மதுரையில் செப்டம்பர் 6-ம் தேதி முதல் புத்தகக் கண்காட்சி.!

மதுரை : மதுரையில் புத்தக கண்காட்சி செப்.6ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் தல்லாகுள தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பாக, வருகின்ற 06.09.2024 முதல் 16.09.2024 வரையில் புத்தகத் திருவிழா 2024 நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
11 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறும் இந்த புத்தகக் காட்சிக்கு 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது, ” மதுரை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக, பயாசி. ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், நடப்பாண்டிற்கான புத்தக திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இதற்கான முன்னேற்பாடுபணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. புத்தகத் திருவிழாவில் முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல, தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளன.இந்நிலையில், இந்த புத்தகத் திருவிழாவிற்கு வரும் அனைவரும் சுவையான சுகாதாரமான சிற்றுண்டி உணவு வகைகளை உண்டு மகிழ உணவு அரங்குகள் அமைக்கப்படவுள்ளன ” என மாவட்ட ஆட்சிதலைவர் சங்கீதா தெரிவித்திருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025