மயிலாடுதுறை அருகே கடத்தி வரப்பட்ட 1,536 மலிவு மதுபாட்டில்கள் பறிமுதல்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள மாந்தை என்ற இடத்தில் மலிவாகக் கிடைக்கும் மது பாட்டில்களை கடத்துவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், அந்த வழியே வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது 32 அட்டை பெட்டிகளில் 1536 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தின் ஓட்டுநர் ராஜ் என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.