உலகமே அதிரும் அலங்காநல்லூர் ஜல்லிகட்டு !விறுவிறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு….

Default Image

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள், காளைகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு போட்டியில் விளையாடுவோம் என்ற உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.Image result for மதுரை  அலங்காநல்லூர் ஜல்லிகட்டு முதல்வர் பழனிசாமி
உறுதிமொழியேற்ற பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து, ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தனர். இதில் தமிழக அமைசர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கோவில் காளை முதலாவது அவிழ்த்து விட்ட பின்னர் மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.Image result for  மதுரை  அலங்காநல்லூர் ஜல்லிகட்டு

வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள், சீறிப் பாய்ந்து களத்தில் ஓடின. அவற்றை தீரத்துடன் அடக்கிய வீரர்களுக்கு தங்கக் காசு உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. காளையர்களிடம் சிக்காத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
இன்றைய ஜல்லிக்கட்டில் நூற்றுக்கணக்கான காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. இதை அடக்க 1241 வீரர்கள் பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் வரிசையாக களமிறங்கி வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட பல்லாயிரம் மக்கள் அலங்காநல்லூரில் குவிந்துள்ளனர். இதனால், பார்வயாளர் மாடம் நிரம்பி வழிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்