உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலயத்தில் தங்கத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்…!

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 441-வது தங்கத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம். தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 441-வது தங்கத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை ஆலய கொடியை ஏற்றிய நிலையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. கொடியேற்றத்தின் போது சமாதான புறாக்கள் பறக்க விடபட்டது. இந்த திருவிழாவுக்கு மத வேறுபாடின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய […]

2 Min Read
snowlady

மணல் லாரி மோதி ஒன்றாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம்…!

தஞ்சையில், மணல் லாரி மோதி ஒன்றாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.  தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, முதன்மைச் சாலையைச் சேர்ந்த விவசாயி கலியமூர்த்தி. இவரது மகன் கவிபாலன் (5) திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். காலை பள்ளிக்குச் சென்ற மாணவன் வேனில் மாலையில் வீட்டுக்குத் திரும்பினார். வீட்டின் அருகே வேனிலிருந்து இறங்கிய இவர், எதிரே உள்ள வீட்டுக்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, அந்த வழியாக மணல் லாரி […]

3 Min Read
death

நெல்லையில் பயங்கரம்.! அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை.! மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.!  

திருநெல்வேலி பேட்டை பகுதியில் அதிமுக பிரமுகர் பிச்சை ராஜு மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  திருநெல்வேலி பேட்டை பகுதி மயிலாபுரத்தை சேர்ந்தவர் 52 வயதான பிச்சை ராஜு. அதிமுக பிரமுகரான இவர் முன்னாள் பேட்டை பஞ்சாயத்து துணை தலைவராகவும் பொறுப்பில் இருந்துள்ள இவர் பேட்டை எம்ஜிஆர் நகரில் மதுபான பார் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு மதுபான பார் நேரம் முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்லும் வழியில் வீரபாகு நகர் அருகே சென்று […]

4 Min Read
Murder

கனமழை எதிரொலி.! பவானி அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகமானதால் பவானிசாகர் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கர்நாடகா பகுதிகள், நீலகிரி மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்கு நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அங்கு பில்லூர் அணை நேற்று 84அடியாக இருந்த நீர் கொள்ளளவு, இன்று 94அடியாக உயர்ந்துள்ளது . இதனால் அணை நிரம்பி பவானி சாகர் அணைக்கு நீர் திறந்துவிடபடுகிறது . இதனால், பவானிசாகர் அணையினை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதி உள்ளிட்ட கரையோர பகுதிகளுக்கு […]

3 Min Read
Bhavanisagar Dam

எல்லை தாண்டி மீன்பிடிப்பு.! 9 தமிழக மீனவர்கள் கைது.! 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து நேற்று சுமார் 200 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அதில் 2 படகுகளில் வந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் இலங்கை கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் இன்னும் தமிழகம் திரும்பாத நிலையில் இவர்களில் கைது மீனவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

2 Min Read
Tamilnadu fisherman arrested

அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் புகைப்படம்! உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்..!

நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படத்தை அகற்ற கூறும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயநீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம். சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களை தவிர வேறு எந்த தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெறக்கூடாது என்றும், அண்ணல் அம்பேத்கர் படத்தை நீதிமன்றங்களில் வைக்க கூடாது என்றும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இந்த நிலையில், நீதிமன்றத்தில் அம்பேத்கர் படத்தை வைக்க கூடாது என்ற சுற்றறிக்கையை திரும்ப பெறுமாறு அரசியல் தலைவர்கள் மற்றும்  பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]

3 Min Read
strike

தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.! 

சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனை ஏற்று , குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தற்போது சென்னைக்கு வரும் 6அம தேதி வருவது உறுதியாகியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர்.

1 Min Read
Droupadi Murmu

நாமக்கல் மாவட்டத்திற்கு வரும் -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வல்வில் ஓர் விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

1 Min Read
june holiday

மாணவர்கள் கவனத்திற்கு..! நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு..!

சென்னையில் நாளை 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு. சென்னையில் நாளை 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும் எனமாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மழையால் ஜூன் 19-ஆம் தேதி விடப்பட்ட விடுமுறை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
Ramanathapura school local holiday

22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழாவை ஒட்டி வரும் 22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் பூரம் நட்சத்திர தினத்தன்று தேரோட்டத் திருவிழா ஜூலை மாதம் வெகு விமர்சையாக நடைபெறும். தேரோட்டத்திற்கான முன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

2 Min Read
Virudhunagar

மாஸ்டர் டிகிரி முடித்தவர்களா நீங்கள்..? IIM திருச்சியில் 20 ஆயிரம் சம்பளத்தில் வேலை..மிஸ் பண்ணாதீங்க..!

இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி இந்திய அரசாங்கத்தால் பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஏழு இந்திய மேலாண்மை நிறுவனங்களுள் ஒன்று. இந்நிறுவனம் தகுதிவாய்ந்தவர்களுக்கு பெரிய நிறுவனங்களின் நூலகங்களில் பணிபுரிய உதவுவதற்கு பயிற்சி அளிக்க விரும்புகிறது. அந்த வகையில் தற்பொழுது, ஒரு வருட காலத்திற்கு நூலகப் பயிற்சியாளர் பணிக்கு ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலியிடங்கள்: இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி நூலகப் பயிற்சியாளர் (Library Trainee) பணிக்கு காலியாக உள்ள 2 பணியிடங்களை நிரப்புகிறது. வயது: […]

5 Min Read
iim trichy

கடலூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

கடலூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.3 லட்சம் பறிமுதல்.  கடலூர் மாவட்டம் அண்ணா கிராம பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணம் ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட […]

2 Min Read
raid

நாமக்கல் : லிப்ட் கேட்டு சென்ற கல்லூரி மாணவியை தலையில் தாக்கி பாலியல் வன்கொடுமை.!

நாமக்கல் ராசிபுரத்தில் அறிமுகமில்லா நபர் ஒருவர் லிப்ட் கேட்டு சென்ற கல்லூரி மாணவியை தலையில் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கரூரை சேர்ந்த மாணவி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஓர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று காலை கரூரிலிருந்து ராசிபுரம் சென்றுள்ளார். அப்போது கல்லூரிக்கு நேரமான காரணத்தால் முன்பின் அறிமுகமில்லா இளைஞரிடம் லிப்ட் கேட்டுள்ளார். அவரும் அந்த மாணவியை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில், தனது அக்காவுக்கு பிரசவ […]

3 Min Read
Sexual harassment

சென்னை மக்கள் கவனத்திற்கு..! மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவுக்கான முதற்கட்ட முகாம்..!

சென்னை மாநகராட்சியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவுக்கான முதற்கட்ட முகாம் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும். 2021 சட்டமன்றத் தேர்தலில் அப்போது முக்கிய தேர்தல் வாக்குறுதியாக பார்க்கப்பட்ட மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை திட்டத்தை தற்போது அமல்படுத்துவதற்கு தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. செப்டம்பர் மாதம் முதல் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. அதற்கு […]

3 Min Read
tn magalir urimai thogai

ராமநாதபுரம் : ஆடி அமாவாசையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை.!

இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தமிழ்மாதம் ஆடி முதல் நாளான இன்று இந்துக்கள் பலர் தங்கள் முன்னோர்களுக்கு வேண்டி கடற்கரைகள், நீர்நிலை கோவில் பகுதிகளில் சடங்கு சம்பிரதயங்கள் செய்வார்கள். குறிப்பாக ராமேஸ்வரம் கோவிலுக்கு சுற்றுவட்டாரத்தில் இருந்து பலர் தங்கள் முன்னோர்களுக்காக வருவார்கள். இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.இந்த உள்ளூர் […]

2 Min Read
Ramanathapura school local holiday

வரும் 17-ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

ஆடி அமாவாசை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் 17-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. நாளை மறுநாள் அதாவது வரும் 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆடி அமாவாசை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடுமுறையை  ஈடு செய்வதற்காக வரும் 22 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
june holiday

திருவண்ணாமலை அரசு பள்ளியில் பல்லிவிழுந்த உணவை சாப்பிட்ட 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நிலை குறைவு. திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. அங்கு மதிய உணவு கொண்ட ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பல்லி விழுந்த உணவை உட்கொண்டதால் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 50 மாணவர்களுக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் […]

2 Min Read
lizard

சென்னையில் களமிறங்கும் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள்.! முதற்கட்டமாக 70 ரயில்கள் வாங்க முடிவு.!

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் திட்டத்தில் 70 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளன.  சென்னையில் ஏற்கனவே, முதல்கட்டமாக மெட்ரோ ரயில் சேவையானது, கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலும், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும் இரு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் சென்னையில் மெட்ரோவின் பயன்பாடு அதிகரித்து வருவதால் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ […]

4 Min Read
Chennai metro 2nd phase

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் பினாயில் ஊற்றிய 3 சிறார்கள் கைது…!

கரூரில், வீரணாம்பட்டி அரசு நடுநிலை பள்ளியில் குடிநீர் தொட்டியில் பினாயில் கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 சிறார்கள் கைது.  கரூரில், வீரணாம்பட்டி அரசு நடுநிலை பள்ளியில், நேற்று முன்தினம் குடிநீர் தொட்டியில் பினாயில் கலக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக 3 சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சிறார்களிடம் விசாரணை மேற்கொண்டதில், விளையாட்டுத்தனமாக பினாயிலை குடிநீர் தொட்டியில் ஊற்றியதாக தெரிவித்துள்ளனர்.

2 Min Read
Arrest

சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்!

நாமக்கலில் சத்து மாத்திரை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி. நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்டு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். மயக்கம், வாந்தி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 9ம் தேதி சத்து மாத்திரை சாப்பிட்ட ஊட் டியை சேர்ந்த மாணவி பாத்திமா மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

2 Min Read
SchoolStudents - Rasipuram