நாமக்கல் : லிப்ட் கேட்டு சென்ற கல்லூரி மாணவியை தலையில் தாக்கி பாலியல் வன்கொடுமை.!

Sexual harassment

நாமக்கல் ராசிபுரத்தில் அறிமுகமில்லா நபர் ஒருவர் லிப்ட் கேட்டு சென்ற கல்லூரி மாணவியை தலையில் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கரூரை சேர்ந்த மாணவி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஓர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று காலை கரூரிலிருந்து ராசிபுரம் சென்றுள்ளார். அப்போது கல்லூரிக்கு நேரமான காரணத்தால் முன்பின் அறிமுகமில்லா இளைஞரிடம் லிப்ட் கேட்டுள்ளார். அவரும் அந்த மாணவியை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில், தனது அக்காவுக்கு பிரசவ வலி என கூறி அருகில் உள்ள காட்டு பாதை வழியாக அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த காட்டுப் பகுதியில் வண்டியை நிறுத்தி மாணவியின் தலையில் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும், மாணவியிடம் இருந்து பணம், செல்ஃபோனை பறித்து அங்கிருந்து மாணவியின் உடைகளையும் சிலவற்றை எடுத்துக்கொண்டு இளைஞர் தப்பி ஓடி விட்டார்.

இதனை அடுத்து இளம்பெண் கூச்சலிட்டதை தொடர்ந்து அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார். உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி தொப்பம்பட்டி ராஜவீதியை சேர்ந்த ஐயப்பன் எனும் மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்