நாகை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்
தமிழகத்தில் இந்த வருடம் பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகமே ஸ்தம்பித்து போனது. இதில் சென்னை, நாகபட்டினம், கடலூர் போன்ற மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின. இதில் நாகபட்டினம் மாவட்டதிலிலுள்ள வேதாரண்யம் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் பகுதியில் மழை நின்று 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக வேதாரண்யம் சுற்று வட்டார பகுதி விவசாய நிலங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.அந்த பகுதியிலிலுள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் மழைநீர் வடியாமல் தேங்கி பயிர்கள் மூழ்கி அழுகியுள்ளன. இதற்க்கு காரணம் அருகிலுள்ள வடிகால் வாய்க்காலை அரசு தூர் வாராமல் இருந்ததே ஆகும். சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து உரிய இளப்பீடு வழங்க வேண்டும் என்பதே அந்த பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.