ஜனவரி 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை, ஜனவரி 21-ஆம் தேதி வேலை நாள் நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வுக்காக ஜனவரி 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3-ஆம் தேதி விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஜனவரி 21-ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் […]
கடலூர், டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும், தமிழகத்தில் மிக கனமழை தொடரும் என்றும் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட 17 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, தேனி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, […]
கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணை வழங்கினார் முதலமைச்சர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் சுந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா நிர்வாகத்திடம் வழங்கினார். நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சசந்தனக்கட்டைகளை நாகூர் […]
கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்,மதுரையில்,அண்மையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில், 5 ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், இந்த […]
நாகை:கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.அந்த வகையில் நாகை மாவட்டத்தில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,1-9 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்சதீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை,காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.கைதான 13 காரைக்கால் மற்றும் 9 நாகை மீனவர்களிடம் மயிலிட்டி துறைமுகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அடிக்கடி இலங்கை கடற்படையால் தமிழக […]
நாகை நகராட்சி அதிமுக பெண் வேட்பாளர் பெயர் இறந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்ததால் அந்த பெண் வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நாகூர் பட்டினச்சேரி 4-வது வார்டில் அதிமுக சார்பில் அமிர்தவள்ளி( 33) என்பவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவம் வாங்க நாகை நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவருடைய பெயர் […]
நாகை:ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி,ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்து விட்டு,மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். நாகையில் இருந்து நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று கடலுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில்,மீனவர்கள்,ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட இரண்டு படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர்,அரிவாள்,ரப்பர் பைப்,கட்டை உள்ளிட்ட பொருட்களால் மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அதன்பின்னர்,படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி,செல்போன்,மீன்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்து விட்டு,மீனவர்களை […]
நாகை:வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல். நாகை மாவட்டம் கோடியக்கரை கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புஷ்பவனம் மீனவர்கள் மீது இன்று காலை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது புஷ்பவனம் பகுதி மீனவர்களான பன்னீர்செல்வம்,நாகமுத்து,ராஜேந்திரன் ஆகியோர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கினர். ரப்பர் கட்டை,இரும்பு பைப்,அரிவாள் போன்ற ஆயுதங்களால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகவும்,மேலும்,படகில் இருந்த 300 கிலோ மீன்பிடி வலைகள் உள்பட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து […]
நாகை:வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல்பகுதியில் நாட்டுப்படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது புஷ்பவனம் பகுதி மீனவர்களான பன்னீர்செல்வம் , நாகமுத்து,ராஜேந்திரன் ஆகியோர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரப்பர் கட்டை,இரும்பு பைப்,அரிவாள் போன்ற ஆயுதங்களால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகவும்,மேலும்,படகில் இருந்த 300 கிலோ மீன்பிடி வலைகள் உள்பட […]
புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரியில் புதிதாக அரசு தோட்டக்கலை தொடங்கப்பட்டது. வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி 2021-22 ஆம் ஆண்டில் கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டத்தில் […]
நாகை மாவட்டம் நாகூரில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு. நாகை மாவட்ட மக்களின் வாழ்வியல் சூழல், வாழ்க்கை முறை, உணவு, கலை, பண்பாடு, ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது. பண்டைய தமிழர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் ரூ.2 கோடியில் 3.06 ஹெக்டர் பரப்பளவில் பூங்கா அமைக்கப்படும். நெய்தல் பாரம்பரிய பூங்காவில் பனைக்குடில்கள், பவளப்பாறை, முத்துச்சிற்பி […]
மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், மீனவர் ஒருவரின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது. நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப் படகில் நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 28ஆம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது […]
மயிலாடுதுறையில் போராட்டத்தில் ஈடுப்படும் மீனவர்கள் தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்றம் கடல் வளத்தை பாதுகாக்க சுருக்குமடி வலை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 மீனவ கிராமங்கள் சுருக்குமடி வலையை ஆதரித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 17-ஆம் தேதி முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் 2-வது நாளான நேற்று […]