நாமக்கல், கிராமப்புறங்களில் உள்ள செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராமப்புறங்களில் உள்ள செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும். இடமாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டங்கள் […]
நாமக்கல் அருகே மோகனூரில் பாலத்தில் இருந்து 4 வயது சிறுவன் ஆற்றுக்குள் விழுந்து மாயமாகியுள்ளனர்.காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 வயது சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். DINASUVADU
நேற்று 3ஆவது நாளாக நாமக்கல்லில் உள்ள திருச்செங்கோட்டில் கிறிஸ்டி நிறுவன தலைமை அலுவலகத்தில் ஊழியர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ரூ.1,350 கோடி வரை வரி ஏய்ப்பு செய்த புகாரில் கடந்த மாதம் வருமானவரித்துறை சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாமக்கல் அருகே காவிரியில் குளித்த இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். நாமக்கல் பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையத்தில் காவிரியாற்றில் குளித்த இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாமக்கல் அருகே சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நாமக்கலில் உள்ள கொல்லிமலை வாழவந்திநாடு பகுதியில் அண்ணன், தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து போலீசார் விசராணை நடத்தி வருகின்றனர்.மேலும் சொத்துத்தகராறில் இருவரும் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரி சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .திருசெங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு என தகவல் வெளியாகியுள்ளது.சத்துணவு திட்டத்திற்கு பொருட்கள் வழங்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு சத்து மாவு விநியோகம் செய்யும் கிருஷ்டி நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னக்காளை(வயது 47). இவர் கடந்த 2006-ம் ஆண்டு அப்பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் நாமகிரிபேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சின்னக்காளைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். நேற்று இரவு ஜெயில் அறையில் சின்னக்காளைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் அலறித் துடித்தார். சத்தம் கேட்டு அங்கு சென்ற ஜெயில் ஊழியர்கள் […]
ராசிபுரம் அருகேயுள்ள தட்டான்குட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில், தண்ணீரில் விளக்கு எரிந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள தட்டான்குட்டையில் பிரசித்தி பெற்ற பச்சைத் தண்ணிர் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் விமர்சையாக திருவிழா நடக்கும். அதேபோல், இந்த ஆண்டு திருவிழா கடந்த ஏப்ரல் 3ம்தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு படைத்தும், நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் […]
நாமக்கல்லில் போலீசார் ஃபேஸ்புக்கில் 300க்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி செல்போன் எண்களைப் பெற்று, அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களுக்கே வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பி தொந்தரவு செய்த இளைஞரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த 28 வயது பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவரது செல்போன் எண்ணுக்கு நபர் ஒருவர் கடந்த 4 மாதங்களாக அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அந்த நபர், பரமத்திவேலூர் பேருந்து நிலையதிற்கு தனியாக வரவேண்டும் […]
நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி மற்றும் குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் கருப்பு பேட்ச் அணிந்து 2500 மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போரட்டம் மற்றும் நாமகிரிப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்றிய செயலாளர் P. இளங்கதிர் தலைமையில் 1000 மாணவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வகுப்புக்கு 130 மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்பு வகுப்புக்கு சென்றனர் நடைபெற்றது மற்றும் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் இராசிபுரம் ஒன்றிய செயலாளர் R. காயத்திரி தலைமையில் 3000 மாணவர்கள் […]
தமிழ் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவ மரியாதை செய்த காஞ்சி சங்கர மடாதிபதி விஜேயந்திர சரசுவதியை கண்டித்தும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் இன்று 26.01.2018 ஈரோட்டில் பல்வேறு இடங்களில் தடையை மீறி போராட்டம் முத்தம்பாளையம் பகுதியில் இளம்புலிகள் மாநகர செயலாளர் பிரவீன் தலைமையிலும் ஓடை பகுதியில் மாவட்ட துணை செயலாளர் தேசிங்கு தலைமையிலும் பவானியில் மாவட்ட துணைசெயலாளர் செம்பன் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றது
நாமக்கல்லில் அரசு பேருந்துகளை இயக்க 200க்கும் மேற்பட்ட தினக்கூலி ஓட்டுநர், நடத்துநர்கள் நியமனமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் நாமக்கல் பிரதான சாலை மற்றும் நகரங்களைத் தவிர கிராமப்புறங்களுக்கு அரசு பேருந்து சேவை இல்லை என மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.இந்த விபத்தில் 15 பயணிகள் காயம். நாமக்கல் மாவட்டம் வேளாத்தாகோயில் பேருந்து நிலையம் அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பயணிகள் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர் . source: dinasuvadu.com
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இயங்கி வரும் பொன்னி சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் கரும்பு நிலுவைத் தொகையை கேட்க வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்ததால், ஆலை முன்பு அவர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிப்பாளையம் அருகேயுள்ள ஓடப்பாளையம் பகுதியில் பொன்னி சர்க்கரை ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலை கரும்பு டன் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த விலையான 2ஆயிரத்து 600 ரூபாயில் 300 ரூபாயை பிடித்தம் செய்துகொண்டு 2 ஆயிரத்து 300 ரூபாயை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. […]
ஈரோடு: திருச்செங்கோடு அருகே சித்தளந்தூரில் இரு கார்கள் மோதியதில் 4 பேர் பலியாகிவிட்டனர். திருச்செங்கோட்டிலிருந்து ஈரோடு நோக்கி சென்ற காரும், அப்போது சித்தளந்தூர் அருகே எதிரே வந்த காரும் , நேருக்கு நேர் மோதி. இந்த இரு கார்களும் விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் சிக்கி செந்தில்குமார் மற்றும் வெங்கடேசன், சரவணன் ஆகிய 3 பேர் பலியாகிவிட்டனர். இவர்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த கோர விபத்தில் 4 […]
நாமக்கல்லில் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை சார்பில் “வருடம் ஒரு கன்று- கறவைமாடுகளில் கருத்தங்காமை பிரச்சினைகளுக்கான தொழில்நுட்ப மேலாண்மை உத்திகள்” குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது. நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அகிலா அனைவரையும் வரவேற்று பேசினார். கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்ட அரங்குகளை பார்வையிட்டார். கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தீவனங்கள், தீவன […]
நாமக்கல்: கோவை ஏ.டி.எம்., கொள்ளை வழக்கில் 5 கொள்ளையர்கள் கைதான நிலையில், அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நாட்டு துப்பாக்கி பறிமுதல்
நாமக்கல் ஆரியபவனில் ,3வயது குழந்தைக்கு தனியாக உணவுக்கு டோக்கன் வாங்க வற்புருத்திய அவலம். GST அறிவித்தால் நாடு வளம் பெறும் என்று கூறிய மதிய அரசு 3 வயது குழந்தைக்கு உணவு இல்லை பணம் தான் முக்கியம் என்று மக்கள் மனதை மாற்றி உள்ளது.தாங்கள் வாங்கிய உணவில் கொடுக்க கூடாது தனியாக வாங்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளது இந்த வீடியோ தொகுப்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் சுண்டமேடு காந்திநகர் அருந்தியர் தெருவை சேர்ந்த பாபு என்பவரை திருச்செங்கோ மண்டாகபாளையத்தில் இயங்கிவரும் பங்காளி மண்சட்டி சமையல் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் அவரது கூலிபடையினர் சேர்ந்து செல்போனை திருடிவிட்டாய் என்று பொய்யாக குற்றம் சுமத்தி கடந்த 15-11-2017 அன்று காலை 10-00மணியிலிருந்து இரவு பத்துமணி வரை எந்த பழக்கங்களும் (அதாவது மது பீடி புகையிலை) இல்லாத பாபுவை வழுகட்டாயமாக மதுவை ஊற்றி குடிக்கவைத்து உருட்டு கட்டைகளாலும் தனது உடல்பலத்தாலும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்கள். […]