தமிழகத்தில் தற்போது அரையாண்டுதேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கல்வித்துறையின் சுற்றறிக்கையை மீறி விடுமுறை நாட்களில் பள்ளிகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சில தனியார் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மேக்ராஜிடம் கேட்டபோது பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகங்கள் கூறுவதாகவும் […]
நாமக்கலை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர், வீடு இல்லாதவர்கள் குறைந்த செலவில் வசிப்பதற்கு நடமாடும் வீட்டை வடிவமைத்துள்ளார். இந்த ஆட்டோ வீடு ரூ.1,00,000 மதிப்பில், பல சிறப்பம்சங்கள் நிறைந்த சூரிய மின்சக்தி மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் படித்து பயின்றதை நடைமுறைக்கு ஏற்றவாறு புதிய கண்டுபிடிப்புகளை மாற்றுவதை கல்வியின் சிறப்பாக அமைகிறது. பின்னர் தற்போது உள்ள இளைஞர்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு புது புது கண்டுபிடிப்புகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அருண் […]
திருச்செங்கோடு அருகே மகனை அடித்து கொன்ற தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார். மது போதையில் அருகில் இருப்பவரை துன்புறுத்துவது மற்றும் சொத்து கேட்டு தகராறு செய்த மகன். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி உட்பட்ட தொண்டிகரடு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மணியின் மகன் அரவிந்த், இவர் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி தகராறு செய்துள்ளார். அதுமட்டுமின்றி மதுபோதையில் அருகில் உள்ள வீட்டாருடன் சண்டை போடுவது துன்புறுத்துவது போன்ற செயல்கள் செய்து வந்தார். பின்னர் இதையெல்லாம் சகித்து கொண்டு […]
கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் மீது ஆசிட் வீசிய நபரை பொதுமக்களே அடித்து கொலை. காப்பாற்ற வந்த பொதுமக்கள் மீதும் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியடைய வைத்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் மீது ஆசிட் வீசி கொலை செய்தவரை பொது மக்கள் சரமறிய அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரத்தை அடுத்த குருசாமி பாளையத்தை சேர்ந்த தனம் என்பவரின் கணவர் இறந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்தார். ஏற்கனவே […]
திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஓட்டுநரை அவரது முன்னாள் காதலி சந்தித்து திருமணம் செய்ய வலியுறுத்தல். மணிகண்டனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஓட்டுநரை அவரது முன்னாள் காதலி சந்தித்து திருமணம் செய்ய வற்புறுத்தியதாகக் கூறப்படும் நிலையில் அந்த ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார். அதே மாவட்டத்தில் அம்மன் நகரைச் சேர்ந்த மணிகண்டனும் அவரது காதலியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். சில நாட்கள் கழித்து மணிகண்டனுக்கு வேறொரு […]
நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.ஆனால் சேந்தமங்கலம் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது.இந்நிலையில் சேந்தமங்கலம் அருகே உள்ள ஜங்களாபுரத்தில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய மழை பெய்த போது சரவணன் என்பவரின் நிலத்தில் இடி விழுந்ததாக தெரிகிறது. இதனால் அந்த நிலத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனால் வயல் முழுவதும் தண்ணீர் நிரம்பி வீதிகளிலும் ,சாலைகளிலும் தண்ணீர் சென்றது. மேலும் அருகில் இருந்த தொடக்கப்பள்ளிக்கும் தண்ணீர் சென்றதால் நேற்று […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவர் மதுவிற்கு அடிமையாகி தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இவரது மனைவி பெயர் செல்வி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டில் தினமும் குடித்துவிட்டு தொல்லை செய்வதை செல்வி, தனது நண்பரான பெருமாளிடம் கூறியுள்ளார். பெருமாளும் அதே குமரபாளையத்தை சேர்ந்தவர் தான். சம்பவத்தன்று பெருமாள், வெங்கடேசனை கூட்டிக்கொண்டு காவிரி நகருக்கு சென்று வெங்கடேசனுக்கு அதிகமாக மது வாங்கிக்கொடுத்து உள்ளார். வெங்கடேசனுக்கு அதிகமாக போதை ஏறியதை […]
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்த குழந்தைகள் சிலர் அங்கு இயங்கி வரும் கடையில் பைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கி வந்தனர். வீட்டிற்கு சென்று அந்த சாக்லேட்டை பிரித்து பார்கும்போது, அதில் புழுக்கள் ஊர்ந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இதுகுறித்து அந்தக் கடைக்காரரிடம் கேட்டுள்ளனர். அவர், ராசி புரத்தை சேர்ந்த மொத்த விற்பனையாளரான கிருஷ்ணா ஏஜென்சியிடம் இருந்த அந்த சாக்லேட்டை வாங்கியதாகவும், அவர்கள் மீது உணவு பாதுகாப்புத் துறையினரிடம் […]
சில தினங்களுக்கு முன்னர் பள்ளி வளாக கழிவறையில் அப்பள்ளி ஆசிரியரும், அங்கன்வாடி பொறுப்பாளரும் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதை மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ள்ளனர். பின்னர் ஊர்மக்கள் ஒன்றுகூடி சரவணனை வெளுத்து வாங்கினர். இவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இச்சம்பவம் நடைபெற்ற பள்ளி, நாமக்கல் மாவட்டம், புதன் சந்தையை அடுத்த எஸ்.உடுப்பியில் செயல்பட்டு வரும் பள்ளியாகும். இதே பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் சரவணனும், அதே பள்ளியில் அங்கன்வாடி பொறுப்பாளர் ஜெயந்திக்கும் பழக்கம் ஏற்பட்டு […]
பிரதமர் நரேந்திர மோடியால், பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு அதிகாரம் வழங்குதல், பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதத்தை அதிகரித்தல் போன்ற கொள்கைகளை முன்னனிலைப்படுத்தி பெண்குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளை படிக்கவைப்போம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பாலின விகதத்தில் இடையறாது முன்னேற்றம் கண்டுவரும் தமிழ் நாட்டின் நாமக்கல் மாவட்டம், 2019ம் ஆண்டுக்கான பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்ட பாராட்டு விழாவில் விருது பெற்றுள்ளது. திட்டக் குழுவினரின் உழைப்பிற்கு எனது பாராட்டுகள். pic.twitter.com/JObwQkiqp8 — Smriti […]
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் குமார்.இவர் எலெக்ட்ரிக் கடை வைத்துள்ளார். இவருக்கும் சாரதி என்பவருக்கும் கடந்த 14 வருடத்திற்கு முன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான அடுத்த ஒரு வருடத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சாரதி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து உள்ளார். உறவினர்கள் பேசியும் சராதி சமாதானம் ஆகவில்லை. இந்நிலையில் குமார் யாருக்கும் தெரியாமல் கடந்த 3 வருடங்களுக்கு […]
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சார்ந்த விசைத்தறி தொழிலாளி பாலமுருகன் இவரது மகள் மாரியம்மாள். இவர் சிறுவயதில் இருந்து கால்பந்து மீது கொண்ட அதிக ஆர்வம் கொண்டு இருந்ததால் இவரது தந்தை பாலமுருகன் நாமக்கல்லில் உள்ள கால்பந்தாட்ட விளையாட்டு விடுதியில் சேர்ந்தார். இவர் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் பள்ளி படிப்புடன் சேர்த்து தீவிர கால்பந்து பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். தொடக்கத்தில் மாரியம்மாள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு […]
நாமக்கல்லில் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வருபவர் மூர்த்தி.இவர் தமது தேவைக்காக தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள பாரத் ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மிற்கு சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம்.மில் இருந்து 20,000 மற்றும் 20,000 ஆக இரண்டு முறையில் 40,000 பணத்தை எடுத்துள்ளார்.அப்போது எடுத்த பணத்தை பார்த்த அவர் அதிர்ச்சி அடித்துள்ளார்.ஏனெனில் கையில் இருந்த 10,000 பணம் கள்ளநோட்டுகளாக இருந்துள்ளது. மேலும் ஐந்து 2,000 நோட்டுகள் கிழிந்து ஒட்டப்பட்ட நிலைமையில் இருந்துள்ளது.இதன் […]
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள வலப்பூர்நாடு ஊராட்சியில் உள்ள ஓயாங்குழி கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் ஆண் கரடி ஓன்று கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டிய நிலையில் இறந்தது தொங்கியது. தகவல் அறிந்து அங்கு வந்த கொல்லிமலை வனத்துறையினர் கரடியை கயிற்றில் இருந்து கீழே இறக்கினர்.பின் கரடியை யார்? கொன்றது என்ற விசாரணையை ஓயாங்குழி கிராம மக்களிடம் நடத்தினர். அதில் இறந்த கரடி அடிக்கடி அங்கு உள்ள ஒரு பலமரத்தில் உள்ள பலாபழங்களை தின்று சேதப்படுத்தி வந்ததாகவும் […]
அரசு பள்ளியில் நீதிபதி ஒருவர் தனது குழந்தைகளை சேர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளார். நாமக்கல் மாவட்டம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக வடிவேல் உள்ளார்.இவர் தனது குழந்தைகளை நாமக்கல் நல்லபாளைத்தில் உள்ள அரசு பள்ளியில் தனது குழந்தைகளான நிஷாந்த் சக்தி மற்றும் ரீமா சக்தி இருவரையும் பள்ளியில் சேர்க்கை அளிக்குமாறு தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பம் கொடுத்தார். இந்நிலையில் விண்ணப்பத்தினை பெற்று கொண்ட தலைமை ஆசிரியர் நீதியரசரின் குழந்தைகளான நிஷாந்த் சக்தி 6 வகுப்பிலும் மற்றும் ரீமா […]
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, ஏழை குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள், தவறான உறவில் பிறக்கும் குழந்தைகளை வாங்கி, குழந்தைகள் இல்லாத தம்பதியினருக்கு விற்கும் அவலம் இப்பகுதியில் நடந்து வருகிறது. குழந்தையின் பாலினம், எடை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில், 3 முதல் 4 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்று வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த குழந்தை விற்பனையின் பின்னணியில், ஒய்வு பெற்ற செவிலியர் ஒருவர் இடைத்தரகராக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. மேலும், நாமக்கல் நகராட்சியில், விற்பனை செய்யப்படும் […]
நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூர் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கிராமப்புறங்களில் பொதுமக்கள் எளிதில் ஓட்டுநர் உரிமம் பெற முகாம்கள் அமைக்கப்பட்டு 300 மேற்பட்டோருக்கு ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் முத்துசுவாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில், பட்டாசு வெடித்ததில், சேந்தமங்கலம் அருகே சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சிறுவன் மணிவேல் (12) வெங்காய வெடி வெடித்த போது உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வசந்த் (12) மற்றும் சூர்யா (12) என்ற சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் 130-வது பிறந்த நாள் விழா அவரது நினைவு இல்லத்தில் வைத்து கொண்டாடப்பட்டது. மாவட்ட கண்காணிப்பாளர்கள் அரா.அருளரசு, நாமக்கல் எம்.எல்.ஏ, கே.பி.பி பாஸ்கர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர் மற்றும் பல அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் கொள்ளியூரை அடுத்த அரியூர் காஸ்மா கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 40 ஆண்டுகளாக தங்களுக்கு தார் சாலை தரும்படி போராடி வருகின்றனர். ஆனால் இதற்க்கு அரசாங்கம் எந்த தீர்வும் அளிக்கவில்லை. இந்த கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நடந்தே பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து மலைவாழ் மக்கள் அரசிடம் ரேஷன் மற்றும் ஆதார்காட்டை […]