மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் இராஜாஜி அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்த தான முகாமை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு. ஜவாஹிருல்லாஹ் தொடங்கி வைத்தார்.
இன்று காலை சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து அளித்து துவங்கி வைத்தார் . இதன் ஒருபடியாக மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வீரராகவ ராவ் அவர்களும் முனிச்சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு வழங்கினார்கள்.
சுதந்திரம் வாங்கி தந்த தலைவர்களையும் மிஞ்சியவர் எம்ஜிஆர் என அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம் . மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், கலந்துகொண்டு பேசும்போது, அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்த தலைவர்களை விட, மக்களிடம் அதிகமான பெயரையும் புகழையும் பெற்றவர் எம்ஜிஆர், என்று குறிப்பிட்டார். அதிமுக துவங்கி 5 ஆண்டுகளில், ஆட்சிக்கு வந்த கட்சி என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு, ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக வந்தபிறகு சந்தித்த […]
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள், காளைகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு போட்டியில் விளையாடுவோம் என்ற உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். உறுதிமொழியேற்ற பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து, ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தனர். இதில் தமிழக அமைசர்கள், நாடாளுமன்ற […]
பாலமேட்டில் ஆயிரத்து 2 காளைகளும் ஆயிரத்து 188 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. அரசு விதிகளுக்கு உட்பட்டு தான் போட்டிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். முதலில் கொண்டு வரப்பட்ட 5 கோவில் காளைகளுக்கு அமைச்சர் உதயகுமார் தங்கக் காசு […]
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் நிலையில் உள்ளது மதுரை அலங்காநல்லூர். இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில், உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழா வரும் 16ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி, திருச்சி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் உடற்தகுதி பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன…
மதுரை : மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால் மாடு பிடி வீரர்கள் ஏதேனும் அரசு அடையாள அட்டையை காண்பிக்கலாம் .எனவே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆதார் தேவையில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவிப்பு செய்துள்ளார்…
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் இருந்தால் மட்டுமே மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க இயலும் என விழா கமிட்டி அறிவிப்பு செய்துள்ளது. ஏற்கனவே மத்தியரசு ஆதாரை கட்டாயப்படுத்தும் வேளையில் , ஜல்லிக்கட்டு விழாவில் அமல்படுத்தபடுவது வித்தியாசமான அணுகுமுறையாக உள்ளது.
ஜல்லிக்கட்டு விளையாட்டுவிழா இந்த ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா வருகிற ஜனவரி 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை காண தமிழகம் முழுவதிலிருந்து லட்சகணக்கான மக்கள் வருவார்கள். இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் முதற்கட்ட வேலையாக இன்று கால்கோள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விழாக்குழு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். source : dinasuvadu.com
மத்திய அரசின் சிறப்புத் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை சேர்க்கப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற வாய்ப்பு உருவாகி உள்ளது. இதற்கிடையே, மதுரையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க சாத்தியமான வழித்தடத்தை போக்குவரத்து வல்லுனர் குழு அரசுக்கு யோசனையாக அளித்துள்ளது. அதிலுள்ள உத்தேச வழித்தடங்கள் வருமாறு: மெட்ரோ ரயில் பாதை மேலூரில் தொடங்கி, ஐகோர்ட் கிளை, எம்ஜிஆர் பஸ் ஸ்டாண்ட், நீதிமன்றம், தல்லாகுளம், கோரிப்பாளையம், யானைக்கல், வடக்கு வெளிவீதி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம், திருநகர், […]
மதுரை அருகே ஓட்டுனர் பற்றாகுறையால் லாரி ஓட்டுனர் ஓட்டிய பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் பணிமனையில் இருந்து பேருந்தை இயக்கியவர் லாரி ஓட்டுநராக இருந்த டேனியல் ஆவார். ஒட்டுநர் பற்றாக்குறையால் டேனியல் விளச்சேரி செல்லும் அரசுப் பேருந்தை இயக்கி திருநகர் 7 வது ஸ்டாப் அருகே சென்ற போது மின்கம்பம் மோதி விபத்துக்குள்ளானது.அதிஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். பேருந்தில் பயணம் செய்தவர்கள் பீதியடைந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.இதனால் விபத்து […]
மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.இந்த நிகழ்ச்சியை மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ,மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஒலிம்பிக் தீபம் ஏற்றி, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தொடங்கி வைத்தனர் இதில் 500 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை எம்.ஜி.ஆர் ( மாட்டுத்தாவணி ) பேருந்து நிலையத்திலிருந்து, பெரியார் பேருந்துநிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்துக் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பேருந்தின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பேருந்தின் கண்ணாடி குத்தியதில் ஓட்டுநர் குடியரசு கையில் காயம் ஏற்பட்டது. பயணிகளுடன் பேருந்து சென்றபோது இச்சம்பவம் நடை பெற்றுள்ளது. கிளை மேலாளர் சுந்தர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த ஓட்டுநர் […]
மதுரையில் மாவட்ட கலெக்டருடன் நடந்த சந்தித்தலில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்புகள் மற்றும் விதிமுறைகளை கலந்துரையாடினர். அதன்படி அவனியாபுரத்தில் ஜனவரி 14ஆம் தேதியும்,பாலமேட்டில் 15ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 16ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கூறியுள்ளார். இது காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெறும். இதற்காக 500 காவலர்களும், 10 ஆம்புலன்ஸ், 3 தீ அணைப்பு படைகள் மற்றும் 10 மருத்துவ குழுக்கள் அமைக்க படும் என்று கூறியுள்ளனர். இப்போட்டியில் மொத்தம் 500 எருதுகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பணிமனை தலைமையிடத்தில் ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். போராட்டத்தில் ஈடுபடாத ஊழியர்களால் பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டம் முழுவதும் முடிந்த அளவிற்கு அதிக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மதுரை மாவட்டத்தில் உள்ள 16 பணிமனையில் உள்ள பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளார். கல்வி நிலையங்களுக்கு பள்ளி, கல்லூரி வகுப்புகள் முடிவடையும் நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படும் என்றார். போலீஸ் […]
மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது .இந்நிலையில் சற்று முன்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைவர் தலைமையில் நடைபெற்றது .இறுதியாக இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நடைபெறும் தேதி அறிவித்துள்ளார்.மதுரையில் உள்ள அவனியாபுரத்தில் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறுகின்றது .பாலமேட்டில் ஜனவரி 15ஆம் தேதியும், அலங்காநல்லூரில் ஜனவரி 16 ஆம் தேதியும் நடைபெறுகின்றது .அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் மதுரை ஆட்சியர் வீரராகவராவ் அறிவிப்பு!மேலும் இந்த ஆண்டு ஒரு மணி […]
மதுரை விளக்குத்தூண் அருகே உள்ள தனியார் ஜவுளி கடையில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்து காரணமாக கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. சுமார் 7 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கின்ற பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் MCA பட்டப்படிப்பு இரண்டாமாண்டு பயிலும் மாணவி அமலா இரயிலில் அடிபட்டு பலியானார். மேலும் இறந்த அம்மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.மேலும் அம்மாணவியின் இறந்த பின்புலம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஆங்கில புத்தாண்டு அன்று மதுரையில் அன்னலெட்சுமி என்ற பெண்மணி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரின் சடலத்தை கேட்டு சென்ற அவரது உறவினர்களிடம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டதால் ஊழியர்களுக்கும் இறந்தவரின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஊழியர்கள் ஊழியர்கள் அன்னலெட்சுமியின் சடலத்துக்கு பதிலாக வேறு ஒரு சடலத்தை கொடுத்துள்ளனர். source : dinasuvadu.com
மதுரை மாவட்டம் பொத்தாம்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி கற்பகச் செல்வி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீக்குளித்தார். ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். அதேபோல், மதுரை புது தாமரைப்பட்டியைச் சேர்ந்த அன்னலட்சுமி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் ராஜாஜி அரசு மருத்துவ மனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனைக்குப் பின், மருத்துவமனை ஊழியர்கள் அன்னலட்சுமி உடலுக்குப் பதில் கற்பகச் செல்வி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனை […]