தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது.இதனால் மக்கள் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் குமரி, நாகை, தர்மபுரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ள நிலையில், சேலத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.இந்நிலையில் சேலத்தில் வெயில் வாட்டிய நிலையில் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். மேலும் தர்மபுரிமாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நேற்றுமாலை கனமழை பெய்தது. சுமரர் ஒருமணி நேரம் […]
மணல் கடத்தலை தடுத்து நிறுத்திய பெண் அதிகாரியை மிரட்டிய மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த நபர்களை அஞ்சாமல் மடக்கி பிடித்துள்ளார். இந்நிலையில் இந்த மணல் கொள்ளை நாகையை அடுத்த நாகூர் கடற்கரையில், கடல் மணல் கடத்தப்படுவதாக கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் வந்துது. இதையடுத்து அந்த புகாரின் அடிப்படையில் அங்கு விரைந்த கனிமவளத்துறை அதிகாரிகளை கண்டதும், கடத்தல்காரர்கள் தப்ப முயன்றனர்.ஆனால்அவர்களை தடுத்த கனிமவளத்துறை இயக்குனர் , மணல் ஏற்றிவந்த 3 டிராக்டர்களை மடக்கி பிடித்தனர். […]
தமிழக நாகை மீனவர்களை இலங்கையே சேர்ந்தவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர் நாகை மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களை கொடூரமாக தாக்கி, இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீன்பிடி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதில் நாகை, செருதூரை சேர்ந்த தமிழ் செல்வன் என்பவர், தமக்கு சொந்தமான பைபர் படகில் கந்தவேல், முருகானந்தம் ஆகியோருடன் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு படகில் வந்த இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழக மீனவர்களை அரிவாள், கட்டை உள்ளிட்டவற்றால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த […]
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், தலையாமழை கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி ராமமூர்த்தி (49). இவர் இரண்டரை ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.இவ்வாண்டு, மேட்டூர் அணை நிரம்பிக் காவிரியில் கரைபுரண்டு தண்ணீர் வந்து, கடைமடைப் பகுதிக்கும் வந்து, வயல்களில் விளைச்சல் செழிக்கும் என்று எதிர்பார்த்து கூடுதலாக 6 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயத்தை ஆரம்பித்தார். இதற்காக நிறைய கடன் வாங்கினார். காவிரி நீரெல்லாம், கடலுக்குச் சென்று பாய்ந்ததே தவிர, […]
நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்மூட்டைகள் தேக்கம் காரணமாக கொள்முதல் பணிகள் முறையாக நடைபெறவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள 121 நேரடி கொள்முதல் நிலையங்களில், 4 ஆயிரம் மூட்டை வரை விவசாயிகள் நெல்லை கொடு வருகின்றனர். வரத்து அதிகமாக உள்ள நிலையில், 800 மூட்டை நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் அறுவடை […]
சொந்த உறவுமுறையில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். நாகையில், மத்திய அரசின் ராஷ்டிரிய யோஜனா திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றிய ஓ.எஸ்.மணியன், குழந்தைகள் ஊனமாக பிறப்பதற்கு முக்கிய காரணம் சொந்த உறவு முறையில் திருமணம் செய்து கொள்வதுதான் என்றும், இது அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால், சொந்தத்தில் திருமணம் செய்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும் […]
நாகை: தங்கமீன் விடும் விழாவை முன்னிட்டு அமைச்சர் ஜெயக்குமாரை கடலுக்கு தூக்கிச்சென்று மீனவர்கள் ஆரவாரம் செய்தனர். நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ குலத்தில் பிறந்த அதிபக்த நாயன்மார். 63 நாயன்மார்களில் ஒருவரான இவரை சிவபெருமானிடம் பக்தி கொண்டு தான் பிடிக்கும் முதல் மீனை சுவாமிக்காக கடலில் விடுவது வழக்கம். இவரது பக்தியை சோதித்த சிவபெருமான் இவரது கையில் தங்க மீன் ஒன்றை கிடைக்கும்படி செய்தார்.அதிபக்தநாயனார் அம்மீனையும் சிவபெருமானுக்காக வேண்டிக்கொண்டு கடலில் விட்டார்.தங்கமீன் விடும் விழா அதிபக்தநாயனாரின் தெய்வ […]
நாகை மாவட்ட மீனவர்கள் சென்ற நாட்டுப்படகு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதில் படகில் இருந்த 6 பேரை இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். எஞ்சிய 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் தேடி வருகின்றனர். DINASUVADU
நாகை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூரில் வாகன சோதனையின் போலிசார் ஈடுபட்டபோது அந்த வழியே வந்த பிரபல ரவுடியான கலைவாணனை நிறுத்தி விசாரித்தனர். அவன் வைத்திருந்த 5 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை திருச்சியில் இருந்து வெடிகுண்டுகள் செயலிழப்பு சிறப்பு பிரிவு போலீசார் மணல் மூட்டைகளை அடுக்கி, பலத்த பாதுகாப்புடன் வெடிக்க வைத்து அழித்தனர்.இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.வெடித்த குண்டுகளில் இருந்து சிதறிய வெடிமருந்து, மற்றும் ஆணிகளை ஆய்வுக்காக போலீசார் […]
விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் சிலையை பொது இடத்தில் வைக்க அனுமதி பெற வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.மேலும் சிலை உள்ள இடத்தில் அரசியல் தலைவர்கள், மத தலைவர்களின் பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடை என்றும் தெரிவித்துள்ளார். DINASUVADU
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 192 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரியகுத்தகையில் இருந்து படகில் கடத்த இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலோர காவல்படை இலங்கையை சேர்ந்த சக்திவேல், தமிழகத்தை சேர்ந்த ரமேஷ் கைது செய்து படகை பறிமுதல் செய்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாகை அருகே சீர்காழியில் அதிமுக பிரமுகர் ரமேஷ்பாபு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார். சீர்காழியில் கொள்ளிடம் ஒன்றிய அதிமுக மாணவர் அணி செயலாளர் ரமேஷ் பாபு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாகப்பட்டினத்தில் மீனவர்கள் 5,000 பேர் கடந்த 2 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். நாகப்பட்டினத்தில் பழையாறு மீனவர்கள் 5,000 பேர் கடந்த 2 நாட்களாக நடத்தி வந்தனர்.இந்நிலையில் தற்போது சுருக்குவலை, இரட்டை மடிவலை, இழுவை வலை, அதிவேக என்ஜின்களை தடை செய்ய கோரிக்கை உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர், மீன்வளத்துறை இணை இயக்குநர் அளித்த உறுதியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நாகை பழையாறு மீனவர்கள் சுமார் 500 பேர் 2வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் பழையாறு பகுதியில் மீனவர்கள் சுமார் 500 பேர் 2வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.சுருக்குவலை, இரட்டை மடிவலை, இழுவை வலை, அதிவேக சீன என்ஜின்களை தடை செய்ய கோரிக்கை மீனவர்கள் வேலைநிறுத்ததால் 180 விசைப்படகுகள் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.
பழுதடைந்த சிமெண்ட் பாலத்திற்கு பதிலாக, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை எழுந்துள்ளது. தகட்டூர் பைரவர் கோவில் செல்லும் வழியில் முல்லை ஆற்றின் குறுக்கே உள்ள இந்தப் பாலம் 5 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. அரசுப் பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிக்கு செல்லும் மாணவர்கள் ஆபத்தான இந்தப் பாலத்தை கடந்து செல்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நிகழும் முன் பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடற்கரையில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மீனவர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வேதாரண்யம் சன்னதி கடற்கரை பகுதியில் திடக்கழிவு மேலாண்மைதிட்டத்தின் கீழ் குப்பைக் கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு குப்பை கிடங்கு அமைக்கக்கூடாது என ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த மீனவமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு குப்பை கிடங்கு அமைப்பதற்காக இன்று ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழிதோண்டும் பணி தொடங்கியது. இதையறிந்த கிராமமக்கள் கிடங்கு […]
நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்கா கந்தூரி விழா வெகுவிமர்சனமாக நடைபெறுவது வழக்கம்.இது முஸ்லிம் மக்களின் விழா எனினும் ஜாதியம் கடந்து ,மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விழாவாக இந்த விழா இருந்து வருகிறது. அகவே இவ்விழாவை முன்னிட்டு, நாகைப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவிப்பு செய்துள்ளார்.
நாகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் பந்தயம் கோலாகலம் . காணும் பொங்கலன்று நடைபெறும் இந்த பந்தயம் ஒருங்கிணைந்த தஞ்சை, நாகை, திருவாருர் மாவட்டங்கள் அளவில் நடைபெறுகிறது. திருக்கடையூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பந்தயம் மாடுகள் மற்றும் குதிரைகளில் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. மாடுகள், குதிரைகள் மற்றும் வீரர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு போட்டிகளில் பங்கேற்க அனுமதிகப்பட்டனர். காலையில் தொடங்கிய போட்டிகள் மாலை வரை நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற […]
சென்னையில் இருந்து சென்ற அரசு பேருந்து மீது நாகைப்பட்டினம் அருகே உள்ள சீர்காழி புறவழிச்சாலையில் கல்வீச்சு நடந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்