கனமழை சூறைக்காற்று: நீலகிரி 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!
நீலகிரியில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்றே, இன்று (7.7.2023) நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், கனமழையுடன் சூறைக்காற்று வீசுவதால், இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நேற்று நீலகிரி மாவட்ட முழுவதும் […]