Categories: மதுரை

மதுரைக்கு வருமா மெட்ரோ ரயில்! ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் பயன் கிடைக்குமா ?

Published by
Venu

மத்திய அரசின் சிறப்புத் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை சேர்க்கப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற வாய்ப்பு உருவாகி உள்ளது. இதற்கிடையே, மதுரையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க சாத்தியமான வழித்தடத்தை போக்குவரத்து வல்லுனர் குழு அரசுக்கு யோசனையாக அளித்துள்ளது. அதிலுள்ள உத்தேச வழித்தடங்கள் வருமாறு: மெட்ரோ ரயில் பாதை மேலூரில் தொடங்கி, ஐகோர்ட் கிளை, எம்ஜிஆர் பஸ் ஸ்டாண்ட், நீதிமன்றம், தல்லாகுளம், கோரிப்பாளையம், யானைக்கல், வடக்கு வெளிவீதி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம், திருநகர், தோப்பூர் வழியாக திருமங்கலம் வரை அமைக்க வாய்ப்பு உள்ளது.
தேவைப்பட்டால் விமான நிலையத்துக்கும் நீடிக்கலாம். மதுரை நகரின் அகன்ற வீதிகளில் மேம்பாலம் கட்டி அதன் மேல்தளத்திலும், தேவையான இடங்களில் சுரங்கப்பாதையிலும் மெட்ரோ தண்டவாளம் அமைத்துக் கொள்ளலாம். இந்த வழித்தடங்களில் சென்னையைப் போல் படிப்படியாக பாதை அமைத்து நிறைவேற்றலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘மதுரை மாநகர் எல்லை 148 சதுர கி.மீ. பரப்பளவுக்கு விரிவடைந்துள்ளது. மக்கள் தொகை 18 லட்சத்தை தாண்டியது. வெளியூர் மக்கள் தினமும் 3 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
மாநகராட்சி எல்கை மேலும் விரிவடைய வாய்ப்புள்ளது. மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகின்றனர். வாகனங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கிறது.  மாநகரில் தற்போதுள்ள வீதிகளை விஸ்தரிக்க வாய்ப்பில்லை. முக்கிய வீதிகள் அனைத்தும் ஒருவழி பாதையாகி விட்டன. ஆனாலும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகிறது. இந்த நெரிசலில் இருந்து மீள மெட்ரோ ரயில் திட்டமே தீர்வாக இருக்கும். மதுரை ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால்,  மெட்ரோ ரயில் கனவு மோனோவை போல் கலையாது என்று நம்புகிறோம்” என்றனர்.
source: dinasuvadu.com

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago