பயங்கரவாதிகள் 6 பேர் தமிழ்நாட்டில் ஊடுருவியதாக வந்த தகவலின் பேரில், தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். இதில், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகூரில், சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர், இவர் பெயர் சையத் அபுதாஹீர். இவர் தனது மாமனார் வீட்டிற்கு நாகூருக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவரது, செல்போன் சிக்னல் மூலம் இலங்கைக்கு கால் சென்றுள்ளதால், இவரை பிடித்துள்ளதாக […]
நமக்கு காதலே வேண்டாம்! என்று கூறும் பொண்ண பாத்தா மன்ன பாத்து நடக்கும் முரட்டு சிங்கிள்ஸ்க்காக உணவகத்தில் ஒரு பாகத்தை ஒதுக்கி, 50% தள்ளுபடியும் வழங்கி வருகிறது, மயிலாடுதுறையில் உள்ள ஒரு உணவகம். தற்பொழுது உள்ள இளைஞர்கள், சிங்கள் என்று கூறுவதை விட, முரட்டு சிங்கள் என்று கூறி வருகின்றனர். இதனால் #Morattusingle என்ற ஹாஷ்டாக் உருவானது. இதனால் கவரப்பட்ட மயிலாடுதுறையில் உள்ள ஒரு உணவகம், தங்களது உணவகத்தில் ஒரு பகுதியை முரட்டு சிங்கிள்ஸ்க்காக ஒதுக்கி, 50% […]
சித்திரை மாதத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல கோவில்களில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதே நேரத்தில் பல அசம்பாவிதங்கள் நடக்கின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வானகிரியில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் விழாவில் வானகிரி சுற்றி உள்ள கிராம மக்கள் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.இந்த திருவிழாவில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட அனைத்து குழந்தைகளும் வாந்தி,மயக்கம்ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசு […]
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள மாந்தை என்ற இடத்தில் மலிவாகக் கிடைக்கும் மது பாட்டில்களை கடத்துவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், அந்த வழியே வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது 32 அட்டை பெட்டிகளில் 1536 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தின் ஓட்டுநர் ராஜ் என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். […]
பழுதடைந்த நாகை – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் மோசமான நிலையில் இருந்து வந்த நிலையில், 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகைக்குள், நாகை – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் கூறியுள்ளார்.
நாகை மாவட்டத்தில் கடும் பனி பொழிவால் சம்பா நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நாகை, மயிலாடுதுறை, செம்பனார்கோயில், தரங்கம்பாடி, பொறையாறு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. காலை 8 மணி வரை பனி சூழ்ந்து காணப்படுகிறது. அருகில் உள்ள கட்டிடங்கள் தெரியாத அளவில் பனிப்பொழிவு இருந்ததால், கடும் குளிர் நிலவியது. இதனால் அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்கள் சிரமப்பட்டனர். மூடு பனி நிலவுவதால், சம்பா நெற்பயிர்களில் பூச்சி தாக்குதல் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. […]
தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க அறிக்கை மூலம் பரிந்துரை செய்யப்படும் என்று மத்திய தோட்டக்கலைத்துறை இணை செயலாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய தோட்டக்கலைத்துறை இணை செயலாளர் தினேஷ் குமார் கூறுகையில்,கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்விற்கு மத்திய அரசு துணை நிற்கும் .பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்புக்காக மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க அறிக்கை மூலம் பரிந்துரை செய்யப்படும் என்றும் மத்திய தோட்டக்கலைத்துறை இணை செயலாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தரங்கம்பாடி அருகே வறுமையிலும் ஆதரவற்ற முதியவர்களுக்கு தினமும் உணவு வழங்கி வரும் இளைஞருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். நாகை மாவட்டம் பெரம்பூரைச் சேர்ந்தவர் பாரதிமோகன். கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், தனது வீட்டிலேயே உணவு சமைத்து, அதனை பூம்புகார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் உள்ள ஆதரவற்ற முதியவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார். மேலும் இவருக்கு முகநூல் நண்பர்களும் […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை வழங்கினார்கள். கடந்த நவம்பர் 20 ஆம் தேதி கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் திரும்பினார் முதலமைச்சர் பழனிச்சாமி.புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களை மட்டும் ஆய்வு செய்து பாதியில் திரும்பினார்.மோசமான வானிலை காரணமாக முதலமைச்சர் பழனிச்சாமியின் பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. புயல் பாதித்த நாகையை முதலமைச்சர் பழனிச்சாமி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்வார் என்று கூறப்பட்ட நிலையில், […]
நாகையில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனை, மர்ம கும்பல் ஒன்று கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள குட்டியாண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேச மூர்த்தி என்பவரின் மகன் கணேஷ் விஷால்.வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த கணேஷை மர்மகும்பல் காரில் கடத்திச் சென்றுள்ளது. சிறுவன் அதிக கூச்சலிடவே அவனை காரில் இருந்து கீழே வீசிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள் உதவியுடன் கணேஷ் விஷால் வீடு திரும்பி நடந்த சம்பவம் குறித்து […]
கஜா புயல் பாதிப்புகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் கூறுகையில், தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் பார்வையிடுவது சாத்தியமில்லை அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்வோம்.கஜா புயல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது; சீரமைப்பு மேற்கொள்ள நீண்ட காலம் தேவைப்படுகிறது என்றும் மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.
நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கஜா புயலில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக நாகை மாவட்டம் உள்ளது.மேலும் மாவட்டத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவாதலும்,மக்கள் பள்ளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு சீரமைப்பு பணிகள் தொடர்கிறது மின்சார உள்ளிட்ட தேவைகள் தற்போது வரை முழுமையாக சரிசெய்யப்படாத நிலையில் நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுவதாக ஆட்சியர் சுரேஷ் அறிவித்துள்ளார். DINASUVADU
நாகை மாவட்டத்திற்கு லாரிகள் மூலம் வந்துள்ள பல்வேறு நிவாரணப்பொருட்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கஜா புயலால் பாதிக்கப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நாகப்பட்டினத்திற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லாரிகள் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு வரவழைக்கபட்ட பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.சோப்பு, பால் பவுடர், பிஸ்கட், அரிசி என அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி […]
தஞ்சை,திரூவாரூர்,நாகை ,புதுகோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மக்களுக்கு பெட்ரோல்,டீசல் தேவைக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் த்மிழத்தில் 4 மாவட்டங்களை உலுக்கி எடுத்துள்ளது.இதில் நாகை,தஞ்சை,புதுக்கோட்டை,திருவாரூர் மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.இதனால் மாவட்டங்களில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் தேவைக்கு சிரமப்பட்டு வருகின்ற நிலையில் இந்திய ஆயில்பெட்ரோலிய நிறுவனம் தன் பங்கிற்கு 4 மாவட்டங்களுக்கு உதவும் வகையில் உதவி எண்களை தெரிவித்துள்ளது.இந்த 4 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தேவைக்கு இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனம் தஞ்சை […]
கஜா உண்டாக்கிய பலத்த சேதத்தால் ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை மாவட்டத்தி உள்ள வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவாளை தாலுகாவிற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. DINASUVADU
நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். கஜா புயல் கடலோர மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின் தரங்கம்பாடி கடற்கரை பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
நாகையில் மின்மாற்றியை சீர்செய்தபோது கீழே விழுந்து மின் ஊழியர் சண்முகம் என்பவர் உயிரிழந்துள்ளார். கஜா புயலின் கோர தாண்டவத்தால் தமிழகத்தில் பல பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.இதனால் சேதமடைந்தவற்றை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புயல் தாக்கத்தால் நாகையிலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நாகையில் மின்மாற்றியை சீர்செய்தபோது கீழே விழுந்து மின் ஊழியர் சண்முகம் என்பவர் உயிரிழந்துள்ளார்.மின்மாற்றியில் இருந்து கீழே விழுந்த ஊழியர் சண்முகம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தார்
நாகையில் மக்கள் தங்கியுள்ள முகாம்களில் உணவு ,தண்ணீரின்றி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தஞ்சை,கடலூர்,ராமாநாதபுரம்,நாகை,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இந்த புயலால் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வந்திருக்கிறது. புயல் வருவதற்கு முன்பே தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள், குடிசையில் வசிப்பவர்கள் என 81,948 பேர் முன்னெச்சரிக்கையாக 471 முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் மக்கள் பள்ளி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் உணவு மற்றும் தண்ணீரின்றி தவித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது.உணவின்றி […]
நாகை மாவட்டத்தில் மின்விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். கஜா புயலால் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்துள்ளது. மின்கம்பங்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அந்த மாவட்டம் முழுவதும் சீர்குலைந்துள்ளது. மேலும் நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கஜா புயலின் எதிரொளிப்பையடுத்து பல்வேறு மாவட்டங்களில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்திற்கு ஏற்கனேவே 3 பேரிடர் மீட்பு குழுக்கள் வந்துள்ள நிலையில், மேலும் ஒரு பேரிடர் மீட்பு குழு வந்துள்ளது.