நாமக்கல் மாவட்டத்தில் முதல் நாள் பள்ளிக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்பொழுதும் தொடர்ந்து பரவி கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும், பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்கள் முறையாக கொரோனா கட்டுப்பட்டு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், […]
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளை கவச உடை அணிந்து கலெக்டர் ஷ்ரேயா சிங் பார்வையிட்டுள்ளார். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் பொழுது திருச்செங்கோடு வருவாய் உதவி கலெக்டர் இளவரசி, மருத்துவ அலுவலர் தேன்மொழி, கொரோனா சிகிச்சைப் பிரிவு மருத்துவர் சத்தியபாமா, தடுப்பூசி பிரிவு மருத்துவர் மோகனா ஆகியோரும் உடனிருந்துள்ளனர். அப்பொழுது பச்சிளம் குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணிகள் மற்றும் பொது நோயாளிகள் பிரிவு […]
கஞ்சா போதை தலைக்கேறியதும் தெருவில் செல்லக்கூடிய மக்களையெல்லாம் விரட்டி விரட்டி கடித்து குதறிய 22 வயது இளைஞன் கட்டிப் போடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 22 வயதுடைய கண்ணன் எனும் இளைஞன் கடந்த பல வருடங்களாகவே கஞ்சா அடிக்கும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது இவருக்கு கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில் போதையில் என்ன செய்வதென்று அறியாமல் தெருவில் செல்லக்கூடிய மக்களை எலலாம் விரட்டி […]
நில பிரச்சனையால் காட்டுக்குள் கூட்டிச்சென்று மாமனார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகன்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை தின்னூர்நாடு எனும் பகுதியில் உள்ள கண்ணி பட்டியை சேர்ந்த 45 வயதான சாமிதுரை என்பவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களில்இவருக்கு திருமணமாகி உள்ளது. இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி தேவனூர் வனப்பகுதியில் முகம் சிதைந்த நிலையில் சாமிதுரை அவர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார், இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்த பொழுது சாமிதுரை மருமகன் ராஜ்குமார் மற்றும் பிரசாத் ஆகிய […]
நாமக்கல்லில் 14.44 கோடி ரூபாய் மதிப்பிலான 26 திட்டங்களை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் 14.44 கோடி ரூபாய் மதிப்பிலான 26 திட்டங்களை இன்று முதல்வர் பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். மேலும் 137.65 கோடி மதிப்பிலான 130 புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்பொழுது நாமக்கல் மாவட்டம் கொரோனா தடுப்பில் முன்னணி மாவட்டமாகத் திகழ்கிறது. கொரோனாவின் தாக்கமும் நாமக்கல்லில் கட்டுக்குள் உள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் […]
நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த கொரோனா நோயாளி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை இந்த கொரோனா வைரஸால் தமிழகத்தில் 90,167 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,201 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில், பெத்தானூரை சேர்ந்த 30 வயதான சென்னை ஐசிஎப் ஊழியர் நேற்று கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, இவர் […]
நாமக்கல்லில் ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து முட்டை கொள்முதல் விலை 4.25 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. பின் தற்பொழுது நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் இருந்த முட்டை வியாபாரம் தற்பொழுது செழிப்படைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து கொள்முதல் விலை 4.25 […]
நாமக்கல்லில் முட்டையின் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து 3.65 ஆக உயர்ந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் அண்மையில் முட்டையிலும் அந்த வைரஸ் தாக்கம் காணப்படும் என வதந்திகள் கிளம்பியதால் முட்டையின் விலை மிகவும் கடுமையாக சரிந்ததுடன், வியாபாரிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகினர். இந்நிலையில், தற்பொழுது நாமக்கல்லில் முட்டையின் விலை 5 காசுகள் அதிகரித்து, 3.65 காசுக்கு விற்கப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே முட்டைக்கு விலை ஏறி இறங்கி காணப்படுகிறது.
முயல்வேட்டைக்கு சென்ற போது தவறுதலாக நாட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு. இன்று வேட்டைக்கு செல்லும் பலரும், நாட்டு துப்பாக்கியை பயன்படுத்துகின்றனர். துப்பாக்கியை நாம் பயன்படுத்த தெரியாமல், பயன்படுத்தினால் அதனால் நமக்கே ஆபத்து நேரிட கூடும். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, முயல்வேட்டைக்காக மூன்று சென்றுள்ளனர். வேட்டைக்கு சென்றவர்கள் நாட்டு துப்பாக்கியையும் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், அவர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சக்திவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, துப்பாக்கி வெடித்து உயிரிழந்த […]
நாமக்கல்லில் கொள்முதல் முட்டையின் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.40ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தீவிர பரவலால் இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது. கொரோனா வைரஸ் குறித்து புதிய, புதிய தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இதுகுறித்த வதந்தியான செய்திகளும் அதிகமாக பரவ தொடங்கியது. அந்த வகையில், கோழி முட்டை மற்றும் கோழி கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக தகவல்கள் வெளியானது. இதனால், அச்சமயத்தில், கோழி முட்டையின் விலை கடும் […]
கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் நோயின் தீவிரம் அதிகரித்து வருவதால், இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மற்றும் அந்தந்த மாநில முதல்வர்களும் […]
இந்தியா முழுவதும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த, இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதானால், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை செய்த தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ் பாலசுப்ரமணி (21). இவர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வேலை செய்துவந்துள்ளார். இதனையடுத்து லோகேஷ், நாடு முழுவதும் 21 […]
மகராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் இருந்து 2 நண்பர்களுடன் தமிழகம் நோக்கி 500 கிலோ மீட்டர் நடந்து வந்த மாணவர்களில் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி லோகேஷ்(23) வயது மாணவர் நாக்பூரில் அருகே வர்தாவில் உணவு பதப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக உண்ண உணவின்றி தவித்த அவரோடு 29 பேரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டனர். இதில் லோகேஷ 1300 கிலோமீட்டர் […]
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் ஏற்பட்டதால் கோழி மற்றும் கோழி முட்டையில் இந்த வைரஸின் தாக்கம் உள்ளது என்று வதந்திகள் பரவியது. இதனால் விற்கப்படாமல் பல கோடிக்கணக்கான முட்டைகள்இருந்தன. இதன் காரணமாக நாமக்கல்லில் மிகவும் விலை குறைந்து 2 ரூபாய் வரைக்கும் முட்டை விலை நிர்ணயம் ஆனது. இந்நிலையில், தற்பொழுது இந்த வதந்திகள் குறைந்து மக்கள் சாதாரணமாக அவற்றை உண்ண தொடங்கியுள்ளனர். இதனால் தற்பொழுது நாமக்கல்லில் முட்டையின் விலை 50 காசு உயர்ந்து தற்போது 2.75 ஆக […]
நாமக்கல் சாணார்பாளையத்தில் அமைந்துள்ள முனியப்பசாமி கோவிலில் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெற்றது. ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசன கண்டு பிரசாதத்தை வாங்கி சென்றனர். நாமக்கல் மாவட்டம் அடுத்து சாணார்பாளையத்தில் அமைந்துள்ள திருப்பதி முனியப்பசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு 47 அடி உயரமுள்ள முனியப்ப சாமிக்கு திருவிழா நடைபெறுவதற்கு தீவிரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த திருவிழாவிற்கு நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் […]
நாமக்கல் ஆஞ்சநேயா்க்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல்லில் பிரசித்திப் பெற்ற 18 அடி உயரத்தில் அருளும் ஆஞ்சநேயா் சுவாமியை தரிசிக்க தினமும் ஏராளமானோா் வருகை தருகின்றனா். சனி, ஞாயிற்றுக்கிழமை,மற்ற சிறப்பு தினங்களிலும் பக்தா்கள் கூட்டம் அலைமோதும். அவ்வாறு அருள்பாலித்து வரும் சுவாமிக்கு வடைமாலை, தங்கக்கவசம், வெள்ளிக்கவசம் சாத்துப்படி, வெற்றிலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு, முத்தங்கி அலங்காரம் ஆகியவைகள் பக்தா்களால் மேற்கொள்ளப்படும். இந்த அலங்காரத்தில் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் ஆனது ஆண்டுதோறும் நவம்பா் மாதம் தொடங்கி […]
திருச்செங்கோட்டை சேர்ந்த இளைஞருக்கு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் இந்து, கிறிஸ்துவம் மற்றும் சுயமரியாதை முறையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், படிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட காதல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது என குறிப்பிடப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாணார் பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகவேல் மற்றும் தமிழரசி தம்பதியரின் மகன் தரணி எம்டெக் படித்துள்ள இவர் ஸ்வீடன் நாட்டில் டெஸ்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் அங்கு […]
17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞர்.குழந்தையை பேற்றெடுத்த சிறுமி. இளைஞர் கூறிய பதிலை கேட்டு செய்வதறியாது திகைத்த பெற்றோர்.கைது செய்த காவல்துறையினர். நாமக்கல் மாவத்தில் உள்ள கொல்லிமலை பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி ஆவார்.இவர் ஆரியூர் நாடு குழிவளவு பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த ஒருவருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நந்தகுமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி தனது […]
ஆற்றங்கரைக்கு திருமணம் செய்து கொள்வதாக வரவழைத்து உல்லாசம் அனுபவித்து கழுத்தை அறுத்து கொலை செய்த ஜோதிடர். பின்னர் காவல்துறையினரிடம் தாமாகவே முன்வந்து சரணடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே ஆண்டிவலசை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள் ஆவார்.இவர் அப்பகுதியில் ஜோதிடராக பணிபுரியும் கந்தசாமியின் மகள் ஆவார். இந்நிலையில் வெள்ளையம்மாளுக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த நபருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.பின்னர் திருமணமான மூன்று மாதங்களில் கணவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்துள்ளனர். […]
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு புதூர் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த மாணவன், வகுப்பிலேயே மலம் கழித்ததற்காக, பள்ளி ஆசிரியை மாணவனையே, சுத்தம் செய்ய வைத்தார். தற்போது 2-ம் வகுப்பு படிக்கும் மாணவனை மனிதக்கழிவு அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஒரு சில ஆசிரியர்கள் அவ்வப்போது பள்ளியில் வேலை செய்ய விடுவதும், அல்லது துன்புறுத்துவதும் ஆங்காகே […]