“அங்கே இடி முழங்குது…” சாமியாடிய மாணவிகள்., மாவட்ட நிர்வாகம் கொடுத்த விளக்கம்.!
மதுரை புத்தக கண்காட்சியில் மாணவிகள், கருப்பசாமி பாடல் பாடப்பட்ட்டபோது சாமியாடிய விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மதுரை : மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு புத்தக கண்காட்சியானது நேற்று தொடங்கியது. மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநாட்டு மையத்தில் நேற்று அமைச்சர் மூர்த்தி இந்த புத்தக கண்காட்சியை தொடங்கிவைத்தார்.
அமைச்சர் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து சென்ற பிறகு, கிராமப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதுரை அரசு இசைக்கல்லூரி சார்பில் கிராமப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சமயத்தில் “அங்கே இடி முழங்குது” என்ற கருப்பசாமி பாடல் பாடப்பட்டது.
அந்த பாடலை இசைக்கலைஞர் பாடியவுடன் அங்கிருந்த சில மாணவிகள் பக்தி மிகுதியில் சாமியாடினர். மாணவிகள் சாமியாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும்,புத்தக கண்காட்சியில் எதற்காக சாமி பாடல் ஒலிபரப்பட்டது என்ற கேள்விகளும் எழுந்தது.
இந்த நிகழ்வு குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த இசை நிகழ்ச்சி மதுரை அரசு இசை கல்லூரி குழுவினரால் நடத்தப்பட்டது. பாடல்கள் கேசட்டில் ஒலிபரப்படவில்லை. இசைக்கலைஞர்கள் அதனை பாடியுள்ளனர். மாணவிகள் உணர்ச்சிவசப்பட்டு சாமியாடியுள்ளனர். அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து சென்ற பிறகு தான் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இசை நிகழ்ச்சியில் “அங்கே இடி முழங்குது” என்ற பாடலை கேட்ட பிறகு மாணவிகள் பக்தியில் சாமியாடிவிட்டனர். இதில் எந்த சர்ச்சையும் இல்லை. முழுக்க முழுக்க வேண்டுமென்றே இந்த பாடல் ஒலிபரப்பப்படவில்லை. கிராமப்புற இசை நிகழ்ச்சியில் இந்த பாடல் இடம்பெற்றுவிட்டது என்று மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, சென்னையில் ஓர் அரசு பள்ளியில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற பெயரில் மகா விஷ்ணு என்ற நபர் முன்ஜென்மம், மாற்றுத்திறனாளிகள் குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை கூறினார். இதற்கு முதலமைச்சர், அமைச்சர் என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு உருவாகி உள்ள இந்த சமயம், புத்தக கண்காட்சியில் மாணவிகள் சாமியாடிய வீடியோ பேசுபொருளாக மாறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…
March 1, 2025
உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?
March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!
March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025