல முயன்ற பட்டியலினத்தவர்களை மாற்று சமூகத்தினர் தாக்கியதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து , மாவட்ட ஆட்சியர் பழனி இரு தரப்பு மக்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினார். […]

3 Min Read
droupathi amman koil

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்.!

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

4 Min Read
rain tn

இதற்கு தள்ளுபடி! சென்னை மெட்ரோ நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்த கட்டணத்தில் தள்ளுபடி என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு. சென்னை மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், வரும் 14-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு, மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பயணிகள் தங்களது வாகனங்களை அதே நாளில் திரும்ப எடுக்கும் போது வாகன நிறுத்தம் கட்டணத்தில் கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. மாதாந்திர வாகன நிறுத்தம் அட்டையை […]

3 Min Read
Chennai Metro

தமிழக எல்லையில் அரிசி கொம்பன்.! சிறப்பு அமர்வு விசாரிக்கும்.! மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

அரிசிக்கொம்பன் யானை பற்றிய வழக்கை சிறப்பு அமர்வு விசாரிக்கும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . தேனி , கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி, பொதுமக்களை தொந்தரவு செய்து வந்த அரிசி கொம்பன் யானையை தமிழக வனத்துறையினர் மயக்க மருந்து கொடுத்து பிடித்துள்ளனர். அதனை நெல்லை மாவட்டம் முண்டாந்துறை புலிகள் காப்பக பகுதி கோதையாறு வனபகுதியில் விட ஏற்பாடு செய்துள்ளனர். இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த நபர் […]

3 Min Read

என்.ஐ.ஆர்.எப் 2023 விருது பட்டியல்; சிறந்த உயர்கல்வி நிறுவனம் – ஐஐடி மெட்ராஸ்க்கு முதலிடம்!

நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களில் தலைச்சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம். மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் வெளியிடப்படும் என்.ஐ.ஆர்.எப் 2023 விருது பட்டியலில், இந்தியாவின் உயர்கல்வியில் சிறந்த கல்வி நிறுவனம் என்று ஐஐடி மெட்ராஸ்க்கு ஒட்டுமொத்த பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை ஐஐடி 5-ஆவது முறையாக, நாட்டிலேயே சிறந்த உயர்கல்வி நிறுவனமாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை முதலிடம், சண்டிகர் பிக்மர் […]

3 Min Read
IITMADRAS

திருச்சி லால்குடி தண்டவாளத்தில் லாரி டயர்கள்.! ரயிலை கவிழ்க்க சதியா.?

திருச்சி மாவட்டம் லால்குடியில் தண்டவாளத்தில் லாரி டயர்கள் வைத்த மர்ம நபர்கள். காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளாடி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கடந்த ஜூன் 1ஆம் இரவு லாரி டயர்கள் சில மர்ம நபர்களால் அங்கே வைக்கப்பட்டுளள்ன. அப்போது அந்தவழியாக வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சில பெட்டிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ரயில் 40 நிமிடங்கள் தாமதமாக சென்றது. இத சம்பவத்தில் ரயில் ஓட்டுநர் லாவகமாக செயல்பட்டு […]

3 Min Read
Lalgudi Railway Track

பெரம்பலூரில் பரிதாபம்.! விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்றபோது நேர்ந்த கோர விபத்து.! 3 பேர் பலி.! 

பெரம்பலூர் அருகே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற 108 ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.  பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டரை வேன் ஒன்று முந்தி செல்ல முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து அறிந்தவுடன் அவர்களை மீட்க 108 ஆம்புலன்ஸ் அப்பகுதிக்கு வந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் […]

2 Min Read
Accident

ஆட்டம் காட்டிய அரிசி கொம்பன்.! மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்த வனத்துறை.!

தேனி, கம்பம் பகுதியில் சுற்றி திரிந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டது.  கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் சுற்றி திரிந்த அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் பிடித்து தமிழக எல்லையில் கடந்த மாதம் விட்டனர். அதன் பிறகு தமிழக எல்லையை கடந்து, தேனி , கம்பம் பகுதிக்குள் அரிசி கொம்பன் நுழைந்துவிட்டான். அதன் பிறகு சாலையோர வாகனங்களை சேதப்படுத்துவது, விவசாய பயிர்களை சேதப்படுத்துவது, அருகில் உள்ள ஆற்றில் தண்ணீர் குடிப்பது என அப்பகுதி மக்களின் இயல்பு […]

2 Min Read
Arisi Komban Elephant

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு!

கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர், உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. அமைச்சரின் சகோதரர் அசோக்குமார், கரூர் துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்டோர் இடங்களில் சோதனை நிறைவு பெற்றுள்ளது. நேற்று 7வது நாளாக கரூரில் அமைச்சர் […]

3 Min Read
Minister Senthil balaji

சென்னையில் உலகத்தரத்தில் பன்னாட்டு அரங்கம்! முதலமைச்சர் அறிவிப்பு

சென்னையில் உலக தரத்தில் “கலைஞர் கன்வென்ஷன் சென்டர்” என்ற பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு . சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனை, வரலாறு குறித்து பேசி புகழாரம் சூட்டினார். இதன்பின், பேசிய அவர், கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. மக்களின் மனங்களில் இன்றும் ஆட்சி செய்கிறார் […]

3 Min Read
MK Stalin