மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அறைகளில் அதிரடி சோதனை!
மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அறைகளில் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.சோதனைமாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரம் தொடர்பாக கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று(ஏப்.,19) மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லதுரையிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், இன்று பதிவாளர் சின்னையாவை தங்களது அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து பல்கலையில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அறையில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். இதில் 5 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். பல்கலையில், நிர்மலா தேவிக்கு வழங்கப்பட்ட பணிகள் குறித்து சோதனை நடப்பதாக தெரிகிறது. சோதனையின் போது இருவரும் பல்கலையில்இல்லை.நிர்மலாவிடம் விசாரணைஇந்நிலையில், கைதான நிர்மலா தேவியை 5 நாள் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு சாத்தூர் கோர்ட் அனுமதி வழங்கியது. இதனையடுத்து விருதுநகர் அழைத்து செல்லப்பட்ட அவரிடம், சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.