மயிலாடுதுறையில் போராட்டத்தில் ஈடுப்படும் மீனவர்கள் தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்றம் கடல் வளத்தை பாதுகாக்க சுருக்குமடி வலை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 மீனவ கிராமங்கள் சுருக்குமடி வலையை ஆதரித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 17-ஆம் தேதி முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் 2-வது நாளான நேற்று […]
நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவிலில் இன்று நடைபெற்ற பிரார்த்தனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டுள்ளார். நிவர் மற்றும் புரவி புயல் குறித்ததான வெள்ள பாதிப்புகளை அறிந்து கொள்வதற்காக முதல்வர் நேற்று கடலூர் சென்று ஆய்வுகளை முடித்துக்கொண்டு இரவு நாகை வேளாங்கண்ணி கோவிலுக்குச் சென்று தங்கியிருந்தார். இன்று நாகையில் வெள்ளம் குறித்ததான ஆய்வை துவங்குவதற்கு முன்னதாக நாகை வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற காலை நேர பிரார்த்தனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பங்கேற்றுள்ளார். முதல்வருக்கு […]
நிவர் புயல் நெருங்கி வருவதால், நாகை மற்றும் காரைக்காலில் ஐந்தாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடும் சூறாவளிப் புயலாக உருவாகியுள்ள நிலையில், வருகிற புதன்கிழமை காரைக்கால் மாமல்லபுரம் இடையேயான கரையை இந்த புயல் கடக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி முதல் விசாகப்பட்டினம் வரை உள்ள அனைத்து துறைமுகங்களிலும் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தற்பொழுது […]
நாகையில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி. நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்தில், வருடம் தோறும் 10 நாட்கள் திருவிழா அட்டகாசமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இந்த வருடம் பக்தர்கள் இன்றி மிகவும் சாதாரணமான நிலையில் திருவிழா நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட இந்த திருவிழாவில், பக்தர்கள் வருவதை தடுப்பதற்காக 8 வழிகளும் ஆலயத்தை சுற்றி அடைக்கப்பட்ட நிலையிலேயே கடந்த ஒன்பது […]
நாகை மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களிடம் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் 3.5 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்றுள்ளனர். நாகையில் உள்ள மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், ராஜா, சம்பந்தன் மற்றும் ராமகண்ணு ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த 29ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. கோடியக்கரைக்கு தென்கிழக்கே 30 மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ஐந்து அதிவேக படகுகளில் வந்த […]
வருகின்ற 29 ஆம் தேதி நாகை வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மிக பெரிய கிறிஸ்தவர்களின் ஆலயம் தான் வேளாங்கண்ணி மாதா பேராலயம். இங்கு வருடந்தோறும் கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆனால், இந்த வருடம் கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் திருவிழா நடைபெற உள்ளது. இந்த வருடம் கோவில் திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் என கோவில் […]
தனது பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யும் ஆசிரியர் கமலவல்லி. இந்திய முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் குடும்பத்திற்கு ஆசிரியர் கமலவள்ளி தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கருப்பம்புலம் கிராமத்தில் உள்ளது ஞானாம்பிகா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் […]
சீனாவில் உருவாகி தற்போது உலகம் முழுவதும் ஆக்கிரமித்து வரக்கூடிய வைரஸ் தான் கொரோனா. இது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை, இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் இதன் தொற்று அதிகரித்து வருகிற நிலையில், சுகாதாரத்துறையினர் தீவிரநடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இதன் தொற்று அதிகரித்து வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள ஒருவருக்கும் இந்த கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அடைந்து 5 வார்டுகளுக்கு […]
தலைக்கவசம் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மிக முக்கியம் என்று எவ்வளவு தான் சொன்னாலும் யாரும் அதை கண்டுகொள்வதே இல்லை. இதற்கான நடவடிக்கைகளாக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் ஒன்றும் நடைமுறை நிலையில் சரிப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்பொழுது நாகை மாவட்டத்தில் தலைக்கவசம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டிக் கொண்டு செல்பவர்களுக்கு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளவர்கள் உத்தரவை மீறி வெளியே சுற்றினால் அவர்களுக்கான பாஸ்போர்ட் […]
நாகை மாவட்டத்தில் 8வது நாளாக மீனவர்கள் முடங்கியுள்ளனர். இதனால் ரூ10 கோடி வர்த்தகம் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தங்களது வாழ்வாதாரதிற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அம்மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை என கடந்த 19ம் தேதி மாலை முடிவு செய்தனர். அவ்வாறு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை பஞ்சாயத்தார் மூலமாக திரும்ப வர அழைப்பு விடுக்கப்பட்டது. சரியாக மார்ச்.,20ம் தேதியிலிருந்து மீன் இறங்குதளம், ஏலம் விடும் […]
கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களை விட, பாதிக்கப்படாதவர்கள் தான் அதிகம் பயப்பட வேண்டி உள்ளது. ஏனெனில் அது குறித்த வதந்திகள் அதிகம் கிளம்பி வருகிறது. இந்நிலையில் லண்டனில் இருந்து தனது மனைவியை பார்க்க தாயகமாகிய தமிழகத்தில் உள்ள நாகை மாவட்டத்துக்கு திரும்பியவர் தான் பொறியாளர் சூரியநாராயணன்னின் மகன் ஆனந்த். இவர் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சிறு வேலை காரணமாக லண்டன் […]
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.மேலும் மத்திய,மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் உலகபுகழ்ப்பெற்ற கிறிஸ்தவர்களின் முக்கியத்தலமாக விளங்கும் தளமான வேளாங்கண்ணி பேரலாயம் மூடப்பட்டது.தினமும் நடைபெறும் திருப்பலி நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.மேலும் வேளாண் மண்டலங்களை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும்;ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அனுமதி தராது என்றும் அறிவித்துள்ளார். இன்று சேலத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் முதலில் சேலத்தில் வாழப்பாடியில் உள்ள காட்டுவேப்பேரிபட்டியில் புதிய அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.இதன்பின் அம்மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி பேசினார் அதில் காவிரி டெல்டா பகுதி […]
சீமான் செய்த செயல் காண்போரை கண் கலங்க வைத்த சம்பவம். சீமானுக்கு நெருங்கிய தொடர்பில் இருந்தவருக்கு ஏற்பட்ட சோகம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எருக்கூர் அருகே இருக்கும் தில்லை பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு என்கிற அன்புசெழியன் ஆவார்.இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இருப்பினும் சீமானின் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களில் அன்பு செழியனும் ஒருவர் ஆவார்.இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அன்பு செழியன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார். இவரது […]
தனது காதலனுடன் தனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியதை நம்பி மகிழ்ச்சியுடன் கிளம்பி வந்த இளம்பெண்.காதல்நின் தந்தை செய்த கொடுமை. ஊர் மக்கள் அனைவரையும் வியப்படைய செய்த காதலன். நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்தியானந்தம் ஆவார்.அமமுக நிர்வாகியாக உள்ள இவர் ஜவுளி கடை வைத்துள்ளார்.இவரது மகன் முகேஷ் கண்ணன் ஆவார். இவர் கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் படிக்கும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.தற்போது இருவரும் […]
மஹாராஷ்டிராவில் இருந்த வந்த லாரியில் 21 டன் வெங்காயம், சீர்காழியில் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வெங்காயம், வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்டதா? என்ற கோணத்தில் காவல் துறையில் விசாரித்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலையொட்டி, நாகை மாவட்டம், சீர்காழி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு சரக்கு லாரி வந்தது. அந்த லாரியில் 21 டன் வெங்காயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் விசாரிக்கையில், அந்த வெங்காயங்கள், மகாராஷ்டிரா மாநிலம், […]
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் தற்போது அனேக இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஏற்கனவே திருவாரூர் மாவட்டம், தேனி மாவட்டம், கடலூர் மாவட்டம், நாகை மாவட்டம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மழை பெய்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 8 மணிக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானதால் கிராமப்புறங்களிலிருந்து வரும் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு வந்த பிறகு திரும்பி […]
நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ள வாழ்மங்கலம் பகுதியை சார்ந்தவர் உமா மகேஸ்வரி. இவருக்கு 17 வயதில் அனிதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது)என்ற மகள் உள்ளார்.அனிதா அதே பகுதியை சார்ந்த ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அனிதாவின் காதலுக்கு தாய் உமா மகேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணெய் ஊற்றி அனிதாவை கொளுத்தி உள்ளார்.மேலும் உமா மகேஸ்வரியும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து உள்ளார். இதை தொடர்ந்து அனிதாவையும் ,அவரது தாய் உமா மகேஸ்வரி ஆகிய இருவரையும் […]
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சார்ந்தவர் கனிமொழி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவர் தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகை மாவட்டம் திட்டச்சேரி உதவி ஆய்வாளராக வேலைசெய்து வருபவர் விவேக் ரவிராஜ்.இருவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தது மூலம் அப்பெண் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதை அறிந்த விவேக் அப்பெண்ணிடம் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்வதாக கூறி கருவை கலைக்க வற்புறுத்தியுள்ளார். […]
வேதாரண்யம் அருகே தனியார் பள்ளியில் ரூ.1,00,000 மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து செல்லப்பட்டது தொடர்பாக காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி என்ற இடத்தில் தனியார் பள்ளி ஓன்று இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இரவு பள்ளியை வழக்கம்போல் பூட்டிவிட்டு சென்றனர். அன்று நள்ளிரவு பள்ளிக்குள் புகுந்த திருடன் அங்குள்ள பீரோவில் இருந்த ரூ.52000 பணம் மற்றும் 1 லேப்-டாப், கம்ப்யூட்டருக்கான சாதனங்கள உள்பட ரூ.1,00,000 மதிப்பிலான பொருட்களை […]