நாகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் பந்தயம் கோலாகலம்!
நாகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் பந்தயம் கோலாகலம் .
காணும் பொங்கலன்று நடைபெறும் இந்த பந்தயம் ஒருங்கிணைந்த தஞ்சை, நாகை, திருவாருர் மாவட்டங்கள் அளவில் நடைபெறுகிறது.
திருக்கடையூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பந்தயம் மாடுகள் மற்றும் குதிரைகளில் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது.
மாடுகள், குதிரைகள் மற்றும் வீரர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு போட்டிகளில் பங்கேற்க அனுமதிகப்பட்டனர். காலையில் தொடங்கிய போட்டிகள் மாலை வரை நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டிகளை சாலையின் இரு புறங்களிலும் இருந்து ஆயிரக்கனக்கான மக்கள் கண்டு ரசித்தனர்…
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …