மதுரை மெட்ரோ திட்டப்பணிகளில் மற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதன் திட்ட இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையில் மெட்ரோ ரயில் பணிகள் அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வகுத்த திட்டத்தில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மதுரை மெட்ரோ திட்ட இயக்குனர் அறிவித்துள்ளார்.
அதில், மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையில் 30 கிமீ என வகுக்கப்பட்ட பாதை தற்போது 32 கிமீ ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 5 கிமீ பாதை சுரங்கபாதையாக வகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 ரயில் நிலையங்களாக இருந்தது, 27 ரயில் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது. மதுரை ஜங்க்சன் ரயில் நிலையம், பெரியார் பேருந்து நிலையம் சேர்ந்து ஒரு மெட்ரோ ரயில் நிலையமாகவும்,கோரிப்பாளையம் , மீனாட்சி அம்மன் கோவில் என மொத்தம் 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் சுரங்கபாதையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
அதன் பிறகு இந்த திட்ட பணிகள் முழுதாக தயாரிக்கப்பட்டு அவை வரும் ஜூலை 15ஆம் தேதி அன்று தமிழக அரசுக்கு வழங்கபட உள்ளது . அதன் பிறகு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும், பின்னர், அதற்கான நிதி திரட்டப்பட்டு அதற்கு பிறகு மதுரை மெட்ரோ ரயில் பணிகள் ஆரம்பிக்கப்படும் என திட்ட இயக்குனர் தெரிவித்தார். மேலும், மெட்ரோ சுரங்கபாதைகள் வைகை ஆற்றங்கரை கிழே 10 மீ ஆழத்தில் தான் அமைக்கப்பட உள்ளன. வைகை ஆற்றங்கரை கீழே பாறை தான் இருப்பதால் அதில் எதுவும் பிரச்னை இல்லை எனவும் மெட்ரோ திட்ட இயக்குனர் தெரிவித்தார்.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…