குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு…!!
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் சிக்கி, அங்கு மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் சென்ற கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 14 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த சக்திகலா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
அதேபோல், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி என்பவரும் சிகிச்சை பலனின்றி மாலை வேளையில் உயிரிழந்தார்.
இதனால், தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.