மதுரையில் காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!
மதுரை மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையில் காதலிக்க மறுத்ததால் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சித்ராதேவியை பாலமுருகன் என்ற வாலிபர் தீவைத்து எரித்தார். இந்நிலையில் தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சித்ராதேவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். சித்ராதேவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்த பாலமுருகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.