சென்னையில் இருந்து சென்ற அரசு பேருந்து மீது நாகைப்பட்டினம் அருகே உள்ள சீர்காழி புறவழிச்சாலையில் கல்வீச்சு நடந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்
நாகைமாவட்டம் ,பொறையார் TBML கல்லூரியில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி மாணவர்கள் போராட்டம். போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் ஊழியர்களின் ஓய்வூதிய பாக்கியை முழுமையாக வழங்கு போன்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெறும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும். ஊழியர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத தமிழக அரசைக் கண்டித்தும் . இந்திய மாணவர் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் […]
நாகைப்பட்டினம் : வேதாரண்யம் விவசாயிகளின் 22நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். விவசாயிகளுடன் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைதுறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து விவசாயிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை கிராம மீனவர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் அதிகப்படியான கடல்சீற்றத்தால் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் அனைத்து நாட்டு படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம் அருகே உள்ள வெளிப்பாளையத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவர் கடந்த 31ஆம் தேதி தனது நண்பர்கள் 5 பேருடன் கருவைக் காட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மதியழகனின் தலையை வெட்டித் துண்டாக்கிய மற்ற ஐவரும், உடலையும் தலையையும் குழி தோண்டி புதைத்துவிட்டுச் சென்றுள்ளனர். மதியழகனை உறவினர்கள் தேடி வந்த நிலையில், போலீசாரிடம் சரணடைந்த மாரியப்பன் என்பவர் கொலை நடந்தது குறித்து வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், […]
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் காற்றுடன் கூடிய கடல் சீற்றமாக காணப்படுகிறது .இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை . நாகப்பட்டினம் அருகே உள்ள வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றமாக காணப்படுகிறது.இந்த கடல்சீற்றத்தால் வேதாரண்யம் மற்றும் ஆறுகாட்டுத்துறை கிராம மீனவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கடலுக்குச் செல்லவில்லை. எனவே விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதனால் மீனவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்… source: dinasuvadu.com
நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் அருகே உள்ள மணியன் தீவு கடற்கரையில் இலங்கையை சேர்ந்த பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இப்படகானது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகா என கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரியின் 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.. அதேபோன்று தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் சுனாமியால் பலியானவர்களுக்கான 13 ஆம் ஆண்டு நினைவுதின அமைதிப்பேரணி நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து 3 கி.மீ. தூரம் வரை மீனவர்கள், பொதுமக்கள் பேரணி செல்கின்றனர்.
ஒகி புயலில் சிக்கிய மீனவர்களை காப்பாற்றாத தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக மீட்க வலியுறுத்தியும் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ஆர்ப் பாட்டம் செய்வதற்காக பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலும், முன்னாள் பொதுச் செயலாளர் அய்யப்பன் முன்னிலையிலும், நாகை மாவட்ட தலைவர் கோபி மற்றும் பா.ம.க.வினர் சுமார் 10-க்கும் மேற்பட்ட கார்களில் வந்தனர். பின்னர் அவர்கள் நாகை பழைய பஸ் நிலையம் அருகே சென்று […]
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட சங்கரன்பந்தல் மருத்துவமனை ஆகும். இங்கு சுமார் 24 கிராம மக்களின் மருத்துவ சேவை மையமாக உள்ளது சுமார் 50 வருடங்களாக இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆட்சிகள் மாறினாலும் இந்த மருத்துவ மனைகளின் காட்சிகள் மாறுவதில்லை. இந்த மருத்துவ மனையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகவும் பழடைந்து நிலையில் காணப்படுகின்றன. உள்ளிருக்கும் இரும்பு மற்றும் சிமெண்ட் செகில்கள் கீழே விழும் நிலையில் ஆபாய காட்சியாகவே காணப்படுகின்றன. இவற்றை மறு சீரமைப்பு செய்யும் […]
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக நாகையில் பேரணி நடத்த போலீசார் தடை, தடையை மீறி மீனவர்கள் குவிந்து வருவதால் பதற்றம்
காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தினர், மீனவர்கள் போராட்டம் கடந்த 24 ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் இதுவரை திரும்பவில்லை.
நாகையில் 2 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சுவார்த்தை
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் மீனவர் காலனியைச் சேர்ந்த அஞ்சப்பன், சின்னையன், கல்விச்செல்வன், இளங்கோவன் உட்பட 13 பேர் மீனவர்கள் ராஜி என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த மாதம் 26ம் தேதி கன்னியாகுமரி பகுதியில் உள்ள தூத்தூரில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது ஓகி புயலில் சிக்கிய அவர்களின் படகு சிதிலம் அடைந்து, சின்னபின்னமானது. இதில், தத்தளித்த மீனவர்களை கேரள அரசு மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் சொந்த ஊரான புஷ்பவனத்திற்கு […]
நாகை மாவட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இந்நிலையில் அவர்களை விசாரித்த இலங்கை நீதிமன்றம் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்கு அவர்களை டிசம்பர் 11 வரை காவல் நீட்டித்து உத்தரவு பிரபித்துள்ளது. இந்த வழக்கை இலங்கையில் உள்ள பருத்தித்துறை நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் இந்த வருடம் பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகமே ஸ்தம்பித்து போனது. இதில் சென்னை, நாகபட்டினம், கடலூர் போன்ற மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின. இதில் நாகபட்டினம் மாவட்டதிலிலுள்ள வேதாரண்யம் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் மழை நின்று 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக வேதாரண்யம் சுற்று வட்டார பகுதி விவசாய நிலங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.அந்த பகுதியிலிலுள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் மழைநீர் வடியாமல் […]