மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள், காளைகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு போட்டியில் விளையாடுவோம் என்ற உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
உறுதிமொழியேற்ற பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து, ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தனர். இதில் தமிழக அமைசர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கோவில் காளை முதலாவது அவிழ்த்து விட்ட பின்னர் மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள், சீறிப் பாய்ந்து களத்தில் ஓடின. அவற்றை தீரத்துடன் அடக்கிய வீரர்களுக்கு தங்கக் காசு உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. காளையர்களிடம் சிக்காத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
இன்றைய ஜல்லிக்கட்டில் நூற்றுக்கணக்கான காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. இதை அடக்க 1241 வீரர்கள் பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் வரிசையாக களமிறங்கி வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட பல்லாயிரம் மக்கள் அலங்காநல்லூரில் குவிந்துள்ளனர். இதனால், பார்வயாளர் மாடம் நிரம்பி வழிகிறது.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…