நாமக்கலில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்…!!
நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி மற்றும் குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் கருப்பு பேட்ச் அணிந்து 2500 மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போரட்டம் மற்றும் நாமகிரிப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்றிய செயலாளர் P. இளங்கதிர் தலைமையில் 1000 மாணவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வகுப்புக்கு 130 மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்பு வகுப்புக்கு சென்றனர் நடைபெற்றது மற்றும் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் இராசிபுரம் ஒன்றிய செயலாளர் R. காயத்திரி தலைமையில் 3000 மாணவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வகுப்புகளுக்கு சென்றனர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன் மாவட்ட துணை தலைவர் R. சக்தி அறிஞர் அண்ணா கல்லூரி கிளை செயலாளர் R. பிரபாகரன் கிளை தலைவர் M .மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யபட்டு காவல் நிலையத்தில் வைக்கபட்டுள்ளனர்.