மதுரையில் பள்ளி, கல்லூரி வகுப்புகள் முடிவடையும் நேரத்தில் பேருந்துகள் இயக்கம்!
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பணிமனை தலைமையிடத்தில் ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். போராட்டத்தில் ஈடுபடாத ஊழியர்களால் பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டம் முழுவதும் முடிந்த அளவிற்கு அதிக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மதுரை மாவட்டத்தில் உள்ள 16 பணிமனையில் உள்ள பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளார். கல்வி நிலையங்களுக்கு பள்ளி, கல்லூரி வகுப்புகள் முடிவடையும் நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் காலையிலேயே பணிமனைகளுக்கே வந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
அண்ணா தொழிற்சங்க ஊழியர்களை கொண்டு மிகக் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மதுரையில் அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.
source: dinasuvadu.com