Screenshot form video [Image source : Twitter/@@ASATHATHAli1]
ஹிஜாப் அணிந்திருந்த அரசு பெண் மருத்துவருக்கு மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் பணியில் இருந்த இஸ்லாமிய பெண் மருத்துவர் ஒருவர் ஹிஜாப் அணிந்து இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் என்பவர் , அந்த பெண் மருத்துவரிடம் ஏன் மருத்துவர் உடை அணியாமல் , ஹிஜாப் அணிந்து இருக்குறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
மேலும், மருத்துவரின் அனுமதியின்றி வீடியோ எடுத்துள்ளார். அதனை கண்ட அந்த பெண் மருத்துவரும் வீடியோ எடுத்துள்ளார். இந்த இரு விடீயோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியதை அடுத்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து புவனேஷ் ராமை தேடி வருகின்றனர்.
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…