நாகபட்டினத்தில் அரசு மருத்துவமனைகளும் மரணத்தின் பின்னனிகளும்
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட சங்கரன்பந்தல் மருத்துவமனை ஆகும். இங்கு சுமார் 24 கிராம மக்களின் மருத்துவ சேவை மையமாக உள்ளது சுமார் 50 வருடங்களாக இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆட்சிகள் மாறினாலும் இந்த மருத்துவ மனைகளின் காட்சிகள் மாறுவதில்லை. இந்த மருத்துவ மனையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகவும் பழடைந்து நிலையில் காணப்படுகின்றன.
உள்ளிருக்கும் இரும்பு மற்றும் சிமெண்ட் செகில்கள் கீழே விழும் நிலையில் ஆபாய காட்சியாகவே காணப்படுகின்றன. இவற்றை மறு சீரமைப்பு செய்யும் அரசு நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட தொகுதி எம்.ஏல்.ஏ கூட இந்த மருத்துவமனையினை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. இந்த மருத்துவமனையில் ஒரு நாளில் நோயாளிகளின் எண்ணிக்கை 500-700 வரை ஆகும் மேலும் இந்த மருத்துவமனையில் மழை காலங்களில் கட்டிடத்தின் மேல் பகுதியில் நீர் கசிந்து நோயாளிகளின் மேல் விழுவதாலும் மருத்துவமனை வராண்டக்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்க்கு ஆளாகி உள்ளன. இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களின் ஒதுக்கப்பட்ட அறைகள் மிகவும் மோசமான நிலைகளில் காணப்படுகிறது.
போதிய மருத்துவர்கள் இரவு நேரங்களில் பணியில் இருப்பது இல்லை. மேலும் இரவு நேரங்களில் பணியற்றக்கூடிய செவிலியார்கள் இரவு நேரங்களில் சிகிச்சைக்காக வரக்கூடிய நோயாளிகளிடம் போதுமான அளவிற்கு மருத்துவ சிகிச்சை செய்யாமலும் சிறிய உடல் ஊவதகளை கூட பெறிய நோய்யாக கற்பனை கட்டி மாயவரம்,திருவாரூர் போன்ற அரசு பெரு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனார். இதனால் நோய்யாளிகள் அரசு சுகாதார நிலையத்தை அவ நம்பிக்கையாக கருத கூடிய நிலை உருவாக்கி உள்ளது அரசு மருத்துவமனையில் ஓர் அங்கமாக கருதப்படுவது. அவசரகால ஊர்தி மிக கடுமையான நோய்யாளிகளை உறிய சிகிச்சைக்காக வெளி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவும் நோய்யாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஓர் ஊர்தியாகும்.
சங்கரன்பந்தல் அரசு சுகாதார நிலையத்தில் சுமார் 12 வருடமாக அவசர கால ஊர்தி பயணற்ற நிலையிலும் மிகவும் சேதமடைந்த நிலையிலும் காணப்படுகிறது. இவற்றை சிரமைத்து தர வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் பொது மக்களின் சார்பாக பல முறை கூறப்பட்டு இருந்த போதிலும் சிரமைத்து தருவதற்கு எந்த விதமான நடவடிக்கையும் செய்து முடிக்கவில்லை. மாவட்ட சுகாதார நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கரன்பந்தல் ஊராட்சியில் உள்ள அரசு சுகாதார நிலையத்தை மறு சிரமைப்பு செய்து தரவும் தரமான கட்டிடங்களையும் பொதுமான மருத்துவர்களையும் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியற்றவும் அவசர ஊர்தியை சிரமைத்து மிண்டும் மக்கள் பயனுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் படி பொது மக்கள் சார்பாக கோரிக்கை வைத்து உள்ளனார்.