மீண்டும் சிக்கிய டிடிஎஃப் வாசன்.! அபராதம் விதித்து அனுப்பி வைத்த ஊட்டி போலீசார்.!
ஊட்டி மலைப்பாதையில் அதிவேகமாக வாகனத்தை இயக்கிய டிடிஎஃப் வாசனுக்கு காவல்துறை அபராதம் விதித்தனர்.
உயர்ரக பைக்குகளில் அதிவேகமான சென்று அதனை வீடியோ எடுத்து தனது யூ-டியூப் பக்கத்தில் பதிவிட்டு 2k கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் குறிப்பிட்ட நெடுசாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக பைக்குகளை இயக்குகிறார் என ஏற்கனவே பல்வேறு புகார்கள் இவர் மீது எழுந்துள்ளன.
தற்போது புதிய புகாரில் டிடிஎப் வாசன் சிக்கியுள்ளார். நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பாதையில் குறிப்பிட்ட அளவை விட அதிவேகமாக வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது அங்கிருந்த புதுமந்து போக்குவரத்து துறை காவல்துறையினர் இவரை துரத்தி பிடித்தனர். பின்னர் அதிவேகமாக சென்ற காரணத்தை குறிப்பிட்டு டிடிஎப் வாசனுக்கு அபராதம் விதித்துள்ளனர்.