தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! நாமக்கல் அருகே கோர சம்பவம் …….
நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.இந்த விபத்தில் 15 பயணிகள் காயம்.
நாமக்கல் மாவட்டம் வேளாத்தாகோயில் பேருந்து நிலையம் அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பயணிகள் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர் .
source: dinasuvadu.com