தமிழக எல்லையில் அரிசி கொம்பன்.! சிறப்பு அமர்வு விசாரிக்கும்.! மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
அரிசிக்கொம்பன் யானை பற்றிய வழக்கை சிறப்பு அமர்வு விசாரிக்கும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
தேனி , கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி, பொதுமக்களை தொந்தரவு செய்து வந்த அரிசி கொம்பன் யானையை தமிழக வனத்துறையினர் மயக்க மருந்து கொடுத்து பிடித்துள்ளனர். அதனை நெல்லை மாவட்டம் முண்டாந்துறை புலிகள் காப்பக பகுதி கோதையாறு வனபகுதியில் விட ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த நபர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கில், அரிசி கொம்பன் ஏற்கனவே பழக்கப்பட்ட கேரள மாநிலம் மதிகெட்டான்சோலை வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார்.
இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, தமிழக அரசு பல லட்சம் செலவு செய்து யானையை பிடித்துள்ளனர். இது பற்றி வனத்துறை அதிகாரிகள் தான் உரிய முடிவு எடுக்க வேண்டும் என கூறி வனவிலங்கு நல வாரிய சிறப்பு அமர்வு இதனை விசாரிக்க வேண்டும் என கூறி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.