மதுரையில் குப்பைகளை தரம் பிரிக்க மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள்..,
குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்க மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 44ல் கே.கே.நகர் பகுதிகளில் முடிவு செய்யப்பட்டது. புதிய இரண்டு அடுக்கு மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் மாநகராட்சியின் சுகாதாரப் பணிக்கு வழங்கப்பட்டது.இது இரு அடுக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில் நீலம், பச்சை நிறத்தில் 12 குப்பை கூடைகள் உள்ளன.மேலும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தவிர்க்க ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கழிப்பறைகள் கட்டுவதற்கும் நிதி வழங்கப்பட்டது. இவ்வாகனங்களை கமிஷனர் அனீஷ்சேகர் துவக்கி வைத்தார்.