மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு டெண்டர் வெளியீடு… விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.!

Madurai AIIMS

மதுரை தோப்பூர் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை அதன் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்து வருகிறது. இது குறித்து மாநில அரசுகள் அவ்வபோது மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அப்போது 2600 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் 82% தொகையை ஜப்பான் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து பெறுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்நிலையில் தற்போது மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கு கட்டுமானபணிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் விருப்பமுள்ள கட்டுமான நிறுவனங்கள் வரும் செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் தங்கள் கட்டுமான பணி, செலவீடு உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்கலாம் என்றும், 33 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்