பெண் மருத்துவரின் ஹிஜாப் விவகாரம்… கட்சி நிர்வாகி கைது.! பாஜகவினர் போராட்டம்.!
ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை வீடியோ எடுத்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் கைது செய்யப்பட்டார்.
சில தினங்களுக்கு முன்னர் நாகை மாவட்டம் திருப்பூண்டியில் அரசு ஆரம்ப சுகாதர நிலைத்தில் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஜன்னத்திடம் , பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் , ஜன்னத் அணிந்து இருந்த ஹிஜாப் குறித்து கேள்வி எழுப்பி பணியில் இருக்கும் போது மருத்துவர் உடை ஏன் அணியவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பெண் மருத்துவரின் அனுமதியின்றி வீடியோ எடுத்தார்.
பெண் மருத்துவரின் அனுமதியின்றி வீடியோ எடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மீது, மருத்துவர் ஜன்னத் கீழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் பெயரில் புவனேஷ் ராமை தேடி வந்த போலீசார், நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி , திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.