மதுரை மாவட்டம் பொத்தாம்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி கற்பகச் செல்வி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீக்குளித்தார். ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அதேபோல், மதுரை புது தாமரைப்பட்டியைச் சேர்ந்த அன்னலட்சுமி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் ராஜாஜி அரசு மருத்துவ மனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
பிரேத பரிசோதனைக்குப் பின், மருத்துவமனை ஊழியர்கள் அன்னலட்சுமி உடலுக்குப் பதில் கற்பகச் செல்வி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனை அறியாத அன்னலட்சுமி உறவினர்கள் அந்த சடலத்தை இறுதிச் சடங்கு செய்வதற்காக மயானம் வரை எடுத்துச் சென்றனர்.
அங்கு முகத்தை திறந்து பார்த்தபோதுதான் அன்னலட்சுமி உடலுக்குப் பதில் வேறு உடல் அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிணத்துடன் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு திரும்பிய உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் தலையிட்டு, அன்னலட்சுமி உறவினர்களை சமாதானப்படுத்தினர். தீக்குளித்து இறந்த கற்பகச் செல்வியின் உடலைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, சாலை விபத்தில் இறந்த அன்னலட்சுமியின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தன….
source: dinasuvadu.com
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…