நாமக்கல்லில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்தார். நாமக்கல் மாவட்டம் மோகனுர் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், பட்டாசு கடை உரிமையாளர் தில்லைக்குமார், தாயார் செல்வி, மனைவி பிரியா உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. கிடங்கில் இடமில்லாததால் வீட்டிலும் பதுக்கியபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மோகனுர் டவுனில் […]
மோகனுர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு. நாமக்கல் மாவட்டம் மோகனுர் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் பட்டாசு கடை உரிமையாளர் தில்லைக்குமார் மற்றும் மூதாட்டி பெரியக்காள் (73) ஆகிய 2 பேர் உயிரிழந்திருந்த நிலையில், படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தில்லைக்ககுமாரின் தாயார் உடலும் இடிபாடுகளுக்குள் இருந்து தற்போது மீட்க்கப்பட்டுள்ளது. […]
கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. நாமக்கல் மாவட்டத்திற்கு கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அறிவித்துள்ளார். இதுபோன்று கொல்லிமலையில் ஆகஸ்ட் 1 முதல் 3-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கொல்லிமலை செம்மேடு, சோளக்காடு, செங்கரையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சற்று நேரத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்.“உள்ளாட்சியிலும் நல்லாட்சி” என்ற தலைப்பில்,காலை 9.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். மேலும்,திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்,டிஆர்பாலு உள்ளிட்டோரும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.இதனிடையே,முதல்வரின் வருகையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்,டிரோன் […]
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மதுபாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப கொடுத்து விட்டு,பாட்டிலுக்கு கூடுதலாக பெறப்பட்ட ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.காலி மதுபாட்டில்களை சாலையோரங்கள், விளைநிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வீசி செல்வதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே,திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.அதன்படி, கொடைக்கானலில் உள்ள 10 […]
வருகின்ற ஜூலை 3 ஆம் தேதி முதல்வரும்,திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுகவின் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெறவுள்ளதாக அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி,ஜூலை 3 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் காலை 9.30 மணி முதல் 5 மணி வரை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.மேலும், உள்ளாட்சியிலும் நல்லாட்சி உள்ளிட்ட தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசுவார்கள் என்றும்,திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி […]
பிட் பேப்பர் கண்டறியப்பட்ட விவகாரத்தில் 11 தேர்வறை கண்காணிப்பாளர்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடவடிக்கை. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பிட் பேப்பர் கண்டறியப்பட்ட விவகாரத்தில் 11 தேர்வறை கண்காணிப்பாளர்களை (ஆசிரியர்கள்) சஸ்பெண்ட் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பொதுத்தேர்வு மையங்களில் 5 கிலோ பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பிட் பேப்பர்கள் சிக்கிய தேர்வு மையங்களில் பணியாற்றி வந்த கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய தேர்வறை கண்காணிப்பாளர்களை நியமித்து […]
நாகை மாவட்டம் திருமருகல் அருகே, உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் தேரின் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு. நாகை மாவட்டம் திருமருகல் அருகே, உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் தேரின் சக்கரத்திற்கு முட்டுக்கட்டை வைத்த போது, சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் தீபராஜன் என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், நாகை மாவட்டத்தில் தேரின் […]
கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சராக இருந்த சரோஜா,சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ரூ.76 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு மோசடி செய்ததாக அவரது உறவினரான ராசிபுரத்தை சேர்ந்த குணசீலன் என்பவர் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து,காவல்துறையினர் சரோஜாவை கைது செய்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து,முன்ஜாமீன் கேட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் சரோஜா மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை […]
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்,சிவகுமார் என்பவரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியிருந்த நிலையில்,அதற்கு தவணை தொகையை செலுத்த சென்ற அவரது மகளை,சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் பலாத்காரம் செய்து,வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றினர். இதனையடுத்து,மனமுடைந்த அப்பெண்ணின் தாயார் இந்த பதிவை நீக்க உதவிடக் கோரி,அப்பகுதியை சேர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் வேலுசாமி அவர்களிடம் கெஞ்சியதை அடுத்து,அப்பெண்ணுக்கு உதவியாக,போலீசில் புகார் அளித்துவிட்டு இரவில் வீடு திரும்பிய வேலுசாமி அவர்களை […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதேனுமிருப்பின் தேர்தல் பார்வையாளரின் அலைபேசி எண்ணை வெளியிட்ட நாமக்கல் ஆட்சியர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம்காட்டி வருகிறது. இந்த நிலையில், தேர்தல் பார்வையாளர் செல்போன் எண்னை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், நாமக்கல் மாவட்ட சாதாரண நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளராக ஜெ.இன்னசென்ட் திவ்யா., இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், […]
நாமக்கல்:திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடை திறக்கப்பட்டு 1,00,008 வடமாலை சாத்தப்பட்டுள்ளது. மேலும்,கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.குறிப்பாக,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில்,திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு […]
புதுசத்திரம் அரசு பள்ளியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியரை கேலி செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 3 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம். நாமக்கல் அருகே,புதுசத்திரம் அரசு பள்ளியில் பன்னீர் என்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர் வரலாற்றுப் பாடம் எடுத்து வருகிறார்.அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வழக்கம்போல் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது,பாடத்தை கவனிக்காமல் மாணவர்கள் சிலர் ஆசிரியர் முன் எழுந்து நின்று கேலி கிண்டலுடன் ஆட்டம் போட்டனர். பின்னர் அதை […]