‘ஒரு புதிய கட்சி’ 2019 தேர்தலை சந்திப்போம் பிரபல நடிகர் பேட்டி..!!
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக் , நாடாளும் மக்கள் கட்சி பெயர் மாற்றப்பட்டு புதிதாக உருவாக்கி வருகின்ற தேர்தலில் களம் காண்போம் என்றார்.
மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக் , நாடாளும் மக்கள் கட்சி பெயர் மாற்றப்படுகிறது .அது குறித்து ஆலோசனை செய்து விட்டு இப்போது ஒரு முடிவுக்கு வந்து இருக்கோம். இன்னும் இரண்டு நாட்களில் முடிவு பண்ணிடுவோம்.முக்கியமாக அதுக்குத்தான் நானும் இங்கே வந்து இருக்கேன்.இரண்டு நாட்களில் உங்க எல்லாரையும் அழைத்து முறையாக கட்சின் பெயரை அறிவிப்போம் என்றார்.
நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் கொஞ்சம் மாற்றம் வருகிறது. அதாவது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்று நான் பதித்துள்ளோன் அதில் சில சிக்கல் உள்ளது.எனவே வேற ஒரு பெயரில் மாற்றம் வருகிறது.அதற்க்காக டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் திரும்ப பெயர் பதிவு செய்ய வேண்டி உள்ளது.அதற்கான வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறோம்.
பழைய பெயரை மாற்ற நான் அவசரத்தில் அகில இந்திய அளவில் என்று பெயர் பதிவு செய்து விட்டேன்.அகில இந்திய அளவில் என்றால் அதற்க்கு வேற அர்த்தம் இருக்கிறது.அதுக்குன்னு சில விதிமுறைகள் இருக்கிறது.ஒரு மாநில கட்சியாக இருக்கும் போது அகில இந்திய அளவில் என்று பெயர் இருக்க கூடாது. புதிய கட்சின் பெயர் மிகவும் எளிமையாக இருக்கும் , தலை சுத்துற மாதிரி இருக்காது.நல்ல அர்த்தமுள்ள பெயராக இருக்கும் , மக்களிடம் எளிதில் சென்றடையக் கூடியதாக பெயராக இருக்கும் என்றார்.நம்ம மாநிலத்துக்கு தகுந்த மாதிரி பெயர் இருக்கும். கட்சிக்கு வச்சு இருக்குற பெயர் மிக பொருத்தமாக இருக்கும் நம்முடைய தமிழ்நாட்டுக்கு.அது மட்டுமில்லாமல் புதிய நிர்வாகிகள் நிறைய பேர் இருப்பாங்க பழைய நிர்வாகிகள் தவறு செய்தவர்கள் இருக்க மாட்டங்க. என்றார் நடிகர் கார்த்திக்.
அரசியலுக்கு வந்துட்டா மக்களுக்கு நல்லது செய்யணும்.அரசியலுல இருக்குற நிறைய பேரு நிறையா சொல்லுறாங்க , அவுங்க இஷ்டத்துக்கு வராங்க போறாங்க ஏன் நானே இரண்டே கால் ஆண்டு ஒதுங்கி இருந்தேன்.அதற்க்கு பல காரணங்கள் இருக்கு அதில் எனக்கே வருத்தம் இருந்தது ஏன் இப்படி ஒதுங்கி இருந்ததேன் என்று.என்ன காரணம் இருந்தாலும் நான் ஒதுங்கி இருந்து இருக்க கூடாது.எனவே எல்லாத்தையும் தாண்டி மக்களுக்கு சேவை செய்யணும்னு சாதிக்கணும் , முழு நேர அரசியலில் இருக்கணும் இப்போ திரும்ப புதுசா ஆரம்பிசு இருக்கோம் மக்கள் கஷ்ட படுறாங்க இனியும் பொறுத்து இருக்குறதுல அர்த்தம் இல்ல என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் அரசியலில் பகுதி நேர அரசியல்வாதியாக இருக்க கூடாது.ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு ஆனால் பொதுவானது என்ன ? மக்களுக்கு நன்மை போய் சேரனும் அவளோதான். ஆனால் இங்கே மக்களுக்கு எதுமே முழுமையா போய் சேரல இந்தியா வளருதுனு சொல்லுறாங்க , சீனாவுக்கு அப்பறம் இந்தியா இரண்டாவது இடம்னு சொல்லுறாங்க , இப்போ சீனாவை முந்துதுன்னு சொல்லுறாங்க ஆனா அது ஏதும் உண்மை இல்ல.மதிய அரசு சும்மா சொல்லலாம் GDP அதிகரிச்சு இருக்குனு.வளர்ச்சி மக்களுக்கு போய் செருதாணு பார்க்கணும்.மக்களுக்கு போய் சேருதுன்னு நாம பொதுவா சொல்ல முடியாது அது தவறு.
இன்றைய காலத்தில் மக்கள் நல திட்டம் , மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்கள் மக்களிடம் முழுமையாக போய் சேரல அதுக்கு பல காரணம் சொல்லுறாங்க.அப்படி சொல்லுற காரணம் எதுவும் சரியாய் இல்ல.அது நம்ம எல்லாருக்குமே தெரியும்.மக்களுக்கு நல்ல விசயங்கள் , திட்டங்களை கொண்டு செல்ல கண்டிப்பாக வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் களம் காண்போம் என்றார் நடிகர் கார்த்திக்.
DINASUVADU