கனிம வளத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவு!

Default Image

கனிம வளத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
மதுரைப் பெருமாள் மலையில் உள்ள சமூக நலக்காடுகளை அழித்து கல்குவாரிகள் அமைக்க தடைவிதிக்கக் கோரி மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அடங்கிய அமர்வு, தமிழகத்தில் எந்தெந்த மலைகள், குன்றுகளில் குவாரிகள் நடத்தப்படுகின்றன? அவற்றில் எத்தனைக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது ? என மாவட்ட வாரியான விரிவான விவரங்கள் அடங்கிய அறிக்கையுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கனிமவளத்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டனர். மேலும் கனிம வளத்துறை ஆணையரை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க ஆணையிட்ட நீதிபதிகள், மதுரை பெருமாள்மலையில் கல் குவாரி அமைப்பதற்கான பணிகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகாளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் …..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்